எபிரேயர் நிருபத்தில் " *பிரவேசித்தல்* "


ஷாலோம் ஸ்டுவர்ட் சிந்தைகள் நிதானங்கள்..

எபிரேயர் நிருபத்தில் " *பிரவேசித்தல்* "

 *பிரவேசித்தல்* என்பது மனுமக்கள் இரட்சிப்பில் தேவனோடு உள்ள செயல்பாடுகளில் மிக முக்கியமான வார்த்தை மற்றும் கிரியை ஆகும்..

ENTERED / ADVENT 
பிரவேசம்...

✨✨✨✨✨✨✨

In the Epistle to the Hebrews, the concept of "entering" refers to the idea of entering into God's rest, which is a metaphor for achieving spiritual peace and complete reliance on Christ, often highlighted in Hebrews chapter 4, where the author emphasizes the importance of not falling short of this rest like the Israelites did in the wilderness; essentially, it means fully accepting and experiencing the salvation offered by Jesus Christ. 

✨✨✨✨✨✨✨

1. பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் பிரவேசம் மிக கவனத்திற்கு உரியது..

 இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் *பிரவேசிப்பார்கள்* . எபிரேயர் 9.6
 இரண்டாங்கூடாரத்தில் பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே *பிரவேசித்து* , அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான். எபிரேயர் 9.7

✨✨✨✨✨✨✨

2. கிறிஸ்துவின் முதல் பிரவேசம் இரட்சிப்புக்கு மிக ஆதாரம் ..

 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் *பிரவேசிக்கச்செய்தபோது* : தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார். எபிரேயர் 1. 6

 ஆகையால் அவர் உலகத்தில் *பிரவேசிக்கும்போது* : பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர். எபிரேயர் 10.5

 பிரதானஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்தஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் *பிரவேசிக்கவில்லை* . எபிரேயர் 9.25

நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் *பிரவேசித்திருக்கிறார்* . எபிரேயர் 6. 20

✨✨✨✨✨✨✨

3. நம்முடைய பிரவேசம் இரட்சிப்புக்கு மிக ஆதாரம்..

ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் *பிரவேசிப்பதற்கு* இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், எபிரேயர் 10. 19

அந்த மார்க்கத்தின்வழியாய்ப் *பிரவேசிப்பதற்கு* அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், எபிரேயர் 10.20

( நானே வாசல்.. ஒருவன் என் வழியாய் உட்பிரவேசித்தால் இரட்சிக்கப்படுவான். யோவான் 10 )

✨✨✨✨✨✨✨

4. நம்முடைய இரட்சிப்பின் பிரவேசம் நித்திய இளைப்பாறுதல்..

ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் *பிரவேசித்தவன்* , தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். எபிரேயர் 4.10

✨✨✨✨✨✨✨

5. அநேகர் இந்த இரட்சிப்பின் பிரவேசம் இயலாமைக்கு காரணம் அவிசுவாசம்..

 ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் *பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று* பார்க்கிறோம எபிரேயர் 3.19

✨✨✨✨✨✨✨

6. கீழ்ப்படியாதவர்கள் பிரவேசிக்க முடியாததற்கு காரணம் தேவ கோபம் 

 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் *பிரவேசிப்பதில்லையென்று* என்னுடைய கோபத்தில் ஆணையிட்டேன் என்றார். 
எபிரேயர் 3. 11

பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் *பிரவேசிப்பதில்லையென்று* அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா? எபிரேயர் 3.18

✨✨✨✨✨✨✨

7. இளைப்பாறுதலில் பிரவேசம் தேவனுடைய வாக்குத்தத்ததம்.

 ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் *பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம்* நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்கு பயந்திருக்கக்கடவோம். எபிரேயர் 4.1

✨✨✨✨✨✨✨

8. இன்னும் அநேகர் பிரவேசிக்க வேண்டியது அவசியம்.

 ஆகையால், சிலர் அதில் *பிரவேசிப்பது* இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும், எபிரேயர் 4. 6

✨✨✨✨✨✨✨

🌺🌺🌺

பிரவேசித்தால் மட்டுமே அழிவில் இருந்து காப்பாற்றப்பட முடியும்..


அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். 1 பேதுரு 3. 20


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 
shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301
TCBA TUTICORIN 3

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA