யோசேப்பின் எலும்புகள் திருச்சபைக்கு நிழல்!!!ஒப்புமை!!!
யோசேப்பின் எலும்புகள் திருச்சபைக்கு நிழல்!!!ஒப்புமை!!!
நிழல்.. Shadow
வேதத்தில் இரண்டு மணவாட்டியை பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். இவர்கள் வாழ்க்கை அழகாக சித்தரிக்கப்பட்டு புதிய ஏற்பாடு சபைக்கு நிழலாக விளங்கினர்கள்..
@ ஏவாள்
ஆதி 2
@ ரெபேக்காள் ஆதி 24
ஒப்புமை.. உருவகம்..
metaphor
சபை வேதத்தில் அநேக ஒப்புமைகள் குறிப்பிடப்படுகிறது..
1. கிறிஸ்துவின் சரீரம்
2. சந்திரன்
3. பண்ணை
4. மாளிகை
5. சத்திரம்
இன்னும் சில உண்டு.
ஆனால் இன்று யோசேப்பின் எலும்புகள் எவ்வாறு சபைக்கு ஒப்புமை என்று சிந்திப்போம்..
யோசேப்பின் எலும்புகள் குறித்து 3 பழைய ஏற்பாடு குறிப்பும் 1 புதிய ஏற்பாடு குறிப்பும் தருகிறேன்..
பழைய ஏற்பாடு குறிப்புகள்..
1. தீர்க்கதரிசனம் அல்லது ஆணை
யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன். ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி.
ஆதியாகமம் 50:24
தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி. யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.
ஆதியாகமம் 50:25
யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.
ஆதியாகமம் 50:26
2. ஆணைக்கு கீழ்ப்படிதல்:
சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரவழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.
யாத்திராகமம் 13:18
மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார், அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.
யாத்திராகமம் 13:19
3. ஆணை நிறைவேறுதல் :
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டு வந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள். அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று.
யோசுவா 24:32
புதிய ஏற்பாடு குறிப்பு :
தேவன் ஜனங்களை சந்திப்பார் என்ற விசுவாசம்..
விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.
எபிரேயர் 11:22
✨✨✨✨✨✨✨✨✨✨
@ முதல் ஆதாம் விலா எலும்பு
ஏவாள் உருவாக காரணம்..
@ இரண்டாம் ஆதாம் கிறிஸ்து விலா பிளக்கப்பட்டு சபை உருவாக காரணம்..
வாசியுங்கள் :
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
ஆதியாகமம் 2:21
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
ஆதியாகமம் 2:22
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
ஆதியாகமம் 2:23
மனுஷி : சபைக்கு நிழல்
@ பஸ்கா பலி கிறிஸ்துவுக்கு ஒப்புமை..
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.
1 கொரிந்தியர் 5:7
பஸ்கா பிரமாணத்தை அல்லது நியமத்தை நாம் சிந்திப்போம்..
மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது,
1. அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
யாத்திராகமம் 12:43
2. பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
யாத்திராகமம் 12:44
3. அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
யாத்திராகமம் 12:45
4. அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும். 5. அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது.
6. அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
யாத்திராகமம் 12:46
சபை நித்தியமானது ஏனென்றால் கிறிஸ்து நித்தியமானவர்..
சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்..
அவனுடைய ( நீதிமான் கிறிஸ்து மட்டுமே ) எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார், அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
சங்கீதம் 34:20
@ பஸ்கா கிறிஸ்து சிலுவையில் நடைபெற்ற தீர்க்கதரிசனம் நிறைவேறுதல் பாருங்கள்..
கிறிஸ்துவின் காலெலும்புகள் முறிக்கப்படவில்லை
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
யோவான் 19:31
அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.
யோவான் 19:32
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
யோவான் 19:33
ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான், உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
யோவான் 19:34
அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது, நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
யோவான் 19:35
அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
யோவான் 19:36
@ எலும்புகள் தேவனுடையசிருஷ்டிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது..
@ இது தேவனுடைய அதிசய கிரியை ..
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
பிரசங்கி 11:5
@ இது தேவனுக்கு மறைவானதில்லை..
நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.
சங்கீதம் 139:15
@ இது கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள ஜீவனை காட்டுகிறது..
நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
எபேசியர் 5:30
@ கிறிஸ்து உயிர்தெழுந்தபின் மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தில் எலும்புகள் இருந்தது..
@ கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்டபோது அவருடைய எலும்புக்கு ஒப்புமையான சபையும் சிலுவையில் அடிக்கப்பட்டது..
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். ஆயினும் நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
கலாத்தியர் 2:20
@ கிறிஸ்துவோடு கூட நாமும் மரித்தோம்..
ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம்மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
ரோமர் 6:8
@ கிறிஸ்துவோடு நாமும் உயிர்த்தெழுந்தோம்..
@ எலும்பு கிறிஸ்துவின் மறு ரூபமான சரீரத்தில் தொடர்கிறது..
நான்தான் என்று அறியும்படி, என்கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள், நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
லூக்கா 24:39
@ நித்தியத்தில் இந்த மறு ரூபமான சரீரம் குறித்து நாம் அறியோம்..
ஆனாலும் சபை அழியாதது..
நித்தியமானது..
காரணம் கிறிஸ்து..
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது. அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
2 தீமோத்தேயு 1:10
சபை இரண்டாம்
யோசேப்பாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நிழல்..
God Bless the readers and scribe
TCBA TUTICORIN 628 003
Comments
Post a Comment