இரட்சிப்பின் வளங்கள் 4 ✨✨✨✨✨✨✨ பழைய ஏற்பாட்டில் 3 வேலைக்காரர்கள் பணி பரிசுத்த ஆவியானவரின் 3 விசேஷத்த பணிகளுக்கு ஒப்புமை...
SHALOM STEWARD
BIBLICAL REVELATION
இரட்சிப்பின் வளங்கள் 4
✨✨✨✨✨✨✨
பழைய ஏற்பாட்டில் 3 வேலைக்காரர்கள் பணி பரிசுத்த ஆவியானவரின் 3 விசேஷத்த பணிகளுக்கு ஒப்புமை
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌺 பரிசுத்த ஆவியானவர் இரட்சிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார்..
🌺 பரிசுத்த ஆவியானவர் செயல்கள் வேதம் முழுவதும் காணலாம்.
🌺 ஆதியாகமத்தில் சில ஒப்புமைகள் மிக கவனத்திற்குரியது.
1. ஆபிரகாம்... பிதாவாகிய தேவன்
2. ஈசாக்கு.. குமாரனாகிய தேவன்
3. ரெபேக்காள்... திருச்சபை
4.ஊழியக்காரன்..
பரிசுத்த ஆவியாகிய தேவன்..
🌺 வேதத்தில் பரிசுத்த ஆவியானவர் ஊழியக்காரன் என்கிற நிலையில் மூன்று இடங்களில் காண்கிறோம்.
1. ஆபிரகாமின் ஊழியக்காரன்
2. போவாஸின் ஊழியக்காரன்
3. அகாஸ்வேருவின்
ஊழியக்காரன்
✨✨✨✨✨✨✨
1. ஆபிரகாமின் ஊழியக்காரன்
அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் *ஊழியக்காரனை* நோக்கி:
நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்.
நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான்.
ஆதியாகமம் 24:2-4
சத்தியம் :
ஆபிரகாமின் ஊழியக்காரன் தன் குமாரனுக்கு மணவாட்டி தேட அனுப்பப்படுகிறார்..
அப்படியே..
பரிசுத்த ஆவியானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மணவாட்டி தேட அனுப்பப்பட்டார்..
( பரிசுத்த ஆவியானவர் ) அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16:11
✨✨✨✨✨✨✨
2.போவாஸின் ஊழியக்காரன்
பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் *வேலைக்காரனை* நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடே கூடவந்த மோவாபிய பெண்பிள்ளை.
அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள். காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள். இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றாள்.
அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள். பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு.
ரூத் 2:5-8
சத்தியம் :
போவாஸின் ஊழியக்காரன் போவாசுக்கு மணவாட்டியாகிய ரூத்தை அறிமுகம் செய்கிறான்..
அப்படியே..
பரிசுத்த ஆவியானவர் மணவாட்டியை குமாரனுக்கு அறிமுகம் செய்கிறார்.
அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
அப்போஸ்தலர் 10:42-44
✨✨✨✨✨✨
3. அகாஸ்வேருவின்
ஊழியக்காரன்
ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற *யேகாயின் வசத்தில்*
( ஊழியக்காரன் ) ஒப்புவிக்கப்பட்டாள்.
அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினாலே, அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது. ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டுக் கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
எஸ்தர் 2:8-9
சத்தியம் :
ஊழியக்காரன் யேகாய் மண வாட்டி எஸ்தரை ராஜாவுக்கு முன் கொண்டு நிறுத்துகிறார்..
அப்படியே..
பரிசுத்த ஆவியானவர் சபையாகிய மணவாட்டியை குமாரனுக்கு முன் நிறுத்துவார்..
கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர்
( பரிசுத்த ஆவியானவர் ) எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
2 கொரிந்தியர் 4:14
✨✨✨✨✨✨
Truth Summary :
Holy Spirit goes after the sinners, seperates such for gospel and introduces to the world such the savior, then the church is prepared and presented the Lord without any spot or wrinkle..
உண்மைச் சுருக்கம்:
பரிசுத்த ஆவியானவர் பாவிகளைப் பின்தொடர்ந்து, நற்செய்திக்காகப் பிரித்து, அத்தகைய மீட்பரை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறார், பின்னர் சபை ஆயத்தம் செய்யப்பட்டு எந்த பழுதும் குறையும் இல்லாமல் பிதாவின் முன் நிறுத்துகிறார் .
✨✨✨✨✨✨
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Shalomjjj@gmail.com
Whatsapp :
+91 9965050301
Comments
Post a Comment