இரட்சிப்பின் வளங்கள் பகுதி 3✨✨✨✨✨✨✨தமக்கு முன் நிறுத்த...TO PRESENT BEFORE HIM
SHALOM STEWARD
BIBLICAL REVELATION
இரட்சிப்பின் வளங்கள் பகுதி 3
✨✨✨✨✨✨✨
தமக்கு முன் நிறுத்த...
TO PRESENT BEFORE HIM
✨✨✨✨✨✨✨
✨ விசுவாசிகளாகிய நம்மை தனியாகவும் சபையாகவும் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக கொண்டு போய் நிறுத்துவதே கிறிஸ்துவினுடைய செயலாகும்.
✨ இதற்கு உதவி செய்பவர் பரிசுத்த ஆவியானவர்..
✨ TO PRESENT US INDIVIDUALLY AND AS A CHURCH BEFORE GOD IS THE MAIN OBJECTIVE OF SALVATION.
✨ THAT IS EXECUTED BY THE LORD JESUS CHRIST WITH THE HELP OF HOLY SPIRIT..
✨✨✨✨✨✨✨
🌺 இந்த நிகழ்வு எவ்வாறு திரித்துவ தேவன் நிறைவேற்றுகிறார் ?
1. கிறிஸ்து நம்மை நிறுத்துகிறார்..
....கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் *தமக்குமுன்* *நிறுத்திக்கொள்வதற்கும்* தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
எபேசியர் 5:27
2. ஆவியானவர் நம்மை நிறுத்துகிறார்..
கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் *தமக்குமுன்பாக* *நிறுத்துவாரென்று* அறிந்திருக்கிறோம்.
2 கொரிந்தியர் 4:14
3. தேவன் நம்மை நிறுத்துகிறார்..
முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் *தமக்கு முன்* *நிறுத்தும்படியாக* அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
கொலோசெயர் 1:21
✨✨✨✨✨✨✨
🌺 இந்த நிகழ்வை சபை எவ்வாறு நிறைவேற்றுகிறது?
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக *நிறத்தும்படிக்கு* , அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
கொலோசெயர் 1:28-29
🌺 இந்த நிகழ்வை விசுவாசி எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?
நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக *நிறுத்தும்படி* ஜாக்கிரதையாயிரு.
2 தீமோத்தேயு 2:15
✨✨✨✨✨✨✨
🌺 நாம் அல்ல... அவரே நிறுத்துகிறார்!!!
வழுவாதபடி உங்களை காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை *மாசற்றவர்களாய் நிறுத்தவும்* வல்லமையுள்ளவரும்
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
யூதா 1:25
God bless the reader and the scribe..
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
Comments
Post a Comment