EXODUS TV அருளுரை துளிகள் ஆராதனை ஆயத்த சிந்தை..WORSHIP PREPARATION THOUGHT.. தெரிவிக்கும் மரணம்.. PROCLAIM THE LORD'S DEATH..


ஆராதனை சிந்தை..
WORSHIP THOUGHT..

வேதத்தின் படி சகோதர சபையின் ஆராதனை 3 பகுதிகளை உளதாக்கியது

1. கூடி வருதல் 
meeting together 

 உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்கு கட்டளைகொடுக்கிறேன். நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 11:17

2. அப்பம் பிட்குதல் breaking of bread 

 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
அப்போஸ்தலர் 2. 46

3. கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறுதல் 
 Remembering Lord's death 

நினைவு கூர்ந்து தெரிவிக்கும் மரணம்..
REMEMBERING AND PROCLAIMING THE LORD'S DEATH..

தியான வசனம் :

நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, 
1 கொரிந்தியர் 11:23

ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 
1 கொரிந்தியர் 11:24

போஐனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 
1 கொரிந்தியர் 11:25

 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 11:26

For whenever you eat this bread and drink this cup, you proclaim the Lord's death until he comes.

பொதுவாக மரணம் சரீர மரணம் என்றும் ஆவிக்குரிய மரணம் என்றும் வேதம் மட்டுமே கூறுகிறது..

மரணத்தின் பயங்கரங்கள் ஏராளம்..
வேதம் மட்டுமே இந்த மரணத்தின் வேதனைகளை வெளிப்படுத்துகிறது

1. மரண இருள் யோபு 3:5, 16:16, 24:17
2. மரண அந்தகராமுமான தேசம் யோபு 10:21
3. மரண இருளின் வாசல்கள் யோபு 38:17
4. மரண ஆயுதங்கள் சங் 7:13
5. மரண வாசல்கள் சங் 9:13, 107:18
6. மரண நித்திரை சங் 13:3
7. மரணக் கட்டுகள் சங் 18:4, 116:3
8. மரணக் கண்ணிகள் சங் 18:5, நீதி 13:14, 14:27
9. மரணத்தூள் சங் 22:15
10. மரண இருளின் பள்ளத்தாக்கு சங் 23:4
11. மரண அறைகள் நீதி 7:27
12. மரண தூதர் நீதி 16:14
13. மரண நாள் பிர 7:1, 8:8
14. மரண உடன்படிக்கை ஏசாயா 28:15, 28:18
15. மரண வழிகள் எரேமியா 21:8
16. மரண ஆக்கினை எரேமியா 26:11, 26:16
17. மரண இருளின் திசை மத் 4:15

ஆராதனை மரணத்தில் இருந்து எழுப்பப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் இணைந்திருக்கும் திருச்சபை நினைவு கூர்ந்து தெரிவிக்கும் கர்த்தராகிய கிறிஸ்துவின் மரணமே ஆகும்..

இந்த பயங்கர கொடூர மரணத்தை அழியாமையைத் தரித்திருக்கும் கர்த்தர் எவ்வாறு கையாண்டர்?

யோவான் 12:1-3 வசனங்கள்..

மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட லாசரு கலந்து கொண்ட ஆராதனை :

பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். 
அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள், மார்த்தாள் பணிவிடை செய்தாள், லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். 
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டு வந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள், அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. 
யோவான் 12:1-3

கிறிஸ்துவும் மரணமும் :

1. மரணத்தை ருசி பார்த்தார்..
TASTED..

என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு..

2. மரணத்தை உத்தரித்தார்..
SUFFERED..

 தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
எபிரேயர் 2:9

3. மரணத்தை அழித்தார்..
ABOLISHED..

 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
எபிரேயர் 2:14

4. மரணத்தை பரிகரித்தார்..
DESTROYED 

 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது. அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
2 தீமோத்தேயு 1:10

5. மரணத்தை ஜெயமாக விழுங்குவார்..
SWALLOWED VICTORIOUSLY 

அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார், கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார், கர்த்தரே இதைச் சொன்னார்.
ஏசாயா 25:8

ஆராதனை சிந்தை :

கிறிஸ்துவின் மரணத்தை
நினைவு கூர்ந்து 
 தெரிவிக்கிறோம்..

நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, 
ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 
போஐனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 
1 கொரிந்தியர் 11:23-26

LET US REMEMBER AND PROCLAIM LORD'S DEATH WITH BIBLICAL UNDERSTANDING, WORTHILY AND DISCERNMENT..

TCBA TUTICORIN 3
Shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA