START YOUR DAY WITH JESUS கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை *நீ பலங்கொண்டு திடமனதாயிரு..*


START YOUR DAY WITH JESUS 
கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை 

 *நீ பலங்கொண்டு திடமனதாயிரு..* 

IT IS HIS PROMISE..
இது தேவனுடைய வாக்குத்தத்தம் 
-----------------------
 *பலங்கொண்டு திடமனதாயிரு.* இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். 
யோசுவா 1:6

IT IS OUR PRACTICE ..
இது நம்முடைய செயல்முறை..
-----------------------
என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் *பலங்கொண்டு திடமனதாயிரு.* நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. 
யோசுவா 1:7

IT IS HIS PRESENCE..
இது தேவனுடைய பிரசன்னம் 
------------------------
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? *பலங்கொண்டு திடமனதாயிரு.* திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். 
யோசுவா 1:9

IT IS PEOPLE'S PERMISSION..
இது ஜனங்களின் ஒப்புதல் 
-----------------------------------
நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம். உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக. 
நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன். *பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும்* என்றார்கள். 
யோசுவா 1:17-18
-----------------------------------

@ மோசேயின் தலைமத்துவம் செங்கடலாகிய அடிமைத்தனத்தை அவசரமாக கடந்து இரட்சிப்பை பெற்றுக்கொள்ள உதவி செய்ததற்கு ஒப்புமை..யாத் 14

@ யோசுவாவின் தலைமத்துவம் யோர்தானாகிய சுயாதீனத்தின் வழியாக திட்டமிட்டு சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள உதவி செய்ததற்கு ஒப்புமை.. யோசுவா 4

# இரட்சிப்பும் சுதந்தரமாகுதலும் இணைந்தே செயல்படும்..

 இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
அப்போஸ்தலர் 20:32

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com 
WhatsApp 
91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA