SHALOM STEWARD CHRISTIAN PRACTICES LESSONS..வஞ்சிக்காதிருங்கள்..வஞ்சிக்கப்படாதிருங்கள்..DO NOT DECEIVE..DO NOT BE DECEIVED..
SHALOM STEWARD CHRISTIAN PRACTICES LESSONS..
வஞ்சிக்காதிருங்கள்..
வஞ்சிக்கப்படாதிருங்கள்..
DO NOT DECEIVE..
DO NOT BE DECEIVED..
வஞ்சித்தல் என்பதின் சரியான அர்த்தம்..
to persuade someone that something false is the truth, or to keep the truth hidden from someone for your own advantage ..
பொய்யான ஒன்று உண்மை என்று ஒருவரை வற்புறுத்துவது அல்லது உங்கள் சொந்த நன்மைக்காக ஒருவரிடமிருந்து உண்மையை மறைத்து வைப்பது...
தியான வசனங்கள் :
வஞ்சிக்காதிருங்கள்...
எங்களுக்கு இடங்கொடுங்கள். நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை.
2 கொரிந்தியர் 7. 2
வஞ்சிக்கப்படாதிருங்கள்..
பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
1 யோவான் 3. 7
---------------------------------
1. வஞ்சித்தல் பாவத்தின் பிறப்பிடம்..
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.
ரோமர் 7. 11
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரியை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
ஆதியாகமம் 3.13
வாசியுங்கள் :
யோசுவா 7:11, உபாகமம் 11:16
2. வஞ்சித்தல் விசுவாசிகளின் பரிசுத்தமாகுதலுக்கும் தடை..
ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் 11.3
😌😌😌😌😌😌😌😌😌😌
வஞ்சிக்காதிருங்கள்..
A. முதலாவது நீங்கள் உங்களையே வஞ்சிக்காதிருங்கள்..
1. நீங்கள் மட்டுமே பரிசுத்தவான் என்றுகூறி !!"
நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 யோவான் 1. 8
2. நீங்கள் மட்டுமே தேவ பக்தி உள்ளவர்கள் என்று எண்ணி !!!
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
யாக்கோபு 1. 26
3. நீங்கள் அனுதினமும் திரு வசனம் கேட்டு அதின்படி செய்யாமல் !!!
அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
யாக்கோபு 1. 22
4. நீங்கள் உங்களை ஞானியென்று எண்ணி !!!
ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக. இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
1 கொரிந்தியர் 3. 18
5. நீங்கள் உங்களை ஒரு பொருட்டென்று எண்ணி !!!
ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
கலாத்தியர் 6. 3
6. நீங்கள் உங்கள் மாம்ச சிந்தையில் வீணாய் இறுமாப்பு கொண்டு !!!
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புப்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
கொலோசெயர் 2.19
B. இரண்டாவது உங்கள் சகோதரனை வஞ்சிக்காதிருங்கள்..
இந்த விஷயத்தில்
( மோக இச்சை ) ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும். முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
1 தெசலோனிக்கேயர் 4. 6
C. மூன்றாவது தனக்கடுத்தவனை வஞ்சிக்காதிருங்கள்!!!
அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
நீதிமொழிகள் 26. 19
D. நான்காவது தேவனை வஞ்சிக்காதிருங்கள்..
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கையிலுந்தானே.
மல்கியா 3. 8
E. ஐந்தாவது கர்த்தருடைய பங்கை வஞ்சிக்காதிருங்கள்..
பேதுரு அவனை நோக்கி; அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
அப்போஸ்தலர் 5. 3-4
😌😌😌😌😌😌😌😌😌😌
வஞ்சிக்கப்படாதிருங்கள்..
1. தந்திரமான போதகத்தினால் !!!
நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
எபேசியர் 4. 14
2. நானே கிறிஸ்து என்பவர்களால் !!!
ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
மத்தேயு 24. 5
3.கள்ளத்தீர்க்கதரிசிகளால் !!!
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
மத்தேயு 24.5..
மாற்கு 13:22
4. தவறான ஊழியர்களால் !!!
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
ரோமர் 16.18
😌😌😌😌😌😌😌😌😌😌
சிந்திப்போம்!!!
வஞ்சிக்கிறவர்களை நிதானித்து அறிய முடியாத அல்லது Biblical Understanding இல்லாத தலைமத்துவம் சபையில் இருக்கிறார்கள் என்கிற குறை நீங்க வேண்டும்!!!
ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
வெளிப்படுத்தினத விசேஷம்
2. 20
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
What'sapp
91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Comments
Post a Comment