நித்தியத்தில் நீதி மட்டுமே வாசம் செய்யும்!!!! RIGHTEOUSNESS IN GOD'S GOVERNMENT!!!!
நித்தியத்தில் நீதி மட்டுமே வாசம் செய்யும்!!!!
RIGHTEOUSNESS IN GOD'S GOVERNMENT!!!!
தியான வசனம் :
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே *நீதி வாசமாயிருக்கும்* புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
2 பேதுரு 3:13
@ அப் பவுல் தன் நிருபங்களில் நித்திய ஜீவனையும் தேவனுடைய கிருபையையும் விசுவாசிகள் கிருபையின்படி வாழ்தலையும் முக்கியப்படுத்துகிறார்..
@ அப் யோவான் தன் நிருபங்களில் நித்திய ஜீவனையும் தேவனுடைய அன்பையும் விசுவாசிகள் அன்பின்படி வாழ்தலையும் முக்கியப்படுத்துகிறார்..
@ அப் பேதுரு தன் நிருபங்களில் நித்திய ஜீவனையும் தேவனுடைய நீதியையும் விசுவாசிகள் நீதியின்படி வாழ்தலையும் முக்கியப்படுத்துகிறார்..
இன்றைக்கு!!!
பேதுரு நிருபங்களில் நீதி வாசம் ( Dwelling of Righteousness ) குறித்து சிந்திப்போம்..
1. நாம் நீதிக்கு பிழைக்க கிறிஸ்துவின் அர்ப்பணம்!!!
அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்பவித்தார்.
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
1 பேதுரு 2:23-24
2. கர்த்தர் நீதிமான்களையே நோக்குகிறார்!!!
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது. தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
1 பேதுரு 3:12
3. நீதியே நம்மை பாக்கியவான்க ளாக மாற்றுகிறது!!!!
நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,
1 பேதுரு 3:14
4. நீதிமான் இரட்சிப்பின் அவசியம் இங்கே பேதுரு மிகைப்படுத்துகிறார்!!!!
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
1 பேதுரு 4:18
5. தேவனுடைய நீதியும் நம் அருமையான விசுவாசமும் இணைகிறது மிக ஆச்சரியம்!!!
நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:
2 பேதுரு 1:1
6. தேவனுடைய நீதி மட்டுமே சுவிசேஷத்திற்கு ஆதாரம்!!!
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி,
2 பேதுரு 2:5
7. தேவனுடைய நீதியும் தேவனுடைய இரட்சிப்பும் தேவனுடைய அநந்த ஞானம்!!!
நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க,
2 பேதுரு 2:8
8. நீதியின் மார்க்கமும் பரிசுத்த கற்பனையும் இணைய மறுத்தால் எது நலம்?
அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
2 பேதுரு 2:21
அப்பொழுது நீதி வாசம் செய்யும் நித்தியத்தில்!!!
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
2 பேதுரு 3:13
வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.
நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
ஏசாயா 32:16-17
ஆகையால், பிரியமானவர்களே!!!
இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
2 பேதுரு 3:14
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment