இரட்சிப்பின் வளங்கள் Resources of Salvation...


இரட்சிப்பின் வளங்கள் 
Resources of Salvation...

இரண்டு கேள்விகள் அநேக விசுவாசிகள் மனதில் கொண்டுள்ளனர்.

1. இரட்சிப்பு அல்லது விசுவாசம் ஒரே நிகழ்வா? அல்லது தொடர் செயலா?
Is Salvation or Faith a definite act or a continuous process?

2. என்னுடைய இரட்சிப்பின் நாள் அல்லது நான் மறுபடி பிறந்தநாள் ஒரு குறிப்பிட்ட நாளா? அதை ஞாபகம் வைத்தல் அவசியமா?
Must I know or remember the date of my salvation or date of Born Again?

மனுக்குல இரட்சிப்பின் அடிப்படையில் உலகத்தில் இரண்டு விதமான ஜனங்களை வேதம் பிரித்து காட்டுகிறது..
அதாவது சிலுவை இரண்டு ஜனங்களை மட்டுமே காண்கிறது..

1. கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள்                            ( believers )
2. கர்த்தரை ஏற்றுக்கொள்ளதவர்கள்..                      ( unbelievers )

இது தேவனுடைய பார்வையில்
 ( God's perspective ) Elect & Reprobate அதாவது தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்றும் புறக்கணிக்கப்பட்டவர்கள்
 ( தள்ளப்பட்டவர்கள் ) ஆகும்..
 ( தேவனுடைய sovereignty பேரறிவு யாரும் அறிய முடியாது )


அப் பவுல் இந்த இரட்சிப்பின் ஆழத்தை உணரும்போது இன்னும் சில நிலைகளில் ஜனங்களை 
      ( மனுஷர்களை ) பிரிக்கிறார்..

1. ஜென்ம சுபாவ மனுஷன் 1 கொரி 2:14 ( unbeliever )
2. ஆவிக்குரிய மனுஷன் 2:15
 ( spiritual believer )
3. மாம்சத்துக்குரிய மனுஷன் 3:1,2
 ( fleshy believer )

இன்னோரு சாரார் நம் சபைகளில் காணப்படுகிறார்கள்.

அவர்களை இவ்வாறு வேறு படுத்துகிறார்கள்..

Professing Christians 
Pretending Christians 
( இவர்கள் விசுவாசிகள் அல்ல )
They are not come under believers category..
தங்களை கிறிஸ்தவர்கள் என 
" அழைக்கும் கிறிஸ்தவர்கள் "
" நடிக்கும் அல்லது பாசாங்கு செய்யும் கிறிஸ்தவர்கள் "

Not all those who profess Christianity necessarily actually adhere to its beliefs. 
கிறிஸ்தவத்தை பிரகடனப்படுத்தும் எல்லாரும் கிறிஸ்தவத்தின் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை..

This has led some to adopt the term "professing Christians" for those who outwardly declare their belief while not actually adhering to it. 
இவர்களுக்காக அதாவது விசுவாசத்தை பற்றிக்கொள்ளாத இவர்களை மாய்மால கிறிஸ்தவர்கள் என்கிறார்கள்..

 In that case "professing Christians" are contrasted with "true Christians", meaning those who practice their belief as well as declaring it.
ஆகவே உண்மையான விசுவாசிகள் மற்றும் மாய்மால கிறிஸ்தவர்கள் என்கிற பிரிவு விசுவாசத்தை அறிக்கையிடுதல் மற்றும் செயல்பாடு
 ( profess and practise ) அடிப்படையில் சாத்தியமாகிறது..

 True believers (in this usage) may also actually profess and practise their faith.
உண்மை விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்து கிரியைகளில் காண்பிப்பார்கள்..

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

விசுவாசமும் அறிக்கையும் 
BELIEF and CONFESSION 

ஒரு மனிதன் தன்னுடைய பாவ நிலையையும் தன்னுடைய தகுதியின்மையையும் உள்ளத்தில் உணர்த்தப்பட்டு உணர்வடையும்போது,  இந்த செயல் பரிசுத்த ஆவியின் செயலாக மட்டும் இருப்பதால், அவன் தேவனுடைய ராஜ்யத்திற்கு தூரமானவன் அல்ல. 

ஆத்தும ஆதாயம் செய்பவர்களுடைய பணி எதுவென்றால் அல்லது இப்பொழுது கத்தராகிய இயேசு கிறிஸ்துவை இவர்களுக்கு எவ்வாறு அறிமுகம் செய்வது என்னவென்றால் 

" அவராலே அன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை இவர் தம்மை விசுவாசிக்கிற எவருக்கும் இரட்சிப்பை அருளுகிறார்"  என்ற சத்தியத்தை மட்டும் அறிவித்தல் அவசியம். 
இப்பொழுது பரிசுத்த ஆவியின் உணர்த்துதலும் மனிதனுடைய உணர்த்தப்படுதலும் இணைந்து இரட்சிப்பை உறுதிப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவில் விசுவாசிப்பது என்றால் என்ன? என்பதை வேதம் ஒரு மனிதன் விசுவாசிப்பதை பல நிலைகளில் சுட்டிக் காட்டுகிறது. 

1. நோக்கி பார்ப்பது 
Looking with belief is salvation attitude..

என்னை நோக்கிப் பாருங்கள் பூமியின் எல்லை எங்கும் உள்ளவர்களே என்று வாசிக்கிறோம்.

 பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள், அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை.
ஏசாயா 45:22

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். 
யோவான் 3:14

தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 
யோவான் 3:15

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 
யோவான் 3:16

2. தொடுதல் 
Touching with belief is salvation attitude..

லூக்கா 8 44 
வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள்..

 அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
லூக்கா 8:44

1 யோவான் 1:1
ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
1 யோவான் 1:1

3.  ஏற்றுக் கொள்ளுதல்..
Receiving with faith is salvation attitude..

 யோவான் 1:12

 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12

 விசுவாசம் உள்ளவர்களாய் ஏற்றுக்கொள்ளுதல். 

4.  புசித்தல் குடித்தல் 
Eating and Drinking with belief is salvation attitude..

பசியுள்ள தாகம் உள்ள ஆத்மா விசுவாசத்தோடு ஜீவ மன்னாவை புசித்தல், ஜீவ தண்ணீரை குடித்தல் இரட்சிப்புக்கு ஒப்புமை.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 
யோவான் 6:53

என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். 
யோவான் 6:54

 5.பிரவேசித்தல்
Entering the gate with belief is salvation attitude..

 ஒருவன் உட்பிரவேசித்தால் இரட்சிக்கப்படுவான். 

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 10:9

6. கிறிஸ்துவின் அதிகாரத்தை விசுவாசத்துடன் கேட்கிறது  
Asking or Requesting Christ's authority with belief is salvation attitude..

மத்தேயு 8:5-13

 நூற்றுக்கு அதிபதி நான் பார்த்திரன் அல்ல..
ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்.. அதிகாரத்தை பற்றி நூற்றுக்கு அதிபதி பேசுகிறான். 

7. மறுபடி பிறத்தல்..
Accepting the message of Born Again is salvation attitude..

யோவான் 3
 ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான். 
ஆவினாலும் ஜலத்தினாலும் பிறப்பது இரட்சிப்பு. 

8. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கிறிஸ்து என்று அறிக்கை செய்தல் ரோமர் 10 9 10.
Declaring Jesus Christ is Lord is salvation attitude..

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 
ரோமர் 10:9

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 
ரோமர் 10:10

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

பரிசுத்த ஆவியானவர் செயல்கள் நாம் சிந்திப்பதற்கு மேலானவைகள்..

 ஒரு மனிதனை கர்த்தரிடம் கொண்டு வர பல முறைகளை பரிசுத்த ஆவியானவர் கையாளுகிறார்..
 இரண்டு இரட்சிப்பின் சாட்சிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டியது அவசியம் அல்ல.
ஏனென்றால் மனிதர்கள் ஒரே மாதிரியான படைப்பும் அல்ல..
ஒரே மாதிரியான பாவ சூழலும் அல்ல சில வேதத்தின் மனிதர்களையும் அவர்கள் ஆண்டவரை பற்றிக் கொண்டதையும் சிந்திக்கலாம்.

 இரட்சிப்பின் கதாபாத்திரங்கள் :

1.யாக்கோபு 

தேவனோடு போராடி மேற்கொண்டான் இந்த சம்பவத்தில் விசுவாசிப்பது என்பது தன் பலத்தினால் தேவனோடு போராடினான் விசுவாசிப்பது என்பது நிபந்தனையற்ற அர்ப்பணம். 

2.ரூத் 

ரூத் 3 ம் அதிகாரம்..
ஒருவரிடம் அதாவது கிறிஸ்துவிடம் சுதந்திரம் பெறுவது இரட்சிப்பு ஆகும்.

போவாஸ் சுதந்திரத்தை ரூத் பெறுகிறாள்.. ரூத் புத்தகத்தின் கருப்பொருள்..
திருமணத்தின்போது மணமகன் மணமகள் unconditional surrender . 

3.  நாகமான்..

2 ராஜாக்கள் 5, 2:தெச 1:8-10

சீரிய ராஜா படைத்தலைவன் நாகமான். மகா பராக்கிரமசாலியான இவன் குஷ்டரோகி 
சிரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண் வந்தாள் . 
நாகமான். 

சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான், அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார், மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான். 
2 இராஜாக்கள் 5:1

சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைப்பிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள், அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். 
2 இராஜாக்கள் 5:2

அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும், அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள். 
2 இராஜாக்கள் 5:3

அப்பொழுது அவள் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தாள். 
2 இராஜாக்கள் 5:4

அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது நீ போகலாம், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிருபம் தருகிறேன் என்றான், அப்படியே அவன் தன் கையிலே பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறை பொன்னையும், பத்து மாற்றுவஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய், 
2 இராஜாக்கள் 5:5

இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான், நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது. 
2 இராஜாக்கள் 5:6

இஸ்ரவேலனின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கிவிடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் என்ன தேவனா? இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான். 
2 இராஜாக்கள் 5:7

இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான். 
2 இராஜாக்கள் 5:8

அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான். 
2 இராஜாக்கள் 5:9

4.  லாசரு..

யோவான் 11
மரணத்திலிருந்து எழுப்பப்பட்டான்
 லாசரு அக்கிரமங்கள் பாவங்கள் மரித்ததற்கு ஒப்புமை..
லாசருவே வெளியே வா..
அநேகருக்கு விசுவாசம் என்பது தேவனுடைய ஜீவன் அளிக்கும் வார்த்தைக்கு கீழ்ப்படிவதே இரட்சிப்பு ஆகும். 

5. இளைய குமாரன்..

லூக்கா 15:11-24
 நான் எழுந்து என் தகப்பன் வீட்டுக்குப் போவேன் என் குமாரனாகிய இவன் மறுத்தான் திரும்பவும் உயிர்தான் காணாமல் போனான் திரும்பவும் காணப்பட்டான்.

6. தர்சு பட்டணத்து சவுல்..

அப் 9:3-4
தன்னுடைய தீய வழியின் பாதையில் தடுக்கப்படுகிறான் 
இங்கே சர்வ வல்லமையுள்ள தேவன் மனிதனுடன் இடைபடுவது போராடுவது அழுத்தம் கொடுக்கப்படுகிறது 
இங்கே இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று அறிக்கையிடுவதில் இரட்சிப்பு வெளியாகிறது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

 இரட்சிப்பு என்பதற்கு அநேக பதங்கள் பயன்படலாம். 
அனேக நிகழ்வுகள் குறுக்கிடலாம் நம் வாழ்க்கையில்.
ஆனால் குறிப்பிடப்படுவது எதுவென்றால்

@  ஒரு மனிதனுடைய பாவ பரிகார தேவை சந்திக்கப்பட வேண்டும் 
@ ஒரு மனிதனுடைய இயலாமை தேவன் இடத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் 
@ ஒரு மனிதன் இரட்சகரிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

பொதுவாக இரட்சிக்கப்பட்ட நபர் அல்லது ஊழியத்தில் இருக்கிற நபர் மனதில் எழுகிற 2 சந்தேகங்கள்..

1. இரட்சிப்பு அல்லது விசுவாசம் ஒரே நிகழ்வா? அல்லது தொடர் செயலா?
Is Salvation or Faith a definite act or a continuous process?

2. என்னுடைய இரட்சிப்பின் நாள் அல்லது நான் மறுபடி பிறந்தநாள் ஒரு குறிப்பிட்ட நாளா? அதை ஞாபகம் வைத்தல் அவசியமா?
Must I know or remember the date of my salvation or date of Born Again?

1. முதல் சந்தேகதுக்கான பதில்...

இரட்சிப்புக்கான படிகள் அல்லது மனம் திரும்புதலுக்கான சந்தர்ப்பங்கள் அனேக நாட்களோ வருடங்களோ கூடிக்கொண்டு போகலாம்.
 ஆனால் கண்டிப்பாக தீர்மானம் எடுக்கக்கூடிய நாள் அல்லது நேரம் ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும் நினைவில் இருக்க வேண்டும்.

ரோமர் 8:9 கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல..

 தேவனுடைய ஆவி ஒருவரிடம் வாசம் செய்ய விரும்பி வாசம் செய்ய ஆரம்பிப்பது ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது நேரம் தான்.
ஏனெனில் ஆவியானவர் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளை விட்டு விலகுவதில்லை நிரந்தரமாக..
நிரந்தரமாக வாசம் செய்ய விரும்பி பிரவேசிக்கிறார்.
 நாம் இந்த உலகத்தில் பிறக்கும் போது ஆவியானவரால் நாம் வாசம் செய்யப்படுவது இல்லை.
அவர் நம்மில் வாசம் செய்வது நாம் இரட்சிக்கப்படும் போது மட்டுமே. 

 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்கள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
எபேசியர் 1:13

இது நடப்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே.
அவர் வாசம் செய்வதற்கான ஆயத்தங்கள் ஒரு மனிதனுக்கு அதிக நாட்கள் வருடங்கள் ஆகலாம்.
 ஆனால் அவர் பிரவேசிக்கிற நாள் ஒரு குறிப்பிட்ட நேரமே.
 சிலர் பொதுவாக நான் கடவுளையே விசுவாசிக்கிறேன் என்பார். 
அதனால் அவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறார் என்பது அர்த்தமல்ல.

2. இரண்டாவது சந்தேகதுக்கான பதில்...

என்னுடைய இரட்சிப்பின் நாள் அல்லது நான் மறுபடி பிறந்தநாள் ஒரு குறிப்பிட்ட நாள் தான். 
ஆவியானவர் வாசம் செய்த நாள் அல்லது தேவன் தான் என்னை முன் குறித்த திட்டத்தை நான் அறிந்து கொண்ட நாள் அறிந்து வைத்திருப்பது மேல். 
அநேகர் அந்த நாளை அதாவது தான் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்த நாளை குறித்து வைப்பது இல்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை பரவாயில்லை. உண்மையிலேயே நீங்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் ஆனால் உங்கள் உண்மையான விசுவாசத்தை தேவன் அறிவார்.
 அவர் அந்த நாளை ஜீவ புத்தகத்தில் எழுதுகிறார்.
எழுதப்படுகிற அந்த நிகழ்வு ஒரு நாள் அல்லது ஒரு நேரமாகவே இருக்கும்.

 அப்போஸ்தலர் பவுல் கூறுகிறார். 

 அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன். ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
2 தீமோத்தேயு 1:12

இந்த இரட்சிப்பின் நாள் மிக மிக முக்கியமானது..

அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
2 கொரிந்தியர் 6:2

 இஸ்ரவேல் ஜனங்கள் 430 வருடங்கள் முடிந்த அன்றைய தினமே என்று வாசிக்கிறோம்..

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம். 
யாத்திராகமம் 12:40

நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது. 
யாத்திராகமம் 12:41

 இரட்சிப்பின் நாள் மிக மிக கவனத்திற்குரியது. 

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

விசுவாசித்தலும் அறிக்கையிடுதலும்..
Believing and Confessing..

ரோமர் 10.9-10
 இந்த பகுதியை கவனமாக சிந்தித்தால் விசுவாசித்தல் மட்டுமே முக்கிய பங்கு வைக்கிறது..
 அறிக்கையிடுதல் தொடர்கிறது. 
புதிய ஏற்பாட்டு சத்தியம் அறிக்கையிடுவது மட்டும் இரட்சிப்பு என்று உபதேசிப்பது அல்ல. 
ஆனால் ஒரு மனிதன் விசுவாசித்து இரட்சிப்பை பெற்றுக் கொண்டால் அறிக்கையிடுவது அவசியம் என்கிறது.

இரண்டு வேத பகுதிகள் மிக கவனத்துக்குரியது..

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 
ரோமர் 10:9

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 
ரோமர் 10:10

 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
மாற்கு 16:16

 இங்கே ஞானஸ்நானம் அறிக்கையிடுதலுக்கு  ஒப்பாக இருக்கிறது. 
ஆகவே ஞானஸ்நானம் மட்டுமே இரட்சிப்புக்கு காரணமாகாது. 
ஆனால் இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்நானம் என்ற வெளிப்படையான அறிக்கை செய்தல் அவசியம்.

 ஆக்கினைத்தீர்ப்பை பற்றி கூறும் போது கவனியுங்கள்..

உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 
யோவான் 3:17

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 
யோவான் 3:18

இங்கே அறிக்கையோ, ஞானஸ்நானமோ முக்கிய பங்கு வைக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அறிக்கையை செய்வது இரட்சிக்கப்பட்டவர்களுடைய பிரதான பொறுப்பு ஆகும்.

அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.
லூக்கா 12:8

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

பாவத்திற்கான மனஸ்தாபம்
CONVICTION OF SIN

 கருவசனம். 

 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து; சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
அப்போஸ்தலர் 2:37

37 When the people heard this, they were cut to the heart and said to Peter and the other apostles, “Brothers, what shall we do?”

Pierced.... Pricked...

ஒரு மனிதன் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் முன் அவன் தான் அனைத்தையும் இழந்து விட்டேன் என்பதை உணர்வது அவசியம்.
இது சுவிசேஷத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றாகும்.
இயேசு கிறிஸ்து அடிக்கடி கூறுகிறதான வார்த்தை. 

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 
லூக்கா 5:31

நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். 
லூக்கா 5:32

 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
லூக்கா 19:10

வேதம் அழுத்தமாக கூறுகிறது உலகில் பிறந்த யாவரும் பாவிகள், எல்லாரும் இழந்தவர்கள், எல்லாரும் பாவ வியாதியினால் பிடிக்கப்பட்டவர்கள். ஆனால் எல்லாரும் இந்த பாவ விடுதலையை விரும்புகிறார்களா? அல்லது இந்த பாவ தண்டனையை. ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லை. மனிதன் தன் அபாய நிலையை உணரவும் பாவத்திலிருந்து விடுபடவும், தாழ்மையுடன் இதை ஒப்புக்கொள்ளவும், இந்த தேர்வை மனிதர்களிடமே கொடுக்கப்படுகிறது சுயமாக தீர்மானம் எடுக்க. 

பரிசுத்த ஆவியானவர் மட்டுமே ஒரு மனிதன் தன்னுடைய ஆவிக்குரிய அசுத்தத்தை அறிந்து கொள்ளவும் அதன் மதிப்பு அதன் மன்னிப்புக்காக இரட்சகரிடம் சென்றடையவும் உதவி செய்ய முடியும். 

பரிசுத்த ஆவியானவர் கண்டித்து உணர்த்துதல்..

இரண்டு பொதுவான நிலைகளில் பரிசுத்த ஆவியானவர் கண்டித்து உணர்த்துகிறார்..

1.  பொதுவான உலகத்துக்கு 
2.  தனி நபருக்கு. 

மூன்று முக்கிய காரணிகள் மூலமாக உணர்த்துகிறார்..

 ஒன்று பாவம் 
ரெண்டு நீதி, 
மூன்று இனிவரும் நியாய தீர்ப்பு. 

ஒரு ஆத்துமா இரட்சகரிடம் உண்மையாக வரும் முன்பு கண்டிப்பாக ஆவியானவரின் உணர்த்தும் பணி இருந்திருக்க வேண்டும்.

இந்த பணி ஒரு வேளை தொடர்ந்து நடைபெறலாம்.
இல்லையேல் ஏதாவது ஒரு சூழ்நிலைக்கு ஆவியானவர் கொண்டு போய் உணர்த்தலாம். 
வேதத்தில் இந்த ஆவியானவர் வித்தியாசமான பணிக்கு எடுத்துக்காட்டாக நிறைய தேவ மனிதர்கள் இருக்கிறார்கள்.

1. தாவீது 

 அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.
2 சாமுவேல் 12:13

நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 
சங்கீதம் 32:3

இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.) 
சங்கீதம் 32:4

2.யோபு

என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. 
யோபு 42:5

ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். 
யோபு 42:6

3. ஏசாயா 

அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
ஏசாயா 6:5

4. சீமான் பேதுரு 

சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்.
லூக்கா 5:8

5. இளைய குமாரன்.

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். 
லூக்கா 15:17

நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். 
லூக்கா 15:18

இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி, 
லூக்கா 15:19

6. எஸ்றா மற்றும் ஜனங்கள்.

இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செய்கைகளினாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குத் தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கையில், 
எஸ்றா 9:13
சங்கீதம் 103

நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரல்லவோ ? 
எஸ்றா 9:14

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர். ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பிமீந்திருக்கிறோம். இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள். இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன். 
எஸ்றா 9:15

7. ஆயக்காரன் 

 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
லூக்கா 18:13

8. பெந்தேகோஸ்தே நாளில் சகோதரர்கள் மற்றும் இஸ்ரவேலர்..

 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து; சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
அப்போஸ்தலர் 2:37

9. அப்போஸ்தனாகிய பவுல் அல்லது தர்சு பட்டனத்தானாகிய சவுல் 

அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான். 
அப்போஸ்தலர் 9:4

அதற்கு அவன்; ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்; நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். 
அப்போஸ்தலர் 9:5

10. சிறைச்சாலைக்காரன்

அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, 
அப்போஸ்தலர் 16:29

அவர்களை வெளியே அழைத்து வந்து; ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்
அப்போஸ்தலர் 16:30

மீண்டும் வலியுறுத்துகிறோம்..

ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை உணரும் முன் தான் இழந்து போன நிலையில் இருக்கிறேன் என்பதை உணர்வது அவசியம். 

ஒரு ஞானம் உள்ள ஆத்ம ஆதாயம் செய்யும் ஊழியர் கவனத்தில் கொள்ள வேண்டிய சத்தியம் தான் சந்திக்கும் ஆத்துமாவின் பாவ உணர்வு அல்லது இருதயத்தில் குத்தப்படுதல் என்கிற செயலை அறிய ஆவியானவர் துணையை பெற்றுக்கொள்ள வேண்டும். அப் பவுல்..
இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் உண்டு என்று கண்டு கொள்கிறார். 

பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு;
அப்போஸ்தலர் 14:9

இந்த அனுமானித்தல் எப்பொழுதும் சாத்தியமா என்றால் கடினம் தான். ஆனால் எப்பொழுதும் ஆயத்தமாய் இருத்தல் அவசியம்..

 கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
1 பேதுரு 3:15

சில நேரங்களில் கீழ்க்கண்ட இது போன்ற சில நிகழ்வுகளை சுவிசேஷ பரிமாற்றம் Gospel transfer போது சந்திக்கலாம். 

ஒன்று சிலர் சுவிசேஷத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

ரெண்டு சிலர் உணர்வுப்பூர்வமான செயலில் ஈடுபடலாம்.

மூன்று சிலர் வியாதியின் படுக்கையில் சுவிசேஷத்தை கேட்பது கட்டாயம் என்ற சூழ்நிலை ஏற்படலாம்.
 
நான்கு சிலர் சில நேரங்களில் கசப்பான அழுகையின் சூழல் இருக்கலாம்.
 
ஐந்து சில நேரங்களில் சுவிசேஷம் போக முடியாதபடி கதவுகள் அடைக்கப்பட்டது போல தோன்றலாம்.

ஆனால் சுவிசேஷ பயணத்தில் இருக்கும் ஆத்ம ஆதாயம் செய்பவர்கள் ஒரு மனிதன் தன் இருதயத்தில் குத்தப்படுகிற சில சமிக்கைகளை அல்லது உடல் அடையாளங்களை அறிந்து கொள்ள வேண்டும். Signs and Body languages..

ஒன்று இவர் தன்னுடைய சுய நீதியையோ சுய கிரியைகளையோ இங்கு குறிப்பிடவில்லை.

 இரண்டு பாவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

மூன்று இவர் கிறிஸ்துவில் மட்டுமே விசுவாசம் வைக்கிறார் மற்ற மதங்கள் கோட்பாடுகள் நன்னெறிகள் மனிதர்கள் மேல் அல்ல.

நான்கு தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் இணைய ஆவல் கொள்கிறார். 

ஆத்ம ஆதாயம் செய்யும் ஊழியர் கவனிக்க வேண்டிய சத்தியங்கள்.

 ஒன்று ஒரு மனிதனை பரிசுத்த ஆவியானவர் துணை இன்றி கிறிஸ்துவுக்குள் வழி நடத்துவது ஒருவரால் இயலாது. 

ரெண்டு மாறாக ஒரு மனிதனை பரிசுத்த ஆவியின் செயல்பாடு நடக்கும் முன்பதாக நாம் முந்தி தீர்மானித்து அவரிடம் அவரை கடவுளிடம் கொண்டு வருவோமானால் அதாவது சில சத்தியங்கள் உபதேசங்கள் சொல்லி அவர்களை ஒத்துக் கொள்ள முயற்சித்தால் அது சபையில் பேராபத்தை விளைவிக்கும். 

மூன்று ஆத்ம ஆதாயம் பணி செய்வோர் கவனிக்க வேண்டும் பொறுமை பூரணத்தை கொண்டு வரும். 

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். 
யாக்கோபு 1:3

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. 
யாக்கோபு 1:4

நான்கு ஆத்ம ஆதாய பணி செய்வோர் ஆவியானவர் ஒருவரிடம் அவரிடம் பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்துகிறார் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆவியானவர் பணி முடியும் வரை கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும். அந்த நபருக்காக ஜெபிக்க வேண்டும்.

 அப்பொழுது நாம் அவரது ஆத்துமாவின் ஆழமான தேவைகளை சந்திக்க போதுமானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதை அந்த ஆத்துமாவும் சபையும் அறிந்து கொள்ளும்.


இரட்சிப்பின் வளங்கள்..

கிறிஸ்துவின் மாம்சமாகுதல்!!
INCARNATION OF CHRIST!!

Incarnation literally means embodied in flesh or taking on flesh. It is the conception and the embodiment of a deity or spirit in some earthly form or an anthropomorphic form of a god.
It is used to mean a god, deity, or Divine Being in human or animal form on Earth.

தேவன் மனிதனானார் 

பாவமில்லா தன்மையில் தேவன் மனிதனாக வந்ததே மாம்சமாகுதல் என்று பொருள்..

தேவன் மாம்சமாகுதல் குறித்த
 தீர்க்கதரிசனம்..

1. A hint..
ஸ்திரீயின் வித்து..
Seed of a woman 
ஆதி 2:15

2. A symbol 
அடையாளம் 
Root of dry ground 
ஏசாயா 53:2

3. A prophecy 
தீர்க்கதரிசனம் 
Child of a virgin..
ஏசாயா 7:14

ஆதாம் ஏவாள் பாவம் செய்த போது தேவன் அவர்களை தண்டிக்க வேண்டியதாக இருந்தாலும் தேவன் ஸ்திரீயின் வித்தை 
வாக்குப்பண்ணினார்..

கிறிஸ்துவின் மாம்சமாகுதலுக்கு முன்னடையாளம்..
ஆதி 26:4, 28:14,49:10 இங்கே வாசிக்கிறோம்..

உன் சந்ததி.. அந்த சந்ததி கிறிஸ்துவே..
சமாதான கர்த்தர்..
நியாயப்பிரமாணிக்கன்..

@ தேவன் ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் ஒரு மீட்பரை வாக்குப்பண்ணியிருக்கிறார்..

@ மோசேயை போல ஒரு தீர்க்கதரிசி.. உபா 18:15

@ மெல்கிசெதேக்கை போல ஒரு ஆசாரியன்.
சங் 110:4

@ தாவீதின் வம்சத்தில் ஒரு ராஜா..
2 சாமு 7:16

புதிய ஏற்பட்டில் கிறிஸ்துவின் மாம்சமாகுதல் குறித்த சில முக்கிய பதங்கள்.

1. தேவன் அனுப்பினார் கலா 4:4
2. கிறிஸ்து வந்தார் 1 தீமோ 1:15
3. தேவன் வெளிப்பட்டார் 1 தீமோ 3:16
4. கிறிஸ்து வெளிப்பட்டார் 1 யோவான் 3:5
5. வார்த்தை மாம்சமானார் யோவான் 1:14
6. தேவன் தந்தருளினார் யோவான் 3:16
7. அவர் பிரவேசித்தார் எபி 10:5
8. தேவன் அனுப்பினார் ரோமர் 8:3

வளங்கள் தொடரும்..

TCBA TUTICORIN

TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA