தனிப்பட்ட ஆராதனை தியானம் PERSONAL WORSHIP THOUGHT கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே!!!YOU WERE BOUGHT AT A PRICE!!!
தனிப்பட்ட ஆராதனை தியானம்
PERSONAL WORSHIP THOUGHT
கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே!!!
YOU WERE BOUGHT AT A PRICE!!!
கிரயம் vs மீட்கும் பொருள்
PRICE VS RANSOM
Ransom...the money that you must pay to free somebody who has been captured illegally and who is being kept as a prisoner.
சட்டத்திற்கு மாறாகப் பிடித்துக் கைதியாக வைக்கப்பட்டுள்ள ஒருவரை விடுவிப்பதற்காகச் செலுத்தப்பட வேண்டிய பணம்; பிணைய மீட்புப் பணம்.
ஒரு ஆத்துமா மீட்கப்பட கிரயம் அல்லது மீட்கும் பொருள் ஈடு அல்ல..
தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
சங்கீதம் 49:6
ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
சங்கீதம் 49:7
எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.
சங்கீதம் 49:8
அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது, அது ஒரு போதும் முடியாது.
சங்கீதம் 49:9
ஏன் நமக்கு மீட்கும் பொருள் செலுத்தப்பட வேண்டும்?
நாம் காவலில் வைக்கப்படிருந்தோம்!!
அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
கலாத்தியர் 3:22
ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம்.
கலாத்தியர் 3:23
ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன், அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
ரோமர் 7.24
மீட்கும் பொருள் கண்டு பிடித்தேன்!!!
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும். மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
யோபு 33.24
மீட்கும் பொருள்.. கிரயம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து!!
ஒப்பிட முடியாத விலையேறப்பெற்ற மாசற்ற குற்றமில்லாத கிரயம்!!
மத்தேயு 27.1-10 வசனங்கள் ஆராதனை சிந்தனைக்குரியது..
இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
மத்தேயு 27:9
இந்த தீர்க்கதரிசனம் சகரியா புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது..
கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார். *இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு.* நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்து விட்டேன்.
சகரியா 11:13
கிரயம்.. மீட்கும் பொருள்..
தேவன் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்..
தம்மைத்தாமே!!!
1. தம்மைத்தாமே வெறுமையாக்கினார்!
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
பிலிப்பியர் 2. 7
2. தம்மைத்தாமே தாழ்த்தினார்!!!
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2.8
3. தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்!!
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
எபிரேயர் 9.14
4. தம்மைத்தாமே பலியிட்டார்!!!
அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.
எபிரேயர் 7. 27
எபிரேயர் 9.26
5. தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்!!!
அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
கலாத்தியர் 1.4
கலாத்தியர் 2.20
கிரயத்துக்கு கொள்ளப்பட்ட நாம் செய்ய வேண்டிய ஆராதனை நியமங்கள்
1. உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்!
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:20
2. மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்!!
நீங்கள் கிரயத்துக்குகொள்ளப்பட்டீர்கள். மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
1 கொரிந்தியர் 7:23
ஆனபடியினாலே,
நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.
கலாத்தியர் 5.1
சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.
கலாத்தியர் 5.13
கிறிஸ்துவுக்குள் சுயாதீனமே... கிறிஸ்துவுக்குள் விடுதலையே...
உண்மையான ஆராதனை..
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
What'sapp
91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Comments
Post a Comment