நசரேயன்* .. *Nazarene* ..
*நசரேயன்* ..
*Nazarene* ..
BIBLICAL REVELATION..
நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். *நசரேயன்* என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 2:23
Matthew 2:23: "And he came and dwelt in a city called Nazareth, that it might be fulfilled which was spoken by the prophets, 'He shall be called a *Nazarene* '"
*நசரேயன்* :
இந்த வார்த்தை தீர்க்கதரிசிகளால் ( ஒன்றுக்கு மேற்பட்ட தீர்க்கதரிசிகள் ) உரைக்கப்பட்டது..
1. Hebrew name " NETZER "
இதன் அர்த்தம் தாவீதின் கிளை..
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ஒடுக்கப்பட்ட வம்சத்தில் அவதரித்து பிரபலமில்லாத நாசரேத் என்ற ஊரில் வளர்க்கப்பட்டார்..
ஏசாயா 11:1
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
2. *நசரேயன்*
The word NAZARETH in Hebrew means: SEPARATED, CROWNED, SANCTIFIED. Despite the meaning of the name, there was nothing dignified about that place. Because it was not a city of great prominence at that time. In fact, it was not even mentioned in the Old testament .
எபிரேய மொழியில் நாசரேத் என்ற வார்த்தையின் அர்த்தம்: பிரிக்கப்பட்ட, முடிசூட்டப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட. பெயருக்கு அர்த்தம் இருந்தாலும், அந்த இடத்தில் கண்ணியம் எதுவும் இல்லை. ஏனென்றால் அது அப்போது பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இல்லை. உண்மையில், இது பழைய ஏற்பாட்டில் கூட குறிப்பிடப்படவில்லை..
இயேசு கிறிஸ்துவை *நசரேயன்* என்றழைத்த அநேக சம்பவங்கள் பார்க்கலாம்..
1. *நசரேயன்* .. பரிசுத்தர்..
அவன், ஐயரே , *நசரேயனாகிய* இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
மாற்கு 1:24
2. *நசரேயன்* .. தாவீதின் கிளை ( குமாரன் )
*நசரேயனாகிய* இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள், அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
லூக்கா 18:37
3. *நசரேயன்* .. அபிஷேகம் பண்ணப்பட்டவர்.
*நசரேயனாகிய* இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
அப்போஸ்தலர் 10:38
4. *நசரேயன்* ... மரித்தோரில் முதல் பிறந்த தேவ சுதன்.
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட *நசரேயனாகிய* இயேசுவைத் தேடுகிறீர்கள், அவர் உயிர்த்தெழுந்தார்: அவர் இங்கேயில்லை: இதோ, அவரை வைத்த இடம்.
மாற்கு 16:6
5. *நசரேயன்* .. வல்லமையுள்ள தீர்க்கதரிசி.
அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: *நசரேயனாகிய* இயேசுவைக் குறித்தவைகளே, அவர் தேவனுக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
லூக்கா 24:19
ஒரு முக்கியமான சத்தியத்தை அறிந்து கொள்வோம்..
சவுலை ஆண்டவர் சந்தித்தார்.. அப் 9
ஆண்டவரே நீர் யார் என்று சவுல் கேட்கும் போது ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்.
" நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே".
அதற்கு அவன்; ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்; நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
அப்போஸ்தலர் 9:5
இதே சம்பவத்தை பவுல் எபிரேய பாஷையிலே யூத பிதாக்களுக்கு கூறும்போது...
*நசரேயன்* என்கிற பதத்தை சேர்க்கிறார்.. கவனியுங்கள்
அதற்கு நான்; ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்; நீ துன்பப்படுத்துகிற *நசரேயனாகிய* இயேசு நானே என்றார்.
அப்போஸ்தலர் 22:8
6. *நசரேயன்* ..
இயேசுவின் நாமம்.
முன்னே நானும் *நசரேயனாகிய* இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
அப்போஸ்தலர் 26:9
அப்பொழுது பேதுரு; வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை. என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். *நசரேயனாகிய* இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
அப்போஸ்தலர் 3:6
7. *நசரேயன்* ..
பரிசுத்த ஸ்தலம்.. வேத பிரமாணம்.. இரண்டையும் நிறைவேற்ற வந்தவர்..
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்; இந்த மனுஷன் ( பவுல் ) இந்தப்பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளையும் ஓயாமற்பேசுகிறான்.
எப்படியென்றால், *நசரேயனாகிய* அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 6:14
8. *நசரேயன்* .. அதிகாரம் நிறைந்தவர்.
அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: *நசரேயனாகிய* இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.
யோவான் 18:5
--------------------------
*நசரேயன்* ...
உலகுக்கு பிரகடனம் செய்யப்பட்டவர்..
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் *நசரேயனாகிய* இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
யோவான் 19:19
சகோதரரே!!!!
LET THE WORLD KNOW AND DECLARE HE IS NAZARENE..
இந்த உலகம் இவரை நசரேயன் என்று அறியட்டும்!!!அறிக்கையிடட்டும்!!!
உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்துஎழுப்பப்பட்டவருமாயிருக்கிற *நசரேயனாகிய* இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
அப்போஸ்தலர் 4:10
Shalomjjj@gmail.com
What'sapp
91 9965050301
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Comments
Post a Comment