KINGSHIP & PRIESTHOOD..ராஜாக்களும் ஆசாரியர்களும்..✨✨✨✨✨✨✨✨PRE WORSHIP THOUGHT


KINGSHIP & PRIESTHOOD..

ராஜாக்களும் ஆசாரியர்களும்..

✨✨✨✨✨✨✨✨

PRE WORSHIP THOUGHT
 
✨✨✨✨✨✨✨✨

Kingship and priesthood are two roles that have distinct functions in religion. Priesthood is the role of bringing people to God, while kingship is the role of bringing God to the people. 
Priesthood 
Priests offer sacrifices and apply the blood of the sacrifice
Priests secure a connection with God and the spirit realm
Priests bring people to God through sacrificial efforts
Kingship 
Kings make authoritative decrees
Kings secure a connection and impact on the earth
Kings create platforms to exercise spiritual resources
Kings lead others to use their talents to advance the Kingdom of God
In the Old Testament, the roles of king and priest were separate. For example, Saul was the King of Israel, but he was rebuked for attempting to perform a priestly duty. 



சவுல் ராஜா :
சாமுவேல் ஆசாரியன் :

சவுல் ராஜா ஆசாரியத்துவம் செய்ய துணிந்தான்..

சவுல்..கில்காலிலே பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணவில்லை என்றும் எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர். உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர். மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். 
1 சாமுவேல் 13:12-13
✨✨✨✨✨✨✨✨

உசியா ராஜா 
அசரியா ஆசாரியன்..

உசியா ராஜா.. அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும் அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். 
ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து, 
ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல, தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும், பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம், மீறுதல் செய்தீர், இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள். 
2 நாளாகமம் 26:16-8
✨✨✨✨✨✨✨

 ராஜாக்களும் ஆசாரியர்களும்..

புதிய ஏற்பாட்டில் மூன்று சத்தியங்கள் 

1. Preparation 
2. Proclamation 
3. Praising..

1. ஆயத்தம் 
2. அறிவித்தல் 
3. ஆராதனை 

1. ஆயத்தம் :

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை *ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின* அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:6

2. அறிவித்தல்..

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், *ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும்,* பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள்.
1 பேதுரு 2:9

3. ஆராதனை.

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: 
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, 
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை *ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்,* நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். 
வெளிப்படுத்தினத விசேஷம் 5:10

386. கீ கீ 

1. சர்வ வல்லவரே, 
 சபையின் சிரசே!
  வறட்சி, தாழ்ச்சி மிக்குதே, 
 கிருபை அரசே.

 பல்லவி

  உயிர்ப்பியுந் தேவே,
  நம்பி ஜெபிக்கிறோம்;ளூ
  வாக்கை நீர் நிறைவேற்றிட 
  காத்திங்கே நிற்கிறோம்.

2. அன்பா யழைத்தவா, 
     எனை இரட்சித்தவா,
  நின் ஜீவனென்னில் வாடுதே, 
     இரங்குமென் தேவே! - உயி

3. அன்புங் குளிர்ந்ததே 
     ஆவி குறைவினால்,
  செத்தவன் போலே ஆனேனே; 
     தூக்கும் உம் கரத்தால். - உயி

4. ஜெபத்தில் வாஞ்சையும், 
     வேதத்தில் தேட்டமும்,
  என்னிலூற நீர் வந்திடும், 
     தத்தம் நான் முற்றிலும். - உயி

5. பேயின் சிறை மீட்க, 
      ஊக்கமாய்ப் போர் செய்வேன்;
  ஜீவ நிருபமாக நான் 
     உம்மால் பிரகாசிப்பேன். - உயி

6. ஆத்ம மணவாளா! 
     உமது வருகை
  அச்சமின்றி எதிர்பார்க்க 
     நீக்குமென் நித்திரை. - உயி


https://youtu.be/4NMr7HqHl1w?si=GHzBfzdjTN843yOb


TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA