இயேசுகிறிஸ்து கர்த்தர்.... JESUS CHRIST IS LORD


இயேசுகிறிஸ்து கர்த்தர்
JESUS CHRIST IS LORD

BIBLICAL REVELATION..

இயேசு கிறிஸ்து ( இருக்கிறவர் இருந்தவர் வருகிறவர் ) வானத்திலிருந்து பூமிக்கு வந்து, கன்னிப் பெண்ணின் வயிற்றின் அளவு தம்மைச் சுருக்கி, பெத்லகேமில் பிறந்து, பரிபூரணமான வாழ்க்கை வாழ்ந்து சிலுவையில் மரித்துப் பரிகார தியாகம் செய்து, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு, வெற்றியுடன் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறினார்.  ..

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், 
பிலிப்பியர் 2:6

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 
பிலிப்பியர் 2:7

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். 
பிலிப்பியர் 2:8

ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 
பிலிப்பியர் 2:9

இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 
பிலிப்பியர் 2:10

பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். 
பிலிப்பியர் 2:11

@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது வேதத்தின் கருப்பொருள்..

@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலக சிருஷ்டிப்பின் ஆதாரம்..

@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலக இரட்சிப்பின் சத்தியம்..

@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலகம் ஒருநாள் அறிக்கை செய்யும்..

தியான வசனம் :

 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக *இயேசுகிறிஸ்து கர்த்தரென்று* நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
பிலிப்பியர் 2:11

Philippians 2:11 states, "And every tongue should confess that *Jesus Christ is Lord,*
 to the glory of God the Father". 
----------------------------

இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்று விசுவாசிக்கும் போது நடைபெறும் தொடர் நிகழ்வுகள்..

1. நம்முடைய இரட்சிப்பு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று அறிக்கை செய்வதே..

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10:9

2. நம்முடைய இரட்சிப்பின் ஆவிக்குரிய வளர்ச்சி இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று ஏற்றுக்கொள்வதே..

ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
கொலோசெயர் 2:6

3. நம்முடைய பிரசங்கம் இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று அறிவிப்பதே ..

நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
2 கொரிந்தியர் 4:5

4. நம்முடைய அறிக்கை, அறிவு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்கிற நிச்சயமே...

 ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
அப்போஸ்தலர் 2:36

5. நம்முடைய பரம அழைப்பு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்கிற பார்வையே..

இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; எபிரேயர் 3:1

6. நம்முடைய அறிவின் மேன்மை இயேசுகிறிஸ்து கர்த்தர் என்பதே..

அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
பிலிப்பியர் 3:8

7. இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று உணர வைப்பது பரிசுத்த ஆவியே..

ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
1 கொரிந்தியர் 12:3

8. இயேசுகிறிஸ்து கர்த்தர் அல்ல என்பவன் பொய்யனே!!!!

 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
1 யோவான் 2:22

சகோதரரே..

தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
2 பேதுரு 1:2

shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301
TCBA TUTICORIN 3

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA