கனம்பண்ணுகிறதிலே முந்திக்கொள்ளுங்கள்.Honor one another above yourselves".


கனம்பண்ணுகிறதிலே முந்திக்கொள்ளுங்கள்.
Honor one another above yourselves". 

Google translated..
உங்களை விட ஒருவரையொருவர் மதிக்கவும்".

தியான வசனம் :

 சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள், கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
ரோமர் 12. 10

கனம் இருதயத்தில் இருந்து வர வேண்டும்!!

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது,
மத்தேயு 15. 5
மாற்கு 7:6

Meaning of Honour..

to show great (public) respect for somebody/something or to give somebody pride or pleasure.
ஒருவரை/ஒன்றை (வெளிப்படையாகப்) பெருமைப்படுத்து; சிறப்பி; பெருமிதம் அல்லது மகிழ்ச்சி அடையச் செய்.

கிறிஸ்து பிதாவை கனம் பண்ணுதல் பிதா குமாரனை கனம் பண்ணுதல் நமக்கு மாதிரி..

அன்றியும் பிதாவைக் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். 
யோவான் 5:22-23

நான் கர்த்தர் என்று சொல்லப்படுகிற தேவனுடைய sovereignty பேரறிவு இவைகளில் ஒன்று கனம் பண்ணுதல் ..

 நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுவாயாக, நான் கர்த்தர்.
லேவியராகமம் 19.32

சில கனம் பொருந்திய.. அதாவது கனத்திற்கு தாமே தகுதி வாய்ந்த சிலரை அறிந்து கொள்ளுங்கள்..

கனம் பொருந்திய 

1. யோசேப்பு 
2. தியோப்பிலு 
3. பெஸ்து 
4. பேலிக்ஸ் 
5. கமாலியல் 

முதலாவது ஒரு விசுவாசி கனம் பண்ணுவது எங்கே ஆரம்பமாக வேண்டும்?

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
எபேசியர் 6.3

இந்த விசேஷத்த கற்பனை சீனாய் மலையில் மோசே மூலம் உலகுக்கு அளிக்கப்பட்டது..

 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
யாத்திராகமம் 20. 12
உபா 5.16

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
மத்தேயு 15. 4

பிதா கனம் பண்ணுகிறார்?

 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
யோவான் 12.26
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.
1 தீமோத்தேயு 5. 3

 எல்லாரையும் கனம்பண்ணுங்கள். சகோதரரிடத்தில் அன்புகூருங்கள். தேவனுக்குப் பயந்திருங்கள். ராஜாவை கனம்பண்ணுங்கள்.
1 பேதுரு 2.17

 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்: தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்
நீதிமொழிகள் 14. 31

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கனம் பண்ணப்பட வேண்டியவர்கள்..

@ கர்த்தருடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் கனம் பண்ணவேண்டும். 

@ ஊழியக்காரர்கள் விசுவாசிகளை கனத்திற்குரிய பாத்திரங்களாய் கருத வேண்டும். 

@ விசுவாசிகள் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். 

@ பிள்ளைகள் பெற்றோர்களைக் கனம் பண்ண வேண்டும். 

@ தேசத்தின் குடிகள் ஆளுகையில் காணப்படுகிறவர்களை கனம்பண்ண வேண்டும். 

@ வேலைக்காரர்கள் எஜமான்களைக் கனத்திற்குரிய பாத்திரர்களாய் கருதவேண்டும். 

@ கனம் பண்ணுவதில் மற்றவர்களைப் பார்க்கிலும் நாம் முந்திக் கொள்ளவேண்டும் என்று ஆவியானவர் ஆலோசனை கூறுகிறார்.

உலகத்தில் காணப்படுகிறவர்கள் தாங்கள்தான் கனத்திற்குரியவர்கள் என்று கருதுவதுண்டு.
 இரண்டு மனுஷர் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்.
ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். 
பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் என்று தன்னையே உயர்த்துகிறவனாய் காணப்பட்டான், ஆயக்காரனை அற்பமாகப் பார்த்தான். 

நாமும் அனேக வேளைகளில் கர்த்தருடைய ஊழியர்கள் மற்றும் தேவனுடைய பிள்ளைகள் இவர்களுடைய தாலந்துகள், வரங்கள், கிருபைகளை வைத்து அவர்களை மதிப்பீடு செய்து மிகவும் கனம் பண்ணுகிறோம்..

மற்றவர்களை அற்பமாய் கருதுவது உண்டு.  
நம்மைக் காட்டிலும் மற்றவர்களை யாரும் கனம் பண்ணக் கூடாது என்று கருதுபவர்களும் உண்டு. 

தாவீது கோலியாத்தைக் கொன்று திரும்பி வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்து சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறை முறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது, அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள், இன்னும் ராஜாங்க மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான் என்று வேதம் கூறுகிறது.

நாம் சவுலைப் போலக் காணப்படலாகாது. ஊழியங்களின் பாதைகளிலும் மற்றவர்கள் அதிக கனத்தைப் பெறும் போது, பொறாமை கொள்ளக் கூடாது.

 மிரியாமும், ஆரோனும் மோசேக்கு விரோதமாய் பேசி, கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது, மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்ட ரோகியானாள், ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.

 ஊழியத்தில் மற்றவர்களைக் கர்த்தர் பயன்படுத்தும் போது, அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றிசொல்ல வேண்டும், அவர்கள் தொடர்ந்து அழைப்பில் நிற்பதற்கு ஜெபம் செய்ய வேண்டுமே ஒழிய பொறாமையோடு பார்க்கலாகாது.

கர்த்தருடைய பிள்ளைகளே, மற்றவர்களை நாம்
கனத்திற்குரியவர்களாய் கருதுவதற்கு நமக்குள் தாழ்மை காணப்படவேண்டும். கிறிஸ்து இயேசுவிலிருந்த தாழ்மையின் சிந்தை நமக்குள்ளும் இருக்க வேண்டும்.
 அனேக வேளைகளில் ஆண்டவருக்கு கனத்தையும், மகிமையையும் செலுத்துவோம், அது நல்லது. 

ஆனால் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்களை கனவீனம் பண்ணுவோம். ஆஸ்தி, ஐசுவரியங்கள் உள்ளவர்களையும், உயர்ந்த ஸ்தானங்களில் காணப்படுகிறவர்களையும் பொதுவாக நாம் கனம் பண்ணுவோம். 

ஆனால் ஏழைகளைக் கனவீனம் பண்ணுவோம். 
ஆனால் வேதம் நாம் எல்லோரையும் கனம் பண்ண வேண்டும் என்று கூறுகிறது. 
கர்த்தரையும், அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்களையும் நீங்கள் கனம் பண்ணும் போது, கர்த்தர் உங்களை கனம் பண்ணி, உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

யாவரையும் தங்கள் இருதயங்களில் கனம் பண்ண முந்திக்கொள்வோம்!!!

சபையிலே பிரிவினை தவிர்க்க தேவனுடைய அநந்த ஞானம்..

சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு, அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
 1 கொரிந்தியர் 12:25

கவலைப்படாதே என்று சொன்ன தேவன் இதை குறித்து கவலைப்பட சொல்கிறாரே .... யோசிக்க வேண்டியது ....

மற்றவர்களை கனம் பண்ண முதிர்ச்சியடையாததற்கு முக்கிய காரணம் நாம் பிதாவை கனம் பண்ண கற்றுக்கொள்ளவில்லை..

  குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.  
மல்கியா 1.6

நிறைவு செய்வோம் :

இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா
சங்கீதம் 149.9

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com 
What'sapp 
91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA