நன்மைகள்... கிறிஸ்து.. GOODNESS..Christ..





நன்மைகள்... கிறிஸ்து..
GOODNESS..Christ..

BIBLICAL REVELATION

நன்மைகள் வேதத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஒப்பிடுகிறது.
Goodness Typify The Lord Jesus..

தியான வசனம் :

 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும்,
எபிரேயர் 9:11

திரித்துவத்தில் நன்மைகள்..
Goodness in Trinity..

பிதாவாகிய தேவன்..

கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர். இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், Goodness சத்தியமுமுள்ள தேவன்.
யாத்திராகமம் 34:6
• Exodus 34:6: The Lord God is abundant in goodness and truth

குமாரனாகிய தேவன்..

முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5:8
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் Goodness
நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
எபேசியர் 5:9
• Ephesians 5:9: Goodness is described as “the fruit of the light”

ஆவியானவர் தேவன்..

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு,Goodness நற்குணம், விசுவாசம்,
கலாத்தியர் 5:22
Galatians 5:22: Goodness is one of the fruits of the Spirit தயவு..

நன்மைகள் கிறிஸ்துவுக்கு பொருள்.. நிழல் அல்ல..
Substance.. Not Shadow...

1. நன்மைகள் ( கிறிஸ்து ) ஜீவனுக்கு பொருள்..

 இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
உபாகமம் 30:15

2. நன்மைகள் ( கிறிஸ்து ) கிருபைக்கு பொருள்..

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
சங்கீதம் 23:6

3. நன்மை ( கிறிஸ்து ) காண்பேன் என்கிற விசுவாசம் இரட்சிப்பை அருளும்.. கிறிஸ்துவே இரட்சிப்புக்கு காரணர்.. ஒருவரும் கெட்டுப்போகாமல்.. யோவான் 3:16

 நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
சங்கீதம் 27:13

4. நன்மையை ( கிறிஸ்துவை ) ஜாக்கிரதையுடன் தேட தயை கிடைக்கும்..

நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்: தீமையைத்தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
நீதிமொழிகள் 11:27

5. கற்பனை ( கிறிஸ்து ) பரிசுத்தம், நீதி, நன்மை..

 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
ரோமர் 7:12

6. தேவனிடத்தில் அன்பு கூறும் பிள்ளைகளுக்கு சகலமும் கிறிஸ்துவுக்கு எதுவாகவே நடக்கும்..

 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 8:28

7. ஞான நன்மை கிறிஸ்துவே..

 நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
1 கொரிந்தியர் 9:11


8. சபை கூடிவருதல் கிறிஸ்துவையே மையப்படுத்த வேண்டும்..

 உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்கு கட்டளைகொடுக்கிறேன். நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 11:17

9. கிறிஸ்துவுடனே இருப்பது தான் நன்மை..

 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்.
பிலிப்பியர் 1:23

10. நன்மைகளும் ( கிறிஸ்துவும் ) இரட்சிப்பும் இணைந்தது..

பிரிமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்.
எபிரேயர் 6:9

11. அதிக நன்மையான ( கிறிஸ்து ) நம்பிக்கையினால் மட்டுமே தேவனிடம் சேர முடியும்..

 நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.
எபிரேயர் 7:19
நானே வழியும்.. என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்..

12. கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளின் பொருள்..

 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும்,
எபிரேயர் 9:11

13. நியாயப்பிரமாணம் வரப்போகிற நன்மைகளின் நிழல் மட்டுமே..

 அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.
எபிரேயர் 10:11

14. கிறிஸ்துவின் இரத்தம் நன்மையானவைகளை பேசும்..

 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.
எபிரேயர் 12:24

15. நன்மை ( கிறிஸ்து ) பரத்தில் இருந்து வருகிறது..

.நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
யாக்கோபு 1:17

கடைசியாக சகோதரரே..

நன்மை ( கிறிஸ்து ) செய்கிறவன் தேவனால் உண்டானவன்..

பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
3 யோவான் 1:11

God Bless all with Goodness Jesus
தேவன் யாவரையும் நன்மைகள் கிறிஸ்துவால் ஆசீர்வதிப்பாராக..


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA