கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..திவ்விய...GODLY..DIVINE...
கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..
திவ்விய...
GODLY..
DIVINE...
திவ்வியம் என்ற சொல்லுக்கு தெய்வத் தன்மையுள்ளது, மேலானது, இனிமையானது, தூயது என்று பொருள்.
சமஸ்கிருத மொழியில் இருந்து வந்த சொல் திவ்வியம்.
திவ்வியம் என்ற சொல்லின் பொருள்: சந்தனவகை.
திவ்வியம் என்ற சொல்லைப் பயன்படுத்தி உருவான சில சொற்கள்: திவ்வியஸ்நானம்.
வேதத்தில் திவ்வியம் என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் தெய்வீகம் என்ற பொருளிலே உபயோகப்படுத்தப்படுகிறது..
💐💐💐💐💐💐💐💐💐💐💐
கவனியுங்கள்..
பழைய ஏற்பாட்டில்..
1. திவ்விய பணிமுட்டுக்கள்..
PRECIOUS...
தேவன் தான் தங்கும்படி தெரிந்து கொண்டு உருவாக்கப்பட்ட ஆசரிப்பு கூடாரத்தின் ஒவ்வொரு பணிமுட்டுக்கள் திவ்வியமானவைகள்..
2 நாளாகமம் 36:10,19
2. திவ்விய கேதுரு..
MIGHTY..
அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
சங்கீதம் 80:10
3. திவ்விய வாக்கு..
ORACLE..
ராஜாவின் உதடுகளில் திவ்விய வாக்கு பிறக்கும், நியாயத்தில் அவன் வாய் தவறாது.
நீதிமொழிகள் 16:10
4. திவ்விய சௌந்தரியம்..
BEAUTIFUL..
அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
அப்போஸ்தலர் 7:20
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
.
புதிய ஏற்பாட்டில்..
1. திவ்விய உண்மை..
GODLY..
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும் விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் *திவ்விய உண்மையோடே* நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 1:12
2. திவ்விய பலம் ..
DIVINE (ISV)
சத்தியவசனத்திலும், *திவ்விய பலத்திலும்,* நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயதங்களைத் தரித்திருக்கிறதிலும்,
2 கொரிந்தியர் 6:7
3. திவ்விய வல்லமை..
DIVINE..
தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய *திவ்விய வல்லமையானது* நமக்குத் தந்தருளினதுமன்றி,
2 பேதுரு 1:3
4. திவ்விய சுபாவம்..
DIVINE..
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, *திவ்விய சுபாவத்துக்குப்* பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
2 பேதுரு 1:4
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
What'sapp 91 9965050301
Comments
Post a Comment