கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை!!!! 4 MEALS IN GOSPEL OF JOHN.. யோவான் சுவிசேஷத்தில் 4 போஜனம்..




4 MEALS IN GOSPEL OF JOHN..

யோவான் சுவிசேஷத்தில் 4 போஜனம்..

The Gospel of John describes several meals, including the Feeding of the 5,000, a supper in Bethany, a meal in Jerusalem, and a breakfast after Jesus' resurrection. 



1. கலிலேயா கடல் அருகில் போஜனம்..

The Feeding of the 5,000 
5 அப்பம் 2 மீன் 5000 பேர் போஷிக்கப்படுதல்..

Also known as the "miracle of the five loaves and two fish" 
Jesus used five loaves and two fish to feed a large crowd.

இயேசு:ஜனங்களை உட்காரவையுங்கள்என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஜயாயிரம்பேராயிருந்தார்கள். 
யோவான் 6:10
இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்: சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்: அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். 
யோவான் 6:11
அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். 
யோவான் 6:12
அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஜந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். 
யோவான் 6:13

பந்தி கற்றுதரும் சத்தியம் :
ஜீவ அப்பம் நானே!!!



2 Supper in Bethany 
பெத்தானியாவில் இராவிருந்து..

Mary, Martha, and Lazarus hosted a supper for Jesus in Bethany
Mary anointed Jesus' feet with ointment and wiped them with her hair.

பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். 
யோவான் 12:1
அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள், மார்த்தாள் பணிவிடை செய்தாள், லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். 
யோவான் 12:2
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டு வந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள், அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. 
யோவான் 12:3

பந்தி கற்றுதரும் சத்தியம் :
உயிர்த்தெழுதலும் ஜீவனும் நானே!!


3. Meal in Jerusalem 
எருசலேமில் போஜனம்..

Jesus washed the disciples' feet and sent Judas off to betray him
This meal took place on the night of Jesus' arrest
Breakfast after Jesus' resurrection.

பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். 
யோவான் 13:1
சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்
யோவான் 13:2
தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும் தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து, 
யோவான் 13:3
போஐனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, 
யோவான் 13:4
பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். 
யோவான் 13:5

பந்தி கற்றுதரும் சத்தியம் :
பின்மாற்றத்தில் நேசிப்பவர் நானே!!!


4. திபெரியா கடற்கரையில் உயிர்த்தெழுந்தபின் கிறிஸ்துவின் விடியற்கால போஜனம்...

Jesus prepared a breakfast of fish and bread over a charcoal fire for his disciples
This meal took place on the shore of the Sea of Galilee
Jesus believed in the power of shared meals and invited his followers to eat a meal "in memory of him". 

இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார், வெளிப்படுத்தின விவரமாவது: 
யோவான் 21:1
விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார், அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். 
யோவான் 21:4
இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். 
யோவான் 21:5
இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. 
யோவான் 21:12
அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். 
யோவான் 21:13
அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 
யோவான் 21:15

பந்தி கற்றுதரும் சத்தியம் :
தம் ஆடுகளை மேய்க்க நிலை நிறுத்துகிறவர் நானே!!!

நிறைவு செய்கிறேன் :

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். 
வெளிப்படுத்தினத விசேஷம் 3:20
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு
 ( போஜனம் பண்ணும்படிக்கு ) அருள்செய்வேன். 
வெளிப்படுத்தினத விசேஷம் 3:21
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார் 
வெளிப்படுத்தினத விசேஷம் 3:22



Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA