2025 தனி நபர் சுவிசேஷ பணி என் தீர்மானம்..PERSONAL EVANGELISM..
2025 தனி நபர் சுவிசேஷ பணி என் தீர்மானம்..
PERSONAL EVANGELISM..
தனி நபர் சுவிசேஷ பணி..
ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவன்..
SOUL WINNER..
@ ஆத்தும ஆதாயம் தேவனுடைய மிகப்பெரிய பணி ..
@ இந்த பணியும் பணியில் ஈடுபடும் மனிதர்களும் தேவனுடைய பார்வையில் விசேஷத்தவர்கள்..
1. நித்தியத்திற்குரியது..
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
தானியேல் 12:3
2. ஞானவான்கள்..
நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்: ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்கிறவன் ஞானமுள்ளவன்.
நீதிமொழிகள் 11:30
3. தங்களை அடிமைகளாக்க வேண்டும்..
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஐனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
1 கொரிந்தியர் 9:19
4. தங்களைக் கீழ்படுத்த வேண்டும்..
யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன்.
1 கொரிந்தியர் 9:20
5. எல்லாருக்கும் எல்லாமுமாக வேண்டும்..
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
1 கொரிந்தியர் 9:22
🌺🌺🌺🌺🌺🌺☘️☘️☘️☘️
ஆத்தும ஆதாயம் என்பது..
1. The Great Commission..
மிகப்பெரிய கட்டளை
மத்தேயு 28:19-20
2. The Great Gift..
மிகப்பெரிய வரம்
எபே 4:11-12
3. The Great Commitment
மிகப்பெரிய பொறுப்பு
2 தீமோ 2:2
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
தனி நபர் சுவிசேஷ பணி செய்யும் பணியாளர்கள் தகுதிகள்..
1. ஒரு நபரை பின்பற்றுகிறோம்.. கொள்கைகளை அல்ல..
Not following set of rules but the person Jesus Christ..
என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
மத்தேயு 4:19
2. ஒருவரில் நிலைத்திருக்கிறோம்.. ஒரு அமைப்பில் அல்ல..
Not abiding in the organization but in the person Jesus Christ..
என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன், கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
யோவான் 15:4
3. ஜெபத்தில் தரித்திருப்போம்.. சுயத்தை சார்ந்து அல்ல
Not relying on our own but in prayer..
சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.. ரோமர் 10:1
4. தாழ்மையை அணிந்து கொள்வோம்.. மாய்மாலத்தை அல்ல..
Not with hypocrisy but dressed with humility..
யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
யோவான் 1:15
5. தன்னலமற்ற அன்பாயிருப்போம்.. சுயத்தை நேசித்து அல்ல..
Not loving self but love others with selfless love..
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
1 கொரிந்தியர் 13:4
6. தியாக வாழ்க்கை வாழுவோம்..ஆடம்பர அல்லது சுகபோக வாழ்வு அல்ல..
Not living luxury comfort life but living sacrificial life..
ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
2 கொரிந்தியர் 12:15
7. கிறிஸ்துவில் அளவில்லாத விசுவாசமும் தேவன் ஜனங்களை இரட்சிப்பவர் என்ற நம்பிக்கையும் பிரதானம்..
Have unlimited faith in both the ability and the willingness of the Lord to save sinners..
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன், முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
ரோமர் 1:16
8. தன் வார்த்தையிலும் வாழ்க்கையிலும் கிறிஸ்துவை காண்பிக்க பிரயாசம்..
Strive to show Christ in all ways and words..
நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
பிலிப்பியர் 1:20
சிந்திப்போம்..
@ இந்த 8 குணங்களும் தனி நபர் சுவிசேஷ பணிக்கு மிக மிக அவசியம்..
@ ஆனால் ஒரு கேள்வி நமக்கு எழும்புகிறது.
@ ஒரு விசுவாசி அல்லது ஊழியர் தேவனுடைய தொடர்பில் தற்சமயம் இல்லை, பின்மாரிப்போய் இருதயம் குளிர்ந்து ஜீவிக்கிறார்..இவருடைய தனி நபர் மற்றும் சபை ஊழியம் இவர் செய்து ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த முடியமா? அல்லது தேவனுக்கு மகிமை சேர்க்க முடியுமா?
நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, சீர்ப்படுத்தி தனி நபர் ஊழியம் செய்ய நம்மை அர்ப்பணம் செய்வோம்..
எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.
ரோமர் 2:24
நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான், நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே.
ரோமர் 2:25
மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக்கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?
ரோமர் 2:26
சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா? ரோமர் 2:27
PRAYER :
LORD live your life through me, and thus win souls to Yourself..
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment