NOAH’S ARK A SHADOW OF JESUS CHRIST... நோவா பேழை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புமை
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
----------------------------------------------------------
NOAH’S ARK A SHADOW OF JESUS CHRIST
நோவா பேழை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புமை
Noah’s Ark is considered a shadow of Jesus Christ in several ways, including:
1. A vessel of salvation
இரட்சிப்பின் பேழை..
Noah’s Ark was a place of safety for Noah and his family, sheltering them from the flood of God’s judgment. Similarly, Jesus is a place of safety for those who are in Christ, protecting them from God’s wrath.
2. An invitation to salvation
இரட்சிப்பின் அழைப்பு..
God invited Noah to “come” on the ark, rather than commanding him to do so. Similarly, Jesus invites people to come to him and find rest.
3. Deliverance from judgment
நீயாயத்தீர்ப்பில் இருந்து விடுதலை...
The ark delivered Noah from physical death, just as Jesus delivers people from spiritual death.
4. Typifies Baptism
ஞானாஸ்நானத்திற்கு ஒப்புமை
The flood is considered an ancient simulation of Christian baptism. Believers are baptized in water to identify with Jesus, who was plunged into the earth and raised from the dead.
@ பூமியில் ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டு 1500 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மிகப்பெரிய சரித்திர நிகழ்வு தான் நோவா காலத்துப் பேரழிவு deluge ஆகும்.
@ நம்முடைய ஆண்டவரும் மத்தேயு 24. 37 இல் நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும் என்றார்.
@ இந்த நோவா சம்பவத்தின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து புதிய ஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டிலும் அனேக எச்சரிப்புகள் எழுதப்பட்டிருக்கிறது.
வாசியுங்கள் :
ஆதி 9.17
ஏசாயா 54.9,
இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும், நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டு வருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.
ஏசாயா 54:9
எசேக்கியேல் 14:14,20
அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 14:14
நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
எசேக்கியேல் 14:20
எபி 11.7,
1 பேது 3:20,
அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
1 பேதுரு 3:20
2 பேது 2.5
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி,
2 பேதுரு 2:5
@ இந்த பேரழிவுக்கு deluge காரணம் தேவனுடைய தீர்மானமாகிய இந்த உலகத்தை நியாயத் தீர்ப்புக்கு இரையாக்கவும் பூமியின் மீது இருந்து கொடுமையை அழிiத்து போடவும் என்பதே ஆகும்.
ஆதி 6:11-13
@ இன்றைக்கும் இந்த உலகம் இதே நிலைக்குத் தான் வந்திருக்கிறது.
@ எங்கு பார்த்தாலும் அநீதியும் கொடுமையும் நிறைந்த செயல்களே காணப்படுகிறது.
@ தேவன் தண்ணீரினால் அன்று உலகத்தை சுத்திகரிப்பு செய்தார். இப்பொழுது இந்த உலகம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதற்கு தயாராகிறது.
2 பேதுரு 3.7
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்கியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்ட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
2 பேதுரு 3:7
@ தண்ணீரும் அக்கினியும் தேவனுடைய சுத்திகரிப்பின் வழிகள் ஆகும்.
@ தேவன் நோவாவையும் அவன் குடும்பத்தாரையும் காப்பாற்றி தான் யெகோவா தேவன் என்பதை ஊர்ஜிதம் செய்தார்.
@ தேவன் பாவத்தின் மேல் நீதியை செலுத்துகிறவர் மட்டுமல்ல பாவிகள் மேல் அக்கறையும் மனதுருக்கமும் காண்பிக்கிறார்.
@ வரும் காலத்தில் பயங்கரமான கோபாக்கினையின் நியாயத்தீர்ப்புக்கு முன்னேறிக் கொண்டு போகிற இந்த உலகத்தை இரட்சிக்கும்படி தேவன் தம்முடைய குமாரனை அனுப்ப சித்தம் கொண்டார்.
@ நோவா பேழை இதற்கு நிழலாக இருக்கிறது.
@ இயேசு கிறிஸ்துவே இரட்சிப்பின் வழி என்பதற்கும் நோவா பேழைக்கும் அநேக ஒற்றுமைகள் உண்டு. சிலவற்றை சிந்திக்கலாம்.
1. மிகப்பெரிய பேரழிவுக்கு தப்புவிப்பதற்காக. பயன்படுத்தப்பட்ட ஒரே வழி பேழையாகும். ஆதி 6:14-16
இந்த பேழையின் வரைபடம் தேவனால் கொடுக்கப்பட்டது. தேவனே குமாரனாகிய கிறிஸ்து இயேசு மூலமாய் பாவ மன்னிப்படைய வழி செய்கிறார். தன்னுடைய குமாரனுடைய மரணம் அடக்கம் உயிர்த்தெழுதல் மூலமாக பாவிகளுக்கு இரட்சிப்பை தேவனே திட்டம் பண்ணுகிறார். மனுமக்கள் இரட்சிப்பின் ஆக்கியோன் தேவன் ஒருவரே.
2. கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு வேலையை உண்டு பண்ணுவாயாக.. ஆதி 6:14..
கொப்பேர் மரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மனுஷிகத்திற்கு நிழலாக இருக்கிறது.. மரம் வெட்டப்படுகிறது கிறிஸ்துவாகிய பேழை பூமியில் ஆயத்தமாக்கப்பட்டது. எபி 10.5
3. பேழை மூன்று அறைகளும் ஒரு ஜன்னலும் கொண்டது. ஒரு கதவு மட்டுமே உண்டு. ஆதி 6:15-16..
திரியேக தேவனிடம் செல்வதற்கு ஒரே வழி கத்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.
ஒருவன் கத்தராகிய இயேசு கிறிஸ்துவில் பிரவேசிக்கும் போது திரியேக தேவனை சென்றடைகிறான்.
பேழையின் ஒரு கதவு வழியாக பிரவேசிப்பது மூன்று அடுக்காகிய பேழை முழுவதையும் சென்றடைவது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
1 யோவான் 2. 24 வசனத்திற்கு இது ஒப்புமையாக இருக்கிறது. குமாரனில் விசுவாசமாய் இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு.. அவன் பிதாவையும் ஆவியையும் உடையவனாகிறான்.
4. பேழைக்குள் தண்ணீர் புகாதபடிக்கு உள்ளும் புறம்பும் கீல் பூசப்பட்டது. ஆதி 6:14
கீல் pitch என்ற வார்த்தை. ரெஸ்டிடியூஷன் restitution மீட்பளிப்பு ரெண்டும் எபிரேய மொழியில் ஒரே அர்த்தம்..t
கிறிஸ்து நமக்கு இழப்பை மீட்பு அளிப்பவராக இருப்பதால் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை.
ரோமர் 3.23, லேவி 17.11.பாவ நிவிர்த்தி..
Cypress... Is depicted as a variation of the tree of life motif which represents everlasting life.
The cypress is used in rituals with the dead bodies but symbolise the eternal life that comes after death...
மீட்டெடுப்பாளர் மற்றும் நித்திய ஜீவனை அளிப்பவர் ரெண்டும் ஒருவரையே சுட்டிக்காட்டுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய பேழை எட்டு பேரை காப்பாற்றியது மட்டுமல்ல.
அரராத் மலையில் கொண்டு போய் சேர்த்தது.
இந்த ரெண்டு செயல்களுக்கும் நிழலாக காட்டுகிறது.
5. நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து,
பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளைw யும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும். ஆதி 6:16
நோவாவை தேவன் பேழைக்குள் பிரவேசிக்க செய்து கதவை அடைத்தார்..
நோவா பேழைக்குள் இருந்து இந்த ஜன்னல் வழியாக வானத்தின் மதகுகள் திறவுண்டதையும், மகா ஆழத்தின் ஊற்றுக்கண்கள் பிளந்ததையும், ஜனங்கள் தேவ கோபத்தினால் மாளுகிறதையும் காண்கிறான்..
நாமும் அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக பரிதபிக்கிறோமா?
6. நோவா பேழைக்குள் பிரவேசித்தான்..
ஆதி 7.1..யோவான் 10.1...
வாசல் வழியாய் பிரவேசித்தல். என்பது விசுவாசித்தல் என்கிற செயலுக்கு இணையான செயலாகும். ரோமர் 10:9-10
7. சுத்தமான மிருகங்கள் சுத்தமில்லாத மிருகங்கள் பூமியின் மேல் ஊரும் பிராணிகள் உள்ளே பிரவேசித்தன. ஆதி 7:8-9
இது இரட்சிப்பின் ரெண்டு சத்தியங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது.
சபை யூதர்களையும் புறஜாதிகளையும் உள்ளடக்கியது. நித்தியத்தில் அதாவது ஆயிரம் வருட அரசாட்சியில் அனைவரும் ஒரே ஐக்கியத்தில் தாபரிப்பார்கள். பேதுரு கண்ட தரிசனத்தை நாம் சிந்திப்போம்.
அப் 10:11-14
பேதுரு மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான். அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,
அப்போஸ்தலர் 10:10
வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டையைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,
அப்போஸ்தலர் 10:11
அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.
அப்போஸ்தலர் 10:12
அல்லாமலும் பேதுருவே, எழுந்திரு அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
அப்போஸ்தலர் 10:13
அதற்குப் பேதுரு; அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
அப்போஸ்தலர் 10:14
அப்பொழுது; தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
அப்போஸ்தலர் 10:15
8. ஏறத்தாழ ஒரு வருடம் நோவாவும் எட்டு பேரும் பாதுகாப்புடன் பேழைக்குள் இருந்தனர்.
பரிசுத்தமாகுதல் என்கிற பெரும் பிரயாணத்தில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களும் தேவன் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கிறார்.
எபே 1:3, 1 பேது 5:7
9. 40 நாள் மழை பெய்தது.
ஆதி 7:17
பேழை நேரிடையாக அலைக்கழிக்கப்படுகிறது கிறிஸ்துவும் பாடுபட்டு சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.
எபி 2:18, ஏசாயா 53:6
10. தேவன் பேழையின் கதவை அடைத்தார்..ஆதி 7:16
கிருபையின் காலம் முடிவடைகிறது..
Salvation time is short and limited..
மீண்டும் ஒரு தருணம் கிடையாது.
2 கொரி 6:2, எபி 9:27
11. ஏழாம் மாதம் 17ஆம் தேதி பேழை அரராத் என்னும் மலைகளின் மேல் தங்கிற்று. ஆதி 8:4..
கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளும் அதே நாளாக கணக்கிடப்படுகிறது...
12. நோவா குடும்பம் காப்பாற்றப்பட்டது ஞானஸ்நானத்திற்கு ஒப்புமையாக உள்ளது. ஆதி 8:15-16..
கிறிஸ்துவின் பாடுகள் மரணம் அடக்கம் உயிர்த்தெழுதல் வழியாக விசுவாசிகள் தாங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பை கடந்து போகிறார்கள்.
விசுவாசிகள் ஞானஸ்நானத்திற்கு கீழ்ப்படியும் போது இதை நினைவு கூறுகிறார்கள்.
கிறிஸ்துவின் மரணம் அடக்கம் உயிர்த்தெழுதல் இதற்கு நிழலாய் இருக்கிறது. ரோமர் 6:3-4..
ஞானஸ்நானத்திற்கு கீழ்ப்படிதல் இரட்சிப்பு அல்ல.
இரட்சிக்கப்பட்ட அல்லது மீட்க்கப்பட்ட விசுவாசி, தான் பாவத்துக்கு மரித்து கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையில் தொடர்ந்து, பரிசுத்தமாகுதலில் பூரணமாக வாழ தீர்மானித்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் சாட்சி மற்றும் உறுதிமொழி எடுக்கும் தருணம் ஆகும்.
13. நோவாவும் அவன் குமாரரும், அவன் மனைவி, குமாரரின் மனைவிகள் பேழையில் இருந்து புறப்பட்டு வந்தார்கள்.ஆதி 8:18
பேழையில் ஒன்றும் மரிக்கவும் இல்லை.. ஒன்றும் இழந்து போகவும் இல்லை.
யோவான் 10:28-30
14. நோவா பேழை விட்டு வெளிவந்த பின்பு பலி செலுத்தினான்..ஆதி 8:20-21
எபி 13:15, அப் 20:7
கர்த்தர் சுகந்த வாசனையை முகர்ந்தார்.
15. நோவாவும் குடும்பத்தாரும் புதிய உலகுக்குள் பிரவேசிக்கிறார்கள்..ஆதி 9:1-7..
பழையவைகள் ஒழிந்து போயின அவர்கள் இருதயம் நன்றியால் பொங்குகிறது..
16. தேவன் உடன்படிக்கை செய்கிறார். வானவில் அடையாளம் கொடுக்கிறார்.. ஆதி 9: 9-17
அன்புக்குரியவர்களே புதிய வானமும் புதிய பூமியும் உண்டாக காத்திருக்கிறோம். வெளி 21
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment