கடிந்து கொள்ளுதல்..REBUKING..
ஷாலோம் சிந்தைகள் நிதானங்கள்..
கடிந்து கொள்ளுதல்..
REBUKING..
தியான வசனம்..
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
அவைகள்
@ உபதேசத்துக்கும்,
@ கடிந்து கொள்ளுதலுக்கும்
@ சீர்திருத்தலுக்கும்,
@ நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:17
கடிந்து கொள்ளுதல் இரண்டு பேருக்கும் கஷ்டத்தை கொண்டு வரும்.. கடிந்து கொள்பவர்.. கடிந்து கொள்ளப்படுகிறவர்..
ஆனால் வேதம் கூறுகிறது..
கடிந்து கொள்பவர் கர்த்தர்..
கடிந்து கொள்ளும் ஊடகம் வேதம்..
__________________________
கடிந்து கொள்ளுதல் பற்றிய சத்தியங்கள்..
கடிந்து கொள்ளுதலை வெறுக்க கூடாது..
1. வெறுக்கிறவர்கள் மிருக குணம் உள்ளவர்கள்..
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்: கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருகக்குணமுள்ளவன்.
நீதிமொழிகள் 12:1
2. வெறுக்கிறவன் சாவான்..
வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
நீதிமொழிகள் 15:10
3. பரியாசக்கரன் நேசியான்..
பரியாசக்காரன் தன்னைக் கடிந்து கொள்ளுகிறவனை நேசியான்: ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
நீதிமொழிகள் 15:12
__________________________
கடிந்து கொள்ளுதலினால் பிரயோஜனம்..
1. கனமடைவான்..
புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.
நீதிமொழிகள் 13:18
2. விவேகம் அடைவான்..
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
நீதிமொழிகள் 15:5
3. ஞானமடைவான்..
புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்: கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
நீதிமொழிகள் 15:32
4. அறிவுள்ளவன்.
பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
நீதிமொழிகள் 19:25
5. பிரம்பும் கடிந்து கொள்ளுதலும்..
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
நீதிமொழிகள் 29:15
6. வெளிப்படையான கடிந்து கொள்ளுதல்..
மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
நீதிமொழிகள் 27:5
__________________________
சபையின் தலைமத்துவம் அறிந்து கொள்க..
1. *விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி* , நீ அவர்களை கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.
தீத்து 1. 14
2. *இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள்.* ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக. தீத்து 2.15
3. மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, *பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.*
1 தீமோத்தேயு 5.20
4. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. *எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.*
2 தீமோத்தேயு 4.2
_________________________
சிந்தனை :
செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியம் என்ன ?
யோபு 6. 25
என் சகோதரரே..
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
நீதிமொழிகள் 29:1
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
வெளிப்படுத்தினத விசேஷம் 3. 19
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Comments
Post a Comment