சபையின் சத்தியங்கள்..சபையில் அனைவரும் ஒரே அவயவங்கள் ( members )...யூதராயினும்.. கிரேக்கராயினும்..
சபையின் சத்தியங்கள்..
சபையில் அனைவரும் ஒரே அவயவங்கள் ( members )
யூதராயினும்.. கிரேக்கராயினும்..
1. ஒரே சரீரத்தில் ஞானஸ்நானம்.. ஒரே ஆவியில் தாகம்தீர்க்கப்பட்டோம்..
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
1 கொரிந்தியர் 12:13
2. யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை, எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
ரோமர் 10:12
3. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்..
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
கொலோசெயர் 3:11
4. கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:28
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment