*சமீபமான தேவன்..* *THE LORD IS NEAR...*
*சமீபமான தேவன்..*
*THE LORD IS NEAR...*
தியான வசனம் :
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம் அவர் நமக்குச் *சமீபமாயிருக்கிறதுபோல* , தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?
உபாகமம் 4:7
For what nation is there so great, who hath God so nigh unto them, as the LORD our God is in all things that we call upon him for?
Deuteronomy 4:7
__________________________
முதலாவது கர்த்தருடைய வார்த்தை சமீபம்..
நாம் கீழ்ப்படிய...
நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் *சமீபமாய்* உன் வாயிலும் உன் இருதயத்ததிலும் இருக்கிறது,
உபாகமம் 30. 14
__________________________
இரண்டாவது கர்த்தருடைய நாமம் சமீபம்...
ஜனங்கள் இரட்சிக்கப்பட...
உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம், உமது நாமம் *சமீபமாயிருக்கிறதென்று* உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.
சங்கீதம் 75. 1
நம்முடைய தேசத்தில் மகிமைவாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் *சமீபமாயிருக்கிறது* .
சங்கீதம் 85. 9
__________________________
மூன்றாவது கர்த்தருடைய நீதி சமீபம்..
நாம் பாதுகாக்கப்பட..
என் நீதி *சமீபமாயிருக்கிறது* , என் இரட்சிப்பு வெளிப்படும், என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும், தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.
ஏசாயா 51. 5
என்னை நீதிமானாக்குகிறவர் *சமீபமாயிருக்கிறார்* , என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
ஏசாயா 50. 8
__________________________
நான்காவது கர்த்தருடைய சமாதானம் சமீபம்..
நாம் குணமாக்கப்பட ..
தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின்பலனைச் சிருஷ்டிக்கிறேன், அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 57. 19
அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், *சமீபமாயிருந்த* அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
எபேசியர் 2. 27
__________________________
ஐந்தாவது கர்த்தருடைய இரட்சிப்பு சமீபம்..
நாம் அனுதினம் பரிசுத்தமாக்கப்பட ..
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படிநடக்கவேண்டும், நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு *சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும்* இப்பொழுது அது நமக்கு அதிக *சமீபமாயிருக்கிறது* .
ரோமர் 13. 11
__________________________
ஆறாவது கர்த்தருடைய இரத்தம் சமீபம்..
நாம் கிறிஸ்துவுடன் நெருங்கி சேர..
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே *சமீபமானீர்கள்* .
எபேசியர் 2. 13
__________________________
ஏழாவது கர்த்தரே சமீபம்..
நம் சாந்த குணத்தை வெளிப்படுத்த..
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் *சமீபமாயிருக்கிறார்* .
பிலிப்பியர் 4. 5
__________________________
எட்டாவது கர்த்தருடைய வருகை சமீபம்..
நம் இருதயம் ஸ்திரப்பட..
நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். கர்த்தரின் வருகை *சமீபமாயிருக்கிறதே* .
யாக்கோபு 5. 8
எல்லாவற்றிற்கும் முடிவு *சமீபமாயிற்று* . ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
1 பேதுரு 4. 7
_______________________________
சகோதரரே..
சமீபமாக இருக்கிற பகல் ( தேவ கிருபை )
இரவு சென்றுபோயிற்று, பகல் *சமீபமாயிற்று* , ஆகையால் அந்தகாரத்தின்கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
ரோமர் 13. 12
நாட்கள் ( தேவ அனுக்கிரகம் ) சமீபம்..
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது *சமீபித்துவருகிறதை* எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
எபிரேயர் 10. 25
“The Lord is near to all who call on him, to all who call on him in truth” is a verse from Psalm 145 that means God is close to those who call on him with sincerity and open hearts:
*Sincerity* : God is more likely to respond to those who call on him with truth in their hearts and words.
*Openness* : God looks for those who are open to divine direction and help.
*Willingness* to listen: God is willing to listen and respond with grace and help.
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment