ஆரோன் சுமக்க வேண்டிய அக்கிரமங்கள்..INIQUITIES TO BEAR BY AARON..ஆராதனை தியானம்
ஆராதனை தியானம்..
ஆரோன் சுமக்க வேண்டிய அக்கிரமங்கள்..
INIQUITIES TO BEAR BY AARON..
ஆரோன்.. பிரதான ஆசாரியன்.
இயேசு கிறிஸ்து.. மகா பிரதான ஆசாரியன்.
1. பரிசுத்த ஸ்தலத்தைப் பற்றிய அக்கிரமம்..
INIQUITY OF HOLY SANCTUARY..
பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும், எண் 18.1a
And the LORD said unto Aaron, Thou and thy sons and thy father's house with thee shall bear the iniquity of the sanctuary:
2. ஆசாரிய ஊழியத்தைப் பற்றிய அக்கிரமம்..
INIQUITY OF PRIESTHOOD..
நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.
எண்ணாகமம் 18:1b
and thou and thy sons with thee shall bear the iniquity of your priesthood.
Numbers 18:1b
3. பரிசுத்தமானவைகளின் தோஷம்..
INIQUITY OF HOLY THINGS..
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக. கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின்மேல் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 28:38
And it shall be upon Aaron's forehead, that Aaron may bear the iniquity of the holy things, which the children of Israel shall hallow in all their holy gifts; and it shall be always upon his forehead, that they may be accepted before the LORD.
Exodus 28:38
-------------------------------
அக்கிரமம் சுமந்து சாகாமல் இருக்க எதை தரிக்க வேண்டும்?
உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக.
ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும். இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.
யாத்திராகமம் 28:41-43
-------------------------------
இயேசு கிறிஸ்து சுமந்த அக்கிரமத்தின் ரகசியங்கள்..
MYSTERIES OF INIQUITIES BORNE BY JESUS..
1. உலகத்தின் பாவம்..
SIN OF THE WORLD..
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
யோவான் 1:29
The next day John seeth Jesus coming unto him, and saith, Behold the Lamb of God, which taketh away the sin of the world.
John 1:29
2. நம்முடைய பாவங்கள்..
OUR SINS..
அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை.
1 யோவான் 3:5
And ye know that He was manifested to take away our sins; and in him is no sin.
1 John 3:5
3. சர்வ லோகத்தின் பாவம்..
SIN OF THE WHOLE WORLD..
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
1 யோவான் 2:2
2 And He is the propitiation for our sins: and not for ours only, but also for the sins of the whole world.
1 John 2:2
4. பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைக்க..
DEAD TO SINS.. LIVE TO RIGHTEOUSNESS ..
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
1 பேதுரு 2:24
Who his own self bare our sins in his own body on the tree, that we, being dead to sins, should live unto righteousness: by whose stripes ye were healed.
1 Peter 2:24
5. நம்முடைய துக்கங்கள்..
OUR GRIEFES..
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
ஏசாயா 53:4
Surely He hath borne our griefs, and carried our sorrows: yet we did esteem him stricken, smitten of God, and afflicted.
Isaiah 53:4
6. சுமப்பது இயேசு கிறிஸ்து தாமே..
JESUS THE ONLY BEARER OF INIQUITIES..
அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார், என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார், அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
ஏசாயா 53:11
He shall see of the travail of his soul, and shall be satisfied: by his knowledge shall my righteous servant justify many; for He shall bear their iniquities.
Isaiah 53:11
7. சுமப்பதின் பலன்
PORTION OF GREAT..
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
ஏசாயா 53:12
Therefore will I divide him a portion with the great, and He shall divide the spoil with the strong; because He hath poured out his soul unto death: and He was numbered with the transgressors; and He bare the sin of many, and made intercession for the transgressors.
Isaiah 53:12
ஆராதனை சிந்தனை..
சிலுவை சுமக்க வேறொருவர் பலவந்தம்...
சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பல வந்தம்பண்ணினார்கள்.மாற்கு 15. 21
கிறிஸ்து தம்முடைய சிலுவையை தாமே சுமந்தார்..
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்
யோவான் 19.17
ஆராதனை வேளையில் சுவிசேஷம்..
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்
மத்தேயு 11:28-30
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment