*தன் சகோதரன்...* *HIS BROTHER..*


*தன் சகோதரன்...* 
 *HIS BROTHER..* 

கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..

தியான வசனம் :

தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, 
ஒருவனாவது, *தன் சகோதரன்* அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, 
எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. 
அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது, அது ஒரு போதும் முடியாது. 
சங்கீதம் 49:6-9

@ *தன் சகோதரன்* ஆத்ம மீட்பு அருமையானது என்று அறிந்து மூத்த சகோதரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீட்கும் பொருளாக தன்னையே கொடுக்கிறார்..
_______________________________

@ ஆதியில் இருந்து *தன் சகோதரன்* பகைக்கப்படுகிறான்..

காயீன் *தன் சகோதரனாகிய* ஆபேலோடே பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் *தன் சகோதரனாகிய* ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
ஆதியாகமம் 4. 8

@ ஆனால் கிறிஸ்துவுக்கு நிழலான யோசேப்பு தன்னை பகைத்த *தன் சகோதரர்களை* அறிந்து கொள்கிறான்..

யோசேப்பு அவர்களைப் பார்த்து, *தன் சகோதரர்* என்று அறிந்துகொண்டான். அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்.
ஆதியாகமம் 42. 7

@ நியாயப்பிரமானம் *தன் சகோதரர்* பற்றிய நிறைய பிரமாணங்கள் குறிப்பிடுகிறது..

அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள், சாட்சி கள்ளச்சாட்சி என்றும், *தன் சகோதரன்மேல்* அபாண்டமாய்க் குற்றஞ்சாட்டினான் என்றும் கண்டால்,
உபாகமம் 19. 18

@ சேனைகளையுடைய கர்த்தர் *தன் தன் சகோதரன்* பற்றி கூறுவது :

 சேனைகளையுடைய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் *தன்தன் சகோதரனுக்குத்* தயவும் இரக்கமும் செய்து,
சகரியா 7. 9

@ முதலாவது *தன் சகோதரனுக்கு* ஆண்டவரை அறிமுகம் செய்ய வேண்டும்..

அவன் முதலாவது *தன் சகோதரனாகிய* சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான், மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
யோவான் 1. 41

@ *தன் சகோதரன்* மனைவி பற்றிய பழைய மற்றும் புதிய பிரமாணம்..

ஒருவன் *தன் சகோதரன்* மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம், *தன் சகோதரனை* நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.
லேவியராகமம் 20. 22

தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், 
1 தெசலோனிக்கேயர் 4:4

 உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: 
1 தெசலோனிக்கேயர் 4:5

 இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் *தன் சகோதரனை* வஞ்சியாமலும் இருக்கவேண்டும். முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
1 தெசலோனிக்கேயர் 
4. 6

@ *தன் சகோதரனைக்* குற்றப்படுத்துகிறவன்

சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, *தன் சகோதரனைக்* குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.
யாக்கோபு 4. 6
__________________________

@ *தன் சகோதரனை பகைத்தால்?* 

1. இன்னும் இருளில் இருக்கிறோம் !!!!

 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
1 யோவான் 2. 9

2. தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறோம் !!!! .

 தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
1 யோவான் 2.11

3. தேவனால் உண்டானவனல்ல என்று அறிகிறோம் !!!! .

 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
1 யோவான் 3.10

4. தன் கிரியைகளே பொல்லாதவைகள் 
         !!!!"

பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.1 யோவான் 3. 12

5. மனுஷ கொலைபாதகனாயிருக்கிறோம் !!!!

தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
1 யோவான் 3.15

6. தேவஅன்பு நிலைகொள்ளுகிறதில்லை என்றறிகிறோம் !!!!

ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
1 யோவான் 3.17

7. நாம் பொய்யன் !!!!

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான் 4. 20
_______________________________

 *@ கிறிஸ்துவின் பிரதான கற்பனை :* 

தேவனிடத்தில் அன்புகூருகிறவன் *தன் சகோதரனிடத்திலும்* அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
1 யோவான் 4. 21

 *தன் சகோதரனிடத்தில்* அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
1 யோவான் 2. 10

இறுதியாக சகோதரரே :

தன் சகோதரன் தவறினால்?

மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை *தன் சகோதரன்* செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
1 யோவான் 5.16

சகோதரரே, ஒருவன் ( தன் சகோதரன் ) யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. 
கலாத்தியர் 6:1

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
TCBA TUTICORIN 
shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA