CHURCH ORDINANCES..சபையின் நெறிமுறைகள்..ஸ்திரிகள் பொறுப்பு.


SHALOM STEWARD THOUGHTS 

CHURCH ORDINANCES..
சபையின் நெறிமுறைகள்..

 சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசாமலிருக்கக்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது. 
1 கொரிந்தியர் 14:34

 Let your women keep silence in the churches: for it is not permitted unto them to speak; but they are commanded to be under obedience as also saith the law. 
1 Corinthians 14:34

1 கொரி 11.5 ன் படி ஸ்திரிகள் ஜெபம், தீர்க்கதரிசனம் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் தங்கள் தலை மூடிக்கொள்ள வேண்டும் என்று கட்டளை..
 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரியும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள். அது அவளுக்கு தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. 
1 கொரிந்தியர் 11:5

அப் 2.17-18, 21.9 ன் படி குமாரத்திகள் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்..

ஆனால் 1 தீமோ 2.12 ன் படி..
உபதேசம் அதாவது அதிகாரம் செலுத்துவது ( Doctrine means Authority ) சகோதரிகளுக்கு அனுமதி இல்லை..
காரணம் உபதேசம் அதிகாரத்தை காட்டுகிறது.. சகோதரிகள் உபதேசம் சபையில் வழங்கும் போது மறைமுகமாக புருஷர்கள் மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள். இது வேதத்திற்கு முரண்..

ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்கவேண்டும். 
1 தீமோத்தேயு 2:12

மீண்டும் 1 கொரி 14.34 வாசியுங்கள்..

சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசாமலிருக்கக்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது. 
1 கொரிந்தியர் 14:34

வேதமும் அப்படியே சொல்லுகிறது..
வேதம் என்றால் ஆங்கிலத்தில் Law..
Law of Moses..
மோசேயின் பிரமாணம்..

மோசேயின் பிரமாணமும் கிறிஸ்துவும்..

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். 
மத்தேயு 5:17

 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம். 
மத்தேயு 7:12

 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. 
மத்தேயு 11:13

மோசே எழுதியபடி..
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். 
ஆதியாகமம் 3:16

பிரமாணம் சொல்லுகிறது ஸ்திரியை புருஷன் சகலத்திலும் ஆண்டு கொள்ளுவான்..
இது தேவ நியமம்..

To continue..

TCBA TUTICORIN 
Shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA