வேதத்தில் மனந்திரும்புதல்.. நொருங்குண்ட இருதயம் .. மனஸ்தாபம்..துக்கம்.
வேதத்தில் மனந்திரும்புதல்.. நொருங்குண்ட இருதயம் .. மனஸ்தாபம்..
துக்கம்..இந்த சொற்றொடர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது..
அதை Penitential என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது..
இரண்டு மனஸ்தாபத்தை பற்றி அப் பவுல் கூறுகிறார்..
இதை ஆரோக்கியமான துக்கம் என்று அழைக்கிறார்..
துக்கம் தேவ நியமம் அல்ல..
ஆனால் ஆரோக்கியமான துக்கம் அவசியம்..
பவுல் ரோமர் 9.1 ல் எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது,
ரோமர் 9:1
தேவனுக்கேற்ற துக்கம் vs லௌகிக துக்கம்..
ஒரு முறை மனஸ்தாபம் தான் Penitential..
தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது.
லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
2 கொரிந்தியர் 7:10
தேவனுகேற்ற துக்கத்தின் தொடர் நிகழ்வுகள்..
பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே. அது உங்களிடத்தில்.
1. எவ்வளவு ஜாக்கிரதையையும்,
2. குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும்,
3. எவ்வளவு வெறுப்பையும்,
4. எவ்வளவு பயத்தையும்,
5. எவ்வளவு ஆவலையும்,
6. எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், 7. எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று.
இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.
2 கொரிந்தியர் 7:11
7 Penitential Psalms..
7 மனஸ்தாபத்தின் சங்கீதங்கள்
6, 32, 38, 51, 102, 130, 143
இன்றைக்கு 51 ம் சங்கீதம் தியானிப்போம் .
1. SIN STAINS OUR SOUL
பாவம் நம் ஆத்துமாவை கறைப்படுத்தும்..
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
சங்கீதம் 51:2
2. SIN SATURATES OUR MIND
பாவம் நம் மனதை நிறை செறிவு செய்யும்..
என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
சங்கீதம் 51:3
3. SIN STINGS OUR CONSCIOUS
பாவம் நம் மனசாட்சியை நச்சுப்படுத்தும்..
தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன், நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
சங்கீதம் 51:4
4. SIN SADDENS OUR HEART
பாவம் இருதயத்தை துயரப்படுத்தும்..
நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
சங்கீதம் 51:8
5. SIN SICKENS OUR BODY
பாவம் நம் சரீரத்தை நோய்ப்படுத்தும்..
உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
சங்கீதம் 51:11
6. SIN SOURS OUR LIFE
பாவம் நம் ஜீவியத்தை கசப்பாக்கும்..
தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும், அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடும்.
சங்கீதம் 51:14
7. SIN STEALS OUR LIPS
பாவம் நம் உதடுகளைத் திருடும்..
ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும், அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
சங்கீதம் 51:15
பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன், தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
சங்கீதம் 51:16
Think 🤔..
when sin works out in you..
not able to praise
not able to worship
not able to witness
not able to sing ..
Dear ones..
Do you feel the weight of the sin you did lastly?
If not confess surely you will not feel the weight..
If we continue to live in holiness you will realise even the small weight of sin..
Confess you sin TODAY..
அன்பர்களே..
கடைசியாக நீங்கள் செய்த பாவத்தின் கனத்தை உணர்கிறீர்களா?
ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் எடையை உணர மாட்டீர்கள்.
நாம் தொடர்ந்து பரிசுத்தமாக வாழ்ந்தால், பாவத்தின் சிறிய பாரத்தை கூட உணர்வீர்கள்.
இன்று பாவத்தை ஒப்புக்கொள்..
தன் பாவங்களை
1. மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்: அவைகளை
2. அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
நீதிமொழிகள் 28:13
3. எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்:
4. தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
நீதிமொழிகள் 28:14
courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment