ஆபிரகாம் சந்தித்த நான்கு உயர்ந்த பரீட்சைகள்..சபைக்கு செய்தி
Youtube Exodus TV அருளுரை துளிகள்
https://youtu.be/tjY2rWVvNQ0?si=_PDLmZkMt50QS97X
ஆபிரகாம் சந்தித்த நான்கு உயர்ந்த பரீட்சைகள்..
ஆவிக்குரிய தகப்பன் ஆபிரகாம் சந்தித்த நான்கு உயர்ந்த பரீட்சைகள்.
ஆபிரகாம் விசுவாச மனிதனுக்கு ஒரு பாடமாக விளங்குகிறான்.
விசுவாச வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அடையாளமாக விளங்குகிறான்.
கலாத்தியர் 3. 7
விசுவாச மார்க்கத்தார்கள் யாவரும் ஆப்ரகாமின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
நாம் எல்லாரும் ஆபிரகாமின் பிள்ளைகள்.
யாராவது ஒருவர் உங்களிடம் நீங்கள் ஆண்டவராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் உங்கள் கஷ்டங்கள் சோதனைகள் எல்லாம் முடிந்துவிடும் என்றால் நம்ப வேண்டாம்.
தேவன் உங்கள் இருதயத்தை திறந்து இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்திற்கு உங்களை இழுக்கும்போது அல்லது விசுவாச வாழ்க்கை வாழ உங்களை தெரிந்து கொள்ளும்போது அங்கு ஒரு முரண்பாடு உருவாகிறது.
பயப்பட வேண்டாம்.
சாத்தான் உங்களை தன்னுடைய விருப்பத்துக்கு நேராக கீழே இழுக்கும்போது தேவன் தன்னுடைய சித்தத்துக்கு நேராக உங்களை உயர உயர்த்துகிறார்.
சாத்தான் நம்முடைய இருதயத்திற்குள் இருக்கும் பொல்லாத சிந்தனையை சிந்திக்க அல்லது வெளியே கொண்டு வர தூண்டுகிறான் அல்லது சோதிக்கிறான்.
தேவன் நம்முடைய நற்குணங்களை கட்டி வைக்கவும் கிறிஸ்துவின் நம்முடைய விசுவாசத்தை ஆளப்படுத்தவும் செயல்படுகிறார்.
அதற்காகவே தேவன் நம்மை பரீட்சிக்கிறார்.
இன்று நாம் ஆபிரகாமுடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலே நான்கு மிகப்பெரிய நெருக்கடிகள் அல்லது உயர்ந்த பரீட்சைகள் வந்ததை சிந்திக்கலாம்.
ஒவ்வொரு பரிட்சையிலும் அவன் தனக்கு மிக அன்பான தேவனுடன் அதிகமாக நெருகினதாக நாம் சிந்திக்கலாம்.
ஆபிரகாம் தன்னுடைய. ஆவிக்குரிய வாழ்க்கையில் சந்தித்த நான்கு மிகப்பெரிய உயர்ந்த பரிட்சையிலும் மூன்று விஷயங்களை அதாவது தேவன் விரும்பாத அல்லது தேவன் அனுமதிக்காத காரியங்களை அவன் விட்டு விடுகிறதை நீங்கள் இங்கு கவனிக்கலாம்.
முதலாவது பாவம்.
இரண்டாவது தன்னுடைய மாம்சம் மூன்றாவது தன்னுடைய சுயம்.
நான்காவது பரீட்சையில் தன்னுடைய முழுமையும் அர்ப்பணிக்கிறான் .
1. பாவம் ( ஆதி 12 )
2. மாம்சம் ( ஆதி 13 )
3. சுயம் ( ஆதி 21 )
4. முழுமை ( ஆதி 22 )
1. பாவம் ( ஆதி 12 )
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
ஆதியாகமம் 12:1
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
ஆதியாகமம் 12:2
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
ஆதியாகமம் 12:3
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
ஆதியாகமம் 12:4
தேவன் அழைக்கும் போது முதலாவது களைந்து விட வேண்டியது பாவம் ஆகும்.
2. மாம்சம் ( ஆதி 13 )
அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
ஆதியாகமம் 13:11
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
ஆதியாகமம் 13:14
நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
ஆதியாகமம் 13:15
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன். ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
ஆதியாகமம் 13:16
நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்துதிரி. உனக்கு அதைத் தருவேன் என்றார்.
ஆதியாகமம் 13:17
அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான
ஆதியாகமம் 13:18
அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
ரோமர் 8:5
மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
ரோமர் 8:6
எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக்கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
ரோமர் 8:7
மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
ரோமர் 8:8
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
ரோமர் 8:9
3. சுயம் ( ஆதி 21 )
பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணகிறதைச் சாராள் கண்டு,
ஆதியாகமம் 21:9
ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்.
ஆதியாகமம் 21:10
தன் மகனைக்குறித்தச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.
ஆதியாகமம் 21:11
அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்கவேண்டாம். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
ஆதியாகமம் 21:12
அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
ஆதியாகமம் 21:13
30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5
43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். யோவான் 5
17 அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். யோவான் 7
18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. யோவான் 7
28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள், நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். யோவான் 7
28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். யோவான் 8
42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன், நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். யோவான் 8
4. முழுமை ( ஆதி 22 )
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார். எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார். அவன்: இதோ அடியேன் என்றான்.
ஆதியாகமம் 22:1
அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
ஆதியாகமம் 22:2
மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்
எபிரேயர் 11:17
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
எபிரேயர் 11:18
தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
எபிரேயர் 11:19
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment