பேதுரு தன்னுடன் இணைந்திருக்க இயேசு கிறிஸ்துவின் 7 அணுகுமுறை..


SHALOM STEWARD THOUGHTS DISCERNS

====================

 *7 Lord's approach in Peter's abide..* 

பேதுரு தன்னுடன் இணைந்திருக்க இயேசு கிறிஸ்துவின் 7 அணுகுமுறை..

====================

1. *The Lord's look..* 

 _ஆண்டவருடைய பார்வை.._ 

அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, 
லூக்கா 22:61

2. *The Lord's prayer..* 

 _ஆண்டவருடைய விண்ணப்பம்_ .. 

நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். 
லூக்கா 22:32

3. *The Lord's choice..* 

 _ஆண்டவருடைய தேர்வு.._ 

ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,
மத்தேயு 17.1

4. *The Lord's rebuke..* 

 _ஆண்டவருடைய கடிந்து கொள்ளுதல்_ .. 

அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் படடயத்தை உறையிலேபோடு, பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
யோவான் 18.11

5. *The Lord's personal message* ...

 _ஆண்டவருடைய தனிப்பட்ட செய்தி.._ 

நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய், உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 
மாற்கு 16:7

6. *The Lord's reappearance* .. 

 _ஆண்டவருடைய மறு பிரசன்னம்.._ 

கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு, 
லூக்கா 24:34

7. *The Lord's unending love..* 

 _ஆண்டவருடைய முடிவில்லாத அன்பு_ .. 


மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 
யோவான் 21:17

 *Closing thought..* 

 *Peter abideth in Lord Jesus..* 

 _இயேசு கிறிஸ்துவுடன் பேதுரு இணைந்திருந்தான்_ .. 

பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள்

 _இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்._ 
அப்போஸ்தலர் 4:13


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA