சபையின் சத்தியங்கள்... சபையில் 3 வித ஜனங்களை கர்த்தர் சேர்க்கிறார்..
சபையின் சத்தியங்கள்..
1. சபையில் 3 வித ஜனங்களை கர்த்தர் சேர்க்கிறார்..
1. யூதர்கள்.. (மகிமை)
2. புறஜாதிகள்.. (ஒளி)
3. எல்லா ஜனம்..(இரட்சணியம்)
சிமியோன் விவரித்துக் கூறுவதை கவனியுங்கள்..
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
லூக்கா 2:32
2. சபை தமது நாமத்திற்காக தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு ஜனம்..
தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.
அப்போஸ்தலர் 15:14
3. சபையில் கர்த்தரே
ஆத்துமாக்களை சேர்க்கிறார்..
தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள்.இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார்.
அப்போஸ்தலர் 2:47
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 2:41
திரளான புருஷர்களும் ஸ்திரிகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 5:14
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
THE CHRISTIAN BELIEVERS ASSEMBLY TUTICORIN 3
Comments
Post a Comment