வேதத்தில் திரியேக தேவனை பற்றிய ஏழு வேத பகுதிகள் ..TRINITY PASSAGES IN THE BIBLE..
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
வேதத்தில் ஏழு திரியேக தேவனை பற்றிய வசனங்கள்..
திரித்துவம் TRINITY என்ற வார்த்தை பதம் வேதத்தில் இல்லை..
ஆனாலும் திரியேக தேவனை நாம் விசுவாசிக்கிறோம்..
The word Trinity is not in the Bible but the truth that God is three and one is biblical. The doctrine of the Trinity is not presented explicitly in Scripture but it is clearly derived implicitly. The formal creedal doctrine of the Trinity did take a few centuries to define and defend.
திரித்துவம் என்ற வார்த்தை பைபிளில் இல்லை, ஆனால் கடவுள் மூன்று மற்றும் ஒருவர் என்பது பைபிளில் உள்ள உண்மை. திரித்துவக் கோட்பாடு வேதத்தில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை, ஆனால் அது மறைமுகமாகத் தெளிவாகப் பெறப்பட்டது. திரித்துவத்தின் முறையான நம்பிக்கைக் கோட்பாடு வரையறுக்கவும் பாதுகாக்கவும் சில நூற்றாண்டுகள் எடுத்தது.google trans
The Father, Son, and Holy Spirit are distinct Persons.
The Bible speaks of the
Father as God (Phil. 1:2),
Jesus as God (Titus 2:13), and the Holy Spirit as God (Acts 5:3-4).
பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்கள் வித்தியாசமான நபர்கள்.
பைபிள் பற்றி பேசுகிறது
தந்தை கடவுளாக (பிலி. 1:2),
இயேசு கடவுளாக (தீத்து 2:13), பரிசுத்த ஆவியானவர் கடவுளாக (அப்போஸ்தலர் 5:3-4). Google trans
7 வசன பகுதிகளில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர்..
1. வார்த்தை என்கிற தொடர்பில்..
In relation to the WORD
கர்த்தருடைய *ஆவியானவர்* என்னைக்கொண்டு பேசினார். அவருடைய வசனம் என் நாவில் இருந்தது. இஸ்ரவேலின் *தேவனும்* இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் *துரைத்தனம் பண்ணுகிறவர்* இருப்பார்.
2 சாமுவேல் 23:2-3
__________________________
2. உலக அஸ்திபாரம் தொடர்பில்..
In relation to the foundation of the WORLD
யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவி கொடு, *நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.*
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது, நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள், நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை, அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன், இப்பொழுதோ *கர்த்தராகிய ஆண்டவரும்,* *அவருடைய ஆவியும்* என்னை அனுப்புகிறார்.
ஏசாயா 48:12,13,16
__________________________
3. நன்மைகள் தொடர்பில்..
In relation to the GOODNESS
*கர்த்தர்* எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன். அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார், *அவருடைய சமுகத்தின் தூதனானவர்* அவர்களை இரட்சித்தார், அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச்சுமந்துவந்தார்.
அவர்களோ கலகம்பண்ணி, *அவருடைய பரிசுத்த ஆவியை* விசனப்படுத்தினார்கள், அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.
ஏசாயா 63:7,9,10
__________________________
4. ஊழியம் தொடர்பில்..
In relation to MINISTRY
அப்பொழுது *இயேசு* சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, *பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே* அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
மத்தேயு 28:18-20
__________________________
5. ஞானஸ்னானம் தொடர்பில்..
In relation to BAPTISM
அந்த நாட்களில், *இயேசு* கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து,யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,வானம்திறக்கப்பட்டதையும், *ஆவியானவர்* புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும்,நீர் என்னுடைய நேசகுமாரன்,உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, *வானத்திலிருந்து ஒரு சத்தம்* உண்டாயிற்று.
மாற்கு 1:9-11
__________________________
6. வாழ்த்துதல் தொடர்பில்..
In relation to BENEDICTION
*கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய* கிருபையும், *தேவனுடைய அன்பும்,* *பரிசுத்த ஆவியினுடைய* ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
2 கொரிந்தியர் 13:14
__________________________
7. விசுவாசம் சாட்சி தொடர்பில்
In relation to FAITH & WITNESS
*இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று* விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
*இயேசுகிறிஸ்துவாகிய* இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். *ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே* சாட்சிகொடுக்கிறார். (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். *பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி* என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஐலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
1 யோவான் 5:6-8
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment