*ஆராதிக்கும் தேவன்..* *ஆராதனை செய்கிறவன்* .. =======================



*SHALOM STEWARD THOUGHTS DISCERNS* 

 *TABLE REMEMBRANCE THOUGHT* 

 _மேஜை நினைவுகூறுதலின் தியானம்.._ 

=======================

  *ஆராதிக்கும் தேவன்..* 

 *ஆராதனை செய்கிறவன்* .. 

=======================

 *ஆராதிக்கும் தேவன்..* 

♥️1. *தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்* ..

நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
தானியேல் 3.17

♥️2. *உன்னைத் தப்புவிப்பார்..* 

அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான்.
தானியேல் 6.26

ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரச்சத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு, தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.
தானியேல் 6.20

♥️3. *ஸ்தோத்திரிக்கப்பட்டவர்* .. 

உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
2 தீமோத்தேயு 1.4

=======================

 *ஆராதனை செய்கிற பழைய ஏற்பாடு  ஆசாரியன்..* 

🌺1. _ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறான்_ .. 

அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் *ஆராதனை செய்கிறவனாயும்* , பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். 
எபிரேயர் 10:11

🌺2. _மனச்சாட்சியைப் பூரணப்படுத்தாது._ . 

அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் *ஆராதனை செய்கிறவனுடைய* மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். 
எபிரேயர் 9:9

🌺3. _பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி தொடரும்._ . 

 பூரணப்படுத்துமானால், *ஆராதனை செய்கிறவர்கள்* ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? 
எபிரேயர் 10:2

🌺4.  ( _பலிபீடத்துக்_ ) _அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்கு அதிகாரமில்லை_ 

நமக்கு ஒரு பலீபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் *ஆராதனை செய்கிறவர்களுக்கு* அதிகாரமில்லை. 
எபிரேயர் 13:10

எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, *அந்தப் பலி புசிக்கப்படலாகாது* , அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும். 
லேவியராகமம் 6:30

🌺5. _சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.._ 

 இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், *சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல* . 
எபிரேயர் 9:10

=======================

 *ஆராதனை செய்கிற புதிய ஏற்பாடு விசுவாசிகள்* .. 

🤝1. _ஆவியோடும் உண்மையோடும்_ ..

உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை *ஆவியோடும் உண்மையோடும்* தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 
யோவான் 4:23

🤝2. _பயத்தோடும் பக்தியோடும்_ ..

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் *பயத்தோடும் பக்தியோடும்* தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
எபிரேயர் 12.28

🤝3. _சுத்த இருதயத்தோடே.._ 

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, *சுத்த இருதயத்தோடே* கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
2 தீமோத்தேயு 2.22

🤝4. _ஒருமனப்பட்டு_ ..

அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு *ஆராதனை செய்யும்படிக்கு* , நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.
செப்பனியா 3.9

நீங்கள் *ஒருமனப்பட்டு* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை *ஒரே வாயினால்* மகிமைப்படுத்தும்படிக்கு,
ரோமர் 15.5

🤝5. _புத்தியுள்ள ஆராதனை..._ 

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க *புத்தியுள்ள ஆராதனை.* 
ரோமர் 12:1
  *ஆராதிக்கும் தேவன்..* 

 *ஆராதனை செய்கிறவன்* .. 

=======================
🤝6. _ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை_ 

 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், *ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து* , கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
பிலிப்பியர் 3.3

=======================

 *ஆராதனை செய்கிறவர்கள் தவிர்க்க வேண்டியவைகள்* .. 

⚠️1. _தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனை.._ 

 மாயமான தாழ்மையிலும், *தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும்* விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புப்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
கொலோசெயர் 2.19

⚠️2. _சுயஇஷ்டமான ஆராதனை.._ 

இப்படிப்பட்ட போதனைகள் *சுயஇஷ்டமான ஆராதனையையும்* , மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
கொலோசெயர் 2.23

shalomsteward1@gmail.com
whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA