SHALOM BIBLICAL REVELATIONS வரையறுக்கப்பட்ட பரிகாரத்தின் இறையியல் வேதத்தின்படி தவறானது...
SHALOM BIBLICAL REVELATIONS
வரையறுக்கப்பட்ட பரிகாரத்தின் இறையியல் வேதத்தின்படி தவறானது...
கிறிஸ்து இயேசு குறிப்பிட்ட சிலருக்காக அதாவது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக மட்டுமே மரித்தார் என்கிற வரையறுக்கப்பட்ட பரிகாரம் வேதத்துக்கு முரணானது..
THE THEOLOGY OF LIMITED ATONEMENT IS BIBLICALLY WRONG
தியான வசனம்..
கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்தார் என்று நிதானிக்கிறோம்
THUS WE JUDGE.. JESUS DIED FOR ALL
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும், பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:14-15
ஏன் இவ்வாறு நிதானிக்கிறோம்?
எல்லாரும் பாவம் செய்து, எல்லாரும் தேவ மகிமை இழந்து, எல்லாரும் மீட்கப்படவே தேவன் இரட்சிப்பின் திட்டத்தை இயற்றினார்..
__________________________
ஏன் இரட்சிப்பு எல்லாருக்கும் வேண்டும்?
வேதத்தின்படி சத்தியங்களை சிந்திப்போம்..
__________________________
இவ்வுலகில் தோன்றினாவர்கள் இனி தோன்றுபவர்கள் எல்லாரும் பாவிகளா? ஆம்
1. நாமெல்லாரும் வழி தப்பி.. ஏசாயா 53.6
2. எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு.. ரோமர் 5.18
3. எல்லாரும் வழி தப்பி.. ரோமர் 3.10-12
4. எல்லாரும் பாவம் செய்து.. ரோமர் 3.23
5. மரணம் எல்லாருக்கும் வந்தது.. ரோமர் 5.12
__________________________
எல்லாருக்கும் இரட்சிப்பு தேவனால் திட்டமிடப்பட்டதா? ஆம்
1. எல்லா ஜனத்துக்கும் நற்செய்தி.. லுக் 2.10
2. சகல ஜனங்களுக்கும் ஆயத்தம் பண்ணின இரசட்சணியம்.. லுக் 2.31-32
3. இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற.. யோவான் 1.29
4. எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளி.. யோவான் 1.7
5. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்.. 1 தீமோ 2.4
__________________________
கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்தாரா? ஆம்
1. அவர் எல்லாருக்காகவும் மரித்தார்.. 2 கொரி 2.15
2. எல்லாரையும் மீட்கும் பொருளாக தம்மை தாமே.. 1 தீமோ 2.6
3. சர்வ லோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற.. 1 யோவான் 2.2
4. குமா ரனை உலக இரட்சகராக பிதா அனுப்பினார். 1 யோவான் 4.14
5. ஒவ்வொருவருக்காக மரணத்தை ருசி பார்த்தார்.. எபி 2.9
__________________________
எல்லாரும் இரட்சிக்கப்பட அழைப்பு கொடுக்கப்படுகிறதா? ஆம்
1. வருத்தப்பட்டு பாரம் சுமக் கிற யாவரும்.. மத் 11.28
2. எல்லாரும் மனந்திரும்ப தேவன் நீடிய பொறுமை..
2 பேது 3.9
3. தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல.. அப் 10.34
4. மனந்திரும்ப எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும்.. அப் 17.30
5. இரட்சிப்பின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்க.. அப் 17.31
6. எல்லார் மேலும் இரக்கமா யிருக்க.. ரோமர் 11.32
7. எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்க.. தீத்து 2.11
8. எல்லாரையும் என்னிடத்தில் இழுத்து.. யோவான் 12.32
__________________________
அப்படியென்றால் ஏன் அநேகர் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை?
தேவன் தள்ளி விடுபவரா?
தேவனுடைய தெரிந்து கொள்ளுதலும் தேவனுடைய தள்ளிவிடுதலும் அவருடைய சர்வ ஞானம் ..
God’s election & God’s reprobation are His sovereignty
தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:
ரோமர் 11:2
தள்ளிவிடுதல் நிரந்தரம் அல்ல..
அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது, மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?
ரோமர் 11:15
@ ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத ஜனங்களின் எதிர்க்கும் குணங்களும் கடின இருதயமும் காரணம்..
நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன்.
ஏசாயா 65. 2
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
நீங்கள் சீர்திருத்த இறையியலின் ஐந்து கோட்பாடுகளுள் ஒன்றான 'குறிப்பிட்டோருக்கான பரிகார பலி / Limited Atonement' என்ற சத்தியத்தை தவறு என்று எழுதியிருக்கிறீர்கள். இங்கே நீங்கள் பதிவிட்டிருக்கும் எந்த வசனமும் இந்த கோட்பாட்டை தவறு என்று நிரூபிக்கவில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் முறைப்படுத்தப்பட்ட இறையியலை படிக்கவில்லை என்றும், வசனத்தை அதன் முன்பின் வசனங்களோடு பொருத்திப் பார்க்கத் தெரியவில்லை என்றும் காட்டுகிறது.
ReplyDeleteதயவுசெய்து என் ஒரு சில கேள்விகளுக்கு விடையளியுங்கள். அப்போது, நீங்கள் பதிவிட்டிருப்பது ஏற்புடையது என்று நான் ஒத்துக்கொள்ளுவேன்.
கேள்வி 1. தேர்ந்தெடுத்தல் என்றால் என்ண? (Definition) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார்?
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று ஒரு சிறு கூட்டம் உண்டு என்றால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ற ஒரு கூட்டம் இருக்க வேண்டுமே.
கேள்வி 2. தேவன் உலகில் ஏனைய மக்களைவிட இஸ்ரவேல் மக்களை விசேஷமான மக்களாக பாவித்து தன்னுடைய மக்கள் என்று சொன்னது உன்மையா? ஏன் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் தன்னை தேவனாக வெளிப்படுத்தி பிரமாணங்களை எழுதிக்கொடுத்தார்? ஏன் தேவன் எழுதிக்கொடுத்த பிரமாணங்கள் மற்ற இனத்தாருக்கு (அதாவது பூமியின் குடிகள் எல்லாருக்கும்) அனுப்பப்படவில்லை?
கேள்வி 3. எல்லாரும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களா?
(அல்லது) குறிப்பிட்ட சிலர் அடங்கிய ஒரு கூட்டம் மாத்திரம் தெரிந்துகொள்ளப்பட்டதா? (இஸ்ரவேல் / சபை)
கேள்வி 4. எல்லாரும் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்றால் தேவன் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமே இல்லையே?
(ஒரு ஓட்டெடுப்பில் எல்லாருக்கும் ஓட்டுப்போடுவேன் என்றால் ஓட்டெடுப்பு இல்லாமலே தேர்தலை முடித்துவிடலாம். ஆனால், அதில் குறிப்பிட்ட ஒருவரை தேர்ந்தெடுத்து தலைவராக்கவேண்டுமென்றால் ஓட்டெடுப்பு அவசியம்)
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர் மாத்திரமே என்று உங்களால் சொல்லமுடியுமா?
கேள்வி 4. இயேசு கிறிஸ்துவின் மரணம் உண்மையில் பாவமன்னிப்பை சிலுவையில் பெற்றுத்தந்ததா? அதாவது, உன்மையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் பூமியில் உள்ள எல்லாருடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மீது ஏற்றுக்கொண்டாரா? அவிசுவாசிகளுக்காகவும் இயேசு மரித்தது உண்மை என்றால், எல்லாரும் பரலோகம் வரவேண்டுமே. அவிசுவாசிகள் நரகம் செல்வார்கள் என்றால், ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் உண்டா?
இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.
வேதத்தை வியாக்கியானம் செய்யும்போது ஒரு வசனத்தை வெருமனே இங்கொன்றும் அங்கொன்றுமாக மேற்கோள் காட்டுவது ஏற்புடையது அல்ல. ஒரு வசனத்தை வியாக்கியானம் செய்கிறீர்கள் என்றால் அந்த வசனம் வேதத்தின் ஏனைய வசனங்களோடு பொருந்திப்போக வேண்டும் முரண்படக்கூடாது. வேத பாட வகுப்பில் மிக அடிப்படையாக Exegesis and Eisegesis என்ற வகுப்பு உண்டு.
உதாரனமாக 2 கொரி 5:14ல் "... அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம்." என்று பவுல் எழுதுகிறார்." இந்த வசனத்தை வெருமனே வாசித்தால், இயேசு பூமியில் வசிக்கின்ற எல்லா மனிதர்களுக்காகவும் மரித்தார் என்று புரிந்துகொள்ளக்கூடும். இப்போது இந்த வசனத்தை யோவான் 10:15,26-30 வசனங்களோடு ஒப்பீடு செய்து படித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உண்டாகிறது. இவ்வசனனகளில் இயேசு கிறிஸ்து தெளிவாக தன்னுடைய ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார் (யோவான் 10:15). பின் தன்னுடையதல்லாத ஆடுகளும் உண்டு என்ற மெய்மையை சொல்லுகிறார் (யோவான் 10:26-30).
இன்னும் ஒரு வசனத்தை மாத்திரம் மேற்கோல் காட்டுகிறேன். அது மத்தேயு 1:21 "...அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" இங்கே இயேசு கிறிஸ்து தமது மக்களாகிய ஒரு கூட்டத்தை இரட்சிக்கும்படி வந்ததாக தெளிவாக கர்த்தருடைய தூதன் பதிவிடுகிறார்.
அப்படியானால், 2 கொரி 5:14-15இல் வாசிக்கும் 'எல்லாரும்' என்ற வார்த்தை சபையில் அங்கத்துவம் வகிக்கிற கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டு இரட்சிப்பின் சுவிசேஷத்தை ஏற்ற எல்லாரையும் குறிக்கிறது என்பது விளங்கும்.
பேசினால் பேசிக்கொண்டே போகலாம். தயவுசெய்து வாதத்தை திசைதிருப்பாமல், நேரடியாக என் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் பதிலளியுங்கள். ஆக்கப்பூர்வமாக உறையாடலாம்.
தூய்மைவாதியான ஜான் ஓவன் அவர்கள் எழுப்பிய பகுப்பாய்வு கேள்விகள்.
ReplyDeleteகிறிஸ்து யாருக்காக மரித்தார்?
பிதாவானவர் தமது கடுங்கோபத்தை குமாரன் மீது செலுத்தியதும், குமாரன் அந்த ஆக்கினையை அனுபவித்ததும் கீழுள்ள மூன்றில் ஒன்றுக்காகத்தான் இருக்க முடியும்:
குறிப்பு 1. எல்லா மனிதர்களுடைய எல்லா பாவங்களுக்காகவும்
குறிப்பு 2. குறிப்பிட்ட சில மனிதர்களுடைய எல்லா பாவங்களுக்காகவும்
குறிப்பு 3. எல்லா மனிதர்களுடைய சில பாவங்களுக்காக
இம்மாதிரியான சூழலில் நாம் கவணிக்க வேண்டிய விஷயம்:
அ. கடைசி குறிப்பு சரியாக இருந்தால், எல்லா மனிதர்களும் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய சில பாவங்கள் மீதம் உள்ளது. அப்படியானால் யாரும் இரட்சிக்கப்படவில்லை என்றாகிவிடும்.
ஆ. இரண்டாம் குறிப்பு சரியாக இருந்தால், கிறிஸ்து தெரிந்துகொள்ளப்பட்ட எல்லாருடைய எல்லா பாவங்களுக்காகவும் பாடுபட்டார். இதுவே சத்தியம்.
இ. முதல் குறிப்பு சரியாக இருந்தால், ஏன் எல்லா மனிதர்களும் அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனையிலிருந்து விடுதலையடையவில்லை. அவர்களுடைய விசுவாசமின்மை தான் காரணம் என்று நீங்கள் பதிலளிக்கிறீர்கள். நான் கேட்கிறேன், அவர்களுடைய அவிசுவாசம் பாவம்தானே? அது பாவம்தான் என்றால், கிறிஸ்து அந்த பாவத்திற்காகவும் பாடுபட்டாரா? கிறிஸ்து அவர்களுடைய அவிசுவாசம் என்ற பாவத்திற்காகவும் பாடுபட்டார் என்றால் எப்படி கிறிஸ்து பாடுபட்ட மற்ற பாவங்களைத் தாண்டி அந்த அவிசுவாசம் மட்டும் அவர்களுடைய இரட்சிப்புக்குத் தடையாக இருக்க முடியும்? கிறிஸ்து அவர்களுடைய அவிசுவாசம் என்ற பாவத்திற்காகவும் சேர்த்து பாடு படவில்லை என்றால், அவர் அவர்களுடைய எல்லா பாவங்களுக்காகவும் மரிக்கவில்லை என்றாகிவிடுமே!
- முனைவர். ஜான் ஓவன் (1616-1683)
குறிப்பிட்டோருக்கான பாவ பரிகார பலி - வசன ஆதாரங்கள்
ReplyDeleteஇயேசுவின் நோக்கம்: சிலுவையின் மூலம் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்; எல்லா ஜனங்களையும் அல்ல.
"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் »தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்« என்றான்." மத்தேயு 1:21
அநேகருக்காக ஜீவனைக் கொடுத்தார்; எல்லாருக்கும் அல்ல.
"அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், »அநேகரை மீட்கும்பொருளாகத்« தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்." மத்தேயு 20:28
"இது பாவமன்னிப்புண்டாகும்படி »அநேகருக்காகச் சிந்தப்படுகிற« புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது." மத்தேயு 26:28
"அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், »அநேகரை மீட்கும்பொருளாகத்« தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்." மாற்கு 10:45
"கிறிஸ்துவும் »அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு« ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்." எபி 9:28
செம்மரி ஆடுகளுக்காக; வெள்ளாடுகளுக்காக அல்ல.
"நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் »ஆடுகளுக்காகத் (Sheep) தன் ஜீவனைக் கொடுக்கிறான்."«
"நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; »ஆடுகளுக்காக (Sheep) என் ஜீவனையும் கொடுக்கிறேன்."« யோவான் 10:11,15
நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் தான் சுவிஷேசத்தை விசுவாசிப்பார்கள்.
"புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். »நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்."« அப் 13:48
தேவன் தமது சுயரத்தத்தினாலே குறிப்பிட்ட சிலரை (சபையை) சம்பாதித்தார்; எல்லோரையும் சம்பாதிக்கவில்லை.
"ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் »தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை« மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்." அப் 20:28
நாமெல்லாருக்காக - இரட்சிக்கப்பட்டவர்களாக திருச்சபையில் இருக்கிற நாமெல்லாருக்காக. (சூழல்: ரோம் நகர திருச்சபைக்கு எழுதப்பட்ட கடிதம்)
"32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் »நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்,« அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? 33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே." ரோமர் 8:32-34
திருச்சபையாகிய மனவாட்டிக்காக மரித்த கிறிஸ்து
"25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, 26 தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் »தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்."« எபேசியர் 5:25-27
தமது சகோதரருக்கு ஒப்பான தேவகுமாரன்
"அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் »தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக«வேண்டியதாயிருந்தது." எபி 2:17
எல்லா ஜனங்களிலும் ஜாதிகளிலும் இருந்து குறிப்பிட்ட சிலரை வேறுபிரித்து அவர்களை தம்முடைய இரத்தத்தினால் மீட்டுக்கொண்டார்.
"9 தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து »எங்களைத்« தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, 10 எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்." வெளி 5:9-10