ECCLESIOLOGY.. சபையியல்..Shalom Discerns...பழைய ஏற்பாட்டில் சபை நிழல்..
ECCLESIOLOGY.. சபையியல்..
Shalom Discerns..
இந்த வாரம் சபைக்கு செய்தி
__________________________
பழைய ஏற்பாட்டில் சபை நிழல்..
பழைய ஏற்பாடு சபையை முன்நிழலாக ( foreshadows ) காட்டுகிறது.
ஆனால் பழைய ஏற்பாட்டில் சபை நிறுவப்படவில்லை
( not instituted ).
அப் பவுல் இதை எபே 3.1-12 ல் தெளிவு படுத்துகிறார்.
ஆனாலும் இரண்டு மணவாட்டியை பழைய ஏற்பாட்டில் காண்கிறோம்.
இவர்கள் வாழ்க்கை அழகாக சித்தரிக்கப்பட்டு அப் 2 ம் அதிகாரத்தில் புதிய ஏற்பாட்டு சபை நிஜமாக ஏற்படுத்தப்பட நிழலாக விளங்கினா ர்கள்.
இவர்கள் தான்
1. ஏவாள்.. ஆதி 2
2. ரெபேக்காள்..
ஆதி 24
__________________________
1. ஏவாள்..மணவாட்டியாகிய ஏவாள்
EVE ( THE BRIDE EVE )..ஆதி 2
@ ஏவாள் முதல் ஆதாமின் விலாவில் இருந்து வெளியேறினாள் ( proceedeth ).. அந்தப்படியே சபை இரண்டாம் ஆதாமின் விலா பிளக்கப்பட்டு சபை தோன்றுமுன் சபை மீட்புக்கு இரத்தமும் சபை சுத்திகரிப்புக்கு தண்ணீரும் புறப்பட்டு வந்தது. ஆதி 2.21, யோவான் 19.34
@ ஏவாள் சிருஸ்டிப்பின் முதல் தலையாகிய
( first creation ) ஆதாமுக்கு மணவாட்டியாக நியமிக்கப்பட்டளோ ( espoused )..
அந்தப்படியே இரண்டாவது சிருஸ்டிப்பாகிய சபையானது மணவாளனாகிய இரண்டாம் ஆதாமுக்கு நியமிக்கப்பட்டு நித்திய திருமணத்திற்காக காத்திருக்கிறது..ஆதி 1.28, வெளி 11.15
@ ஏவாள் முதல் ஆதாமின் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமும் இருப்பது போல்..
அந்தப்படியே சபையும் இரண்டாம் ஆதாம் கிறிஸ்துவுடன் இணைந்திருக்கிறது.. ஆதி 2.23, எபே 5.30
_________________________
2. ரெபேக்காள் ..மணவாட்டியாகிய ரெபேக்காள்
REBEKAH ( THE BRIDE REBEKAH ).. ஆதி 24
மணவாட்டியாகிய ரெபேக்காள் பழைய ஏற்பாடு முழுவதிலும் காணப்படுகிற மேன்மையான ஒரே தனித்துவம் வாய்ந்த நபர் ( the greatest single typical character ) என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு மேன்மையான நபர்கள் ஆதி 24 ம் அதிகாரத்தில் காணப்படுகிறார்கள்.
1. ஆபிரகாம்.. பிதா
Abraham The Father
2. ஈசாக்கு.. குமாரன்
Issac The Son
3. ஊழியக்காரன்.. பரிசுத்த ஆவியானவர்
Servant The Holy Spirit
4. ரெபேக்காள்.. மணவாட்டியாகிய திருச்சபை
Rebekah The Church
1. ஆபிரகாம்.. பிதா
Abraham The Father
பிதா ஆபிரகாம் தன் குமாரனுக்கு மணவாட்டியை தேர்ந்தெடுப்பதற்கு தூர தேசத்துக்கு தன் வீட்டில் உள்ளவர்களில் வயதில் மூத்தவனும் தனக்கு உண்டான எல்லாவற்றிக்கும் அதிகாரியுமான தன் ஊழியக்காரனை ( பரிசுத்த ஆவி ) அனுப்புகிறான்..ஆதி 24.4, மத் 22.2-3
2. ஈசாக்கு.. குமாரன்
Issac The Son
ஆபிரகாம் மோரியா மலையில் தன் குமாரன் ஈசாக்கை பலியாக ஒப்புக்கொடுத்தான்..
அங்கே ரெபேக்காள் ( சபை ) பிறந்தது அறிவிக்கப்படுகிறது.. ஆதி 22. 22, ஆதி 24.63, எபி 10.12-14
3. ஊழியக்காரன்.. பரிசுத்த ஆவியானவர்
Servant The Holy Spirit
# பிதாவினால் அனுப்பப்படவர்..
யோவான் 14.16
# பெந்தேகோஸ்தே நாளில் சபையை நியமிக்க வந்தார்.. 1 கொரி 12.13
# ஈசாக்கை ஊழியக்காரன் எவ்வளவு உயர்த் தினாரோ அந்தப்படியே ஆவியானவரும் கிறிஸ்துவை உயர்த்துகிறார்.. ஆதி 24.36, யோவான் 16.13-14
__________________________
4. ரெபேக்காள்.. மணவாட்டியாகிய திருச்சபை
Rebekah The Church
அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி, ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
ஆதியாகமம் 24:57-58
Rebekah Upon hearing about Isaac and agrees to go with the servant Rebekah becomes a foreshadow of The Church..
ரெபேக்காள் ஈசாக்கை பற்றி கேள்விப்பட்டு ஊழியக்காரனுடன் செல்ல விரும்பிய போது ரெபேக்காள் சபைக்கு முன்நிழலாக மாறுகிறாள்..
@ ரெபேக்காள் ஈசாக்கை பார்ப்பதற்கு முன் அன்பு கூறுகிறாள்.. அந்தப்படியே சபையும்.. 1 பேது 1.8
@ ரெபேக்காள் ஈசாக்கிடம் இருந்து அநேக உச்சிதங்களை ஊழியக்காரன் மூலம் பெற்றுக்கொள்ளுகிறாள்.. அந்தப்படியே சபையும்.. ஆதி 24.52, 2 கொரி 1.22, எபே 1.14
@ ரெபேக்காள் தன் மணவாளன் ஈசாக்கை சந்திக்க நீண்ட பயணம் ஆரம்பிக்கிறாள்.. Long pilgrimage.. ஆதி 24.59, 1 பேது 2.11
@ ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.
ஆதியாகமம் 24:63.. அந்தப்படியே சபையும்..
ரோமர் 8.34, 2 பேது 3.14
@ அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.
ஆதியாகமம் 24:67
அந்தப்படியே சபையும்.. யோவான் 14.1-6
அதியாகமம் 24 ம் அதிகாரம் முழுவதும் வாசித்து தியானிப்போம்..
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
Comments
Post a Comment