தேவன் அனுதின விசுவாச வாழ்க்கையில் உங்களை சந்திக்கிறாரா? DOES GOD VISIT YOU IN YOUR DAILY SANCTIFICATION LIFE?


இந்த செய்தியை கேளுங்கள்..

https://www.youtube.com/live/EU7s6p1LejM?si=bCJTyZOdp9KLKj_l


தேவன் அனுதின விசுவாச வாழ்க்கையில் உங்களை சந்திக்கிறாரா?

DOES GOD VISIT YOU IN YOUR DAILY SANCTIFICATION LIFE?

அப் பவுலை கர்த்தர் சந்தித்த 6 தரிசனங்கள்.

6 VISITATIONS PAUL HAD IN HIS SPIRITUAL LIFE..

அப்போஸ்தலர் நடபடிகளின் கதிர்கள் ( glimpses )

=========================

@ தேவன் நம்மை சந்திக்க சமயமும் இடமும் முக்கியத்துவம் வாய்ந்தது.. Time & Place..

 MEETING PLACE..
நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து, 
யோபு 23:3

MEETING TIME..
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, 
லூக்கா 19:43

 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். ஆதியாகமம் 3:8

 *@ தேவனுடைய சந்திப்பும் அவருடைய பேசுதலும் இணைந்தே இருக்கும்* ..

 அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான், பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். 
ஓசியா 12:4

@ தேவனுடைய சந்தித்தல் அதாவது God's Visitation என்பது தேவனுடைய இரட்சிப்பையே வெளிப்படுத்துகிறது..

1. நாயீன் விதவை மகன் அற்புதம்..

எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், *தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார்* என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். 
லூக்கா 7:16

2. கிறிஸ்துவின் பிறப்பு..

 *தமது ஜனத்தைச் சந்தித்து* மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு, 
லூக்கா 1:74

நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் *சந்தித்திருக்கிறது* என்றான். 
லூக்கா 1:79

3. இஸ்ரவேல் அடிமைத்தனம் விடுதலை..

பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் *உங்களைச் சந்தித்து,* உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
எரேமியா 29:10

=========================

 *அப் பவுலை கர்த்தர் சந்தித்த 6 தரிசனங்கள்.* 

6 VISITATIONS PAUL HAD IN HIS SPIRITUAL LIFE..

1. *நம்முடைய இரட்சிப்பில் கர்த்தர் நம்மை சந்திக்கிறார்..* 

 அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான். 
அதற்கு அவன்; ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்; நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். 
அப்போஸ்தலர் 9:3-5

சிந்தனை : உங்களுடைய இரட்சிப்பில் தேவனுடைய சந்திப்பு அதாவது God's intervention இல்லை என்றால் உங்கள் இரட்சிப்பில் சந்தேகம் உள்ளது.. நிவிர்த்தி செய்யுங்கள்..

வாசியுங்கள் :
சங் 106.5, ரூத் 1.6, யாத் 5.3, ஆதி 50.24

2. *நம்முடைய ஊழியப் பாதையில் கர்த்தர் நம்மை சந்திக்கிறார்..* 

 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று; நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதொனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி, 
அப்போஸ்தலர் 16:9-10


சிந்தனை :
உங்கள் ஊழிய அழைப்பில் தேவனுடைய சந்திப்பு இல்லை என்றால் பரிசுத்த ஆவியின் தடை, போக ஒட்டாதிருத்தல், பிரயத்தனம் இவைகளை அனுபவியாமல் இருந்தால் ஊழிய அழைப்பை உறுதி செய்தல் அவசியம்..

வாசியுங்கள் : 
அப் 16.6,7.

3. *நம்முடைய பாடுகளில் தேவன் நம்மை சந்திக்கிறார்..* 

 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி; நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே. 
நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார். 
அப்போஸ்தலர் 18:9-10

சிந்தனை :
உங்கள் பாடுகளின் காரணத்தை அறிந்து கொள்ளாமல் பாடுகள் நீங்க வேண்டும் என்று ஜெபிப்பதை தவிர்த்தால் தேவனுடைய சித்தத்தை அறிய முடியும்..

வாசியுங்கள் :
கொலோ 1.24, பிலி 3.10

4. *நம்முடைய சாட்சியின் ஜீவியத்தில் தேவன் நம்மை சந்திக்கிறார்..* 

 பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன். 
அவர் என்னை நோக்கி; நீ என்னைக் குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார். 
அப்போஸ்தலர் 22:18

சிந்தனை :
நம் இரட்சிப்பில் கனிகள் உள்ள சாட்சியின் ஜீவியம் இல்லை என்றால் தேவனுடைய சந்திப்பு நம்மில் இல்லை என்று உணர்தல் வேண்டும்..

வாசியுங்கள் :
1 யோவான் 5.9-11, 
3 யோவான் 1.3

5. *தேவனுடன் நெருங்கி சேரும் போது அவர் நம் அருகில் நிற்கிறார்.. சந்திக்கிறார்..* 

அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று; பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள். 
அப்போஸ்தலர் 23:11-12

 அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான். கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். 
யாத்திராகமம் 34:5


சிந்தனை :
தேவனை விட்டு தூரம் போகும் போது தேவனுடைய நெருக்கம் நம்மில் காணப்படுவதில்லை..

வாசியுங்கள் :
2 நாளா 15.2, யாக் 4.8

6. *நம்முடைய சபை தலைமத்துவத்தில் கர்த்தர் நம்மை சந்திக்கிறார்..* 

அநேகநாள் அவர்கள் போஜனம் பண்ணாம் இருந்தபோது பவுல் அவர்கள் நடுவிலே நின்று; மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கீரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. 
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று; பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்குமுன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். 
அப்போஸ்தலர் 27:21-24

சிந்தனை :
நம்முடைய சபை தலைமத்துவத்தில் நாம் திட மனதாக இருக்கும் போது மட்டுமே நம் சார்ந்த குடும்பங்களை கர்த்தருக்குள் ஸ்திரப்படுத்த முடியும்..

வாசியுங்கள் :
கலா 6.1, 1 தீமோ 1.18, 4.16

 *கடைசியாக சகோதரரே :* 

 *மகிமையின் சந்திப்பின் நாள் நெருங்குகிறது..* 
GLORIOUS MEET IS NEARING..

புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் *சந்திப்பின் நாளிலே* தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
1 பேதுரு 2. 12

shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA