DO NOT ATTEND OR VISIT COUNTERFEIT CHURCHES..போலி (தேவாலயங்கள்) சபைகளுக்குச் செல்லவோ அல்லது பார்வையிடவோ வேண்டாம்..


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி..

DO NOT ATTEND OR VISIT COUNTERFEIT CHURCHES..

போலி (தேவலாயங்கள்) சபைகளுக்குச் செல்லவோ அல்லது பார்வையிடவோ வேண்டாம்..

இரண்டு விதமான ஊழியங்கள் சபை மேற்கொள்ள வேண்டும்..

1. அவிசுவாசிகளை விசுவாசிகளாக கர்த்தருக்குள் அழைத்து வருதல்.
2. விசுவாசிகளை ஆரோக்கியமான உபதேசத்தில் ஸ்திரப்படுத்துதல்..

தவறான சில முறைமைகளை கற்பிக்கும் அல்லது பின்பற்றும் சபைகளுக்கு செல்வதையோ அங்கு சேர்ந்து அங்கத்தினர்கள் ஆகிறதையோ தவிருங்கள்..
ஒரு சில போலி சலுகைகளுக்காக ( கல்லறை, திருமணம் etc ) established church அதாவது நிறுவப்பட்ட தேவலாயங்களில் அங்கத்தினர்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்..
_______________________________

கீழ்க்கண்ட 8 மாய்மாலங்கள்..
8 counterfeits...

1. வேறொரு (மாய்மாலமான) சுவிசேஷம்..

 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத *வேறொரு சுவிசேஷத்தையும்* பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. 
2 கொரிந்தியர் 11:4

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். 
கலாத்தியர் 1:6

வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. 
கலாத்தியர் 1:7


கலா 1:6-9, 3.10
_______________________________

2. வேறொரு இயேசு..

எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத *வேறொரு இயேசுவைப்* பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. 
2 கொரிந்தியர் 11:4

______________________________________________

3. வேறொரு ஞானஸ்நானம்..
குழந்தை, தெளிப்பு 
ஞானஸ்நானம்..

அப் 8.37, மாற்கு 1.9-11
_______________________________

4. 
ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடை ...வேத புரட்டர்கள்..

 ஏனென்றால்,
 அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். 
2 தீமோத்தேயு 4:3-4

நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
1 தீமோத்தேயு 1. 11
_______________________________


5. பிசாசுகளின் உபதேசங்கள்.. சாத்தானின் ஆழங்கள்..

 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் *பிசாசுகளின் உபதேசங்களுக்கும்* செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். 
1 தீமோத்தேயு 4:1
_______________________________

6. வேறே ஆவி..

 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத *வேறொரு ஆவியையும்,* நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. 
2 கொரிந்தியர் 11:4

பல பாஷைகள், வேதம் குறிப்பிடாத அநேக தவறான சப்தங்கள்..
_______________________________

7. வசனங்கள் மாற்றப்பட்ட வேத புத்தகம் பின்பற்றும் சபை..

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 
வெளிப்படுத்தினத விசேஷம் 22:18-19
_______________________________

8. சபை தலைமத்துவத்தின் தவறான நாமங்கள்.. பட்டங்கள் ( Titles )
Father, Bishop, Pope, Reverend..

ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன். 
வெளிப்படுத்தினத விசேஷம் 17:3

அவர் yehovah தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார், அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது. 
சங்கீதம் 111:9

______________________________________________

9. கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞர்..

 சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். 
பிலிப்பியர் 3:17

ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுதும் கண்ணீரோடும் சொல்லுகிறேன். 
பிலிப்பியர் 3:18

அவர்கள் முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். 
பிலிப்பியர் 3:19


shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA