கொண்டு வாருங்கள்.. Bring unto me..


Shalom Steward Thoughts Discerns 
-------------------------------

கொண்டு வாருங்கள்.. 
Bring unto me.. 

1. Bring the Sickness to Him..
சுகவீனத்தை கொண்டு வாருங்கள்.. 

அவர் பிரதியுத்தரமாக, விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் *கொண்டு வாருங்கள்* என்றார்.
மாற்கு 9.19

He answereth him, and saith, O faithless generation, how long shall I be with you? how long shall I suffer you? *bring him unto me.* 
Mark 9:19

Sickness will be healed..
-------------------------------

2. Bring the useless to Him..
உபயோகமற்றதை கொண்டு வாருங்கள்.. 

உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை *அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.* 
மாற்கு 11.2

And saith unto them, Go your way into the village over against you: and as soon as ye be entered into it, ye shall find a colt tied, whereon never man sat; loose him, and *bring him.* 
Mark 11:2

Useless will be made useful.. 
-------------------------------

3. Bring insufficiencies to Him..
போதாதவைகளை கொண்டு வாருங்கள்.. 

அவைகளை *என்னிடத்தில் கொண்டு வாருங்கள்* என்றார்.
மத்தேயு 14.18

He said, *Bring them hither to me.* 
Matthew 14:18

Insufficiencies will be sufficient.. 
-------------------------------

4. Bring the Injustice to Him..
நியாயமில்லாதவைகளை கொண்டு வாருங்கள்.. 

உங்கள் வழக்கைக் *கொண்டு வாருங்கள்* என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்.
ஏசாயா 41.21

Produce your cause, saith the LORD; *bring forth* your strong reasons, saith the King of Jacob. 
Isaiah 41:21

Injustice will be made justified..
-------------------------------

5. Bring the part to Him..
குறைவானவைகளை கொண்டு வாருங்கள்.. 

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே *கொண்டு வாருங்கள்.* அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல்கியா 3.10

 *Bring ye all the tithes* into the storehouse, that there may be meat in mine house, and prove me now herewith, saith the LORD of hosts, if I will not open you the windows of heaven, and pour you out a blessing, that there shall not be room enough to receive it. 
Malachi 3:10

The part will be blessed full..
-------------------------------

6. Bring People to Him..
மக்களை கொண்டு வாருங்கள்..

Operations Andrew :
அந்திரேயா செயல்பாடு..

1. அந்திரேயா சில கிரேக்கர்களை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான்..

பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். 
பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான், பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள். 
யோவான் 12:22

2. அந்திரேயா சீமோனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான்..

யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான், மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார், கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். 
யோவான் 1:42

People will be saved..
_________________________

NEJ Song..

கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்!
ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்
வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள்..

1. குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்
சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்
தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்
பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள்

2. மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவை
விரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்
வருகை வரும் வரை கிருபை சிலுவையில்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்

3. என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டவன்
வருந்தி வாழும் ஜனங்கள் யாரும் கொண்டுவாருங்கள்
வரும் எவரையும் தள்ளவே மாட்டேன்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்

Shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA