நீங்கள் உண்மையில் இரட்சிக்கப்பட்டீர்கள் என்பதை நீங்களோ அல்லது உங்கள் சார்ந்தவர்களோ எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
சபைக்கு செய்தி..
நீங்கள் உண்மையில் இரட்சிக்கப்பட்டீர்கள் என்பதை நீங்களோ அல்லது உங்கள் சார்ந்தவர்களோ எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
கிறிஸ்தவனாக பிறந்திருப்பதோ, சபைக்கு முன்பாக அறிக்கை செய்து ஞானஸ்னானம் எடுத்திருப்பதோ, தாலந்துகளை பெற்று உபயோகிப்பதோ, வேத அறிவு பெற்றிருப்பதோ அல்ல இரட்சிப்பு..
ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் முன்பு இந்த 10 காரியங்கள் நான் திருப்தி செய்கிறேனா என்பதை உறுதி செய்தல் அவசியம்..
10 ways of testing to confirm to see if a person really changed?
1. இயேசுவே தேவனுடைய குமாரன் என்பதை தன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அறிக்கை செய்தல் அவசியம்.
ரோமர் 10.10-11
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10:9
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
ரோமர் 10:10
2. பாவத்தை வெறுத்தல் என்பதை விட பாவத்தின் மேல் encounter போராடுதல் அவசியம்..
1 யோவான் 5.4
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான் 5:4
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
1 யோவான் 5:5
3. சகோதர சிநேகம் அவசியம்..
1 யோவான் 4.7, 2.9-11, 3.14-19, 4.20
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
1 யோவான் 4:7
அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.
1 யோவான் 4:8
4. இயேசுவே தேவனுடைய குமாரன் என்பதை தன்னை சார்ந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல் அவசியம்.
1 யோவான் 4.14
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.
1 யோவான் 4:14
5. கர்த்தருடைய வார்த்தைகள் சபையில் சொல்லப்படுப்போது கேட்டு மனதில் உணர்த்தப்படுதல் அவசியம்
அப் 2.37
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து; சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
அப்போஸ்தலர் 2:37
6. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாக இருத்தல் அவசியம்.
சங் 1.1-6
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 1:2
7. ஆவியின்படி சிந்தித்தல் ஆவியின்படி செயல்படுதல் அவசியம்..
ரோமர் 8.1-10,
1 யோவான் 3.24, 4.13
அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார். அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 3:24
8. கிறிஸ்து இயேசு நமக்கு விலையேறப் பெற்றவராக காண்பது அவசியம்.
1 பேது 2.7
ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று.
1 பேதுரு 2:7
9. நற்கிரியைகள் நம் ஜீவியத்தில் காணப்படுவது அவசியம்.
எபேசியர் 2.10,
யாக் 2.14-26
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
எபேசியர் 2:10
10. பாவம் செய்யும் போது தேவன் சிட்சிப்பதை அறியும் அறிவு அவசியம்.
எபி 12.1-10
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
எபிரேயர் 12:9
கிறிஸ்தவனாக பிறந்திருப்பதோ, சபைக்கு முன்பாக அறிக்கை செய்து ஞானஸ்னானம் எடுத்திருப்பதோ, தாலந்துகளை பெற்று உபயோகிப்பதோ, வேத அறிவு பெற்றிருப்பதோ அல்ல இரட்சிப்பு..
வாசியுங்கள் :
மத் 7.21-23, மத் 13.24-30, 36-43, மத் 7.15-30
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment