சபையின் உருவகங்கள்..01/15 சபை சத்திரத்திற்கு உருவகம்..



கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி..

சபைக்கு செய்தி..

சபையின் உருவகங்கள்..01/15

1. சபை சத்திரத்திற்கு உருவகம்..

வாசியுங்கள் : லுக் 10.25-37

தியான வசனம் :
" நீ இவனை விசாரித்துக்கொள்"..
TAKE CARE OF HIM.

 மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து *: நீ இவனை விசாரித்துக்கொள்,* அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். 
லூக்கா 10:35

@ சபையில் ஒருவரை ஒருவர் விசாரித்தல், கவனித்தல், புத்தி சொல்லுதல் தவிர்க்க கூடாதது..

1. *சபையில் விசாரித்தல் பிரதானமான பணி ஆகும்..* 

 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி *விசாரிப்பான்* ?
1 தீமோத்தேயு 3. 5

2. *சபையில் விசாரித்தலை சபை குடும்பங்கள் எதிர் பார்க்கிறார்கள்..* 

என்னை *விசாரிப்பதற்கு* நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன். இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.
பிலிப்பியர் 4. 10

 அவன் சுகமாயிருக்கிறானா என்று *விசாரித்தான்* . அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான். அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.
ஆதியாகமம் 29.10

3. *கர்த்தர் உங்களை விசாரிக்கிறார்..* 

அவர் உங்களை *விசாரிக்கிறவரானபடியால்* , உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 
1 பேதுரு 5:7

4. *விசாரிப்பது தேவ பக்தி..* 

 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை *விசாரிக்கிறதும்* , உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. 
யாக்கோபு 1:27

5. *விசாரிக்காமல் அலட்சியம் பண்ணுதல் அவிசுவாசத்திற்கு அடையாளம்..* 

ஒருவன் தன் சொந்த ஐனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் *விசாரியாமற்போனால்* , அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான். 
1 தீமோத்தேயு 5:8

6. *விசாரிக்குமுன் நிருணயம் பண்ணுவது தவறு..* 

நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், *விசாரிக்குமுன்* நிருணயம் பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன். 
1 தீமோத்தேயு 5:21

7. *விசாரிப்பதில் தீமோத்தேயு முன்மாதிரி..* 

அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் *விசாரிக்கிறதற்கு* என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. 
பிலிப்பியர் 2:20

சகோதரரே..

 *சபையின் பொறுப்புள்ளவர்கள் விசாரித்தல் முறைமை ..* 

 *ஏற்ற வேளையும் போஜனமும்..* 

ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை *விசாரிக்கும்படி* எஜமான் வைத்த உண்னமயும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
மத்தேயு 24. 45

shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA