*உம்மில் பெலன்கொள்ளுகிற மனுஷன்..* STRENGTHENING IN THE LORD..
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை.. தூத்துக்குடி..*
*இந்த வாரம் சபைக்கு செய்தி..*
*உம்மில் பெலன்கொள்ளுகிற மனுஷன்..*
STRENGTHENING IN THE LORD..
*தியான வசனம் :*
உம்மிலே பெலன்கொள்ளுகிறமனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
சங்கீதம் 84:5
-------------------------------
RECEIVING SALVATION IS STRENGTH..
*இரட்சிப்பை பெற்றுகொள்வது தான் பெலன்..*
அண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
சங்கீதம் 140:7
*ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பெலன்..*
பிள்ளை வளர்ந்து, *ஆவியிலே பெலன்கொண்டு,* ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
லூக்கா 2:40
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் *ஆத்துமாவிலே பெலன்தந்து* என்னைத் தைரியப்படுத்தினீர்,
சங்கீதம் 138:3
அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற *இவனைப் பெலப்படுத்தினது.* அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
அப்போஸ்தலர் 3:16
-------------------------------
*விசுவாசிகள் அனுதின பரிசுத்தமாகுதலில் எவ்வாறு கிறிஸ்துவில் பெலன் கொள்ள முடியும்?*
1. *திருப்தி.. Content..*
என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை. ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
பிலிப்பியர் 4:11
தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
பிலிப்பியர் 4:12
*என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே* எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
பிலிப்பியர் 4:13
2. *கர்த்தருக்குள் மகிழ்ச்சி.. Rejoice..*
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள். இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம். *கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெபரிசுத்தலன்* என்றான்.
நெகேமியா 8:10
3. * ஆவியினால் நிரப்பப்படுதல்..*
*Filling of Holy Spirit.*
*பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து* எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலர் 1:8
4. *ஊழியம் என்கிற பொறுப்பு..* Responsibility in Evangelizing
*என்னைப் பலப்படுத்துகிற* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
1 தீமோத்தேயு 1:12
5. *உள்ளான மனுஷன்.. Inner man*
நீங்கள் அவருடைய ஆவியினாலே *உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,*
எபேசியர் 3:16
விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,
எபேசியர் 3:17
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து,
எபேசியர் 3:18
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
எபேசியர் 3:19
6. *அமரிக்கையும் நம்பிக்கையும்.. Silence & Hope..*
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள், *அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்* என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார், நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்,
ஏசாயா 30:15,
ஏசா 26.1, 2 கொரி 6.7
7. *பாடுகள்.. Sufferings..*
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை.
2 கொரிந்தியர் 4:8
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
2 கொரிந்தியர் 4:9
கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
2 கொரிந்தியர் 4:10
எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
2 கொரிந்தியர் 4:11
இப்படி மரணமானது எங்களிடத்திலும், *ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.*
2 கொரிந்தியர் 4:12
*சகோதரரே* ..
கர்த்தருடைய வார்த்தையை நடைமுறைப்படுத்துவோம்..
LET US PRACTICE THE WORD OF GOD..
*ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்:* அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.
நீதிமொழிகள் 24:5
ஆபத்துக்காலத்தில் நீ *சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது.*
நீதிமொழிகள் 24:10
*சிந்திப்போம்* :
ஆவிக்குரிய பெருமை.. உலக பெருமை.. உங்கள் பெலனை தடை செய்யலாம்..அதற்காக முழங்காலில் நிற்பதே பெலன்..
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 12:7
அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
2 கொரிந்தியர் 12:8
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும். *பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்* என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாரட்டுவேன்.
2 கொரிந்தியர் 12:9
https://youtu.be/3vIh_mgtpn8?si=DshTxU14MiWXjgfm
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment