நன்மையானவைகளை பேசுகிற இரத்தம்? *BLOOD THAT SPEAKETH?*
*கிறிஸ்தவ விசுவாசிகள் சபை... தூத்துக்குடி..*
*மேஜை நினைவு கூறுதல் தியானம்..*
The most recent major train accident in India was the Kanchanjunga Express accident that occurred on June 17, 2024:
அகர்தலா.. கஞ்சன் ஜூங்கா அதி விரைவு ரயில் விபத்து
What happened
A goods train collided with the passenger train Agartala-Kanchanjunga Express near Rangapani railway station in Darjeeling district.
Casualties
At least 10 people were killed and at least 40 were injured. The drivers of both trains died.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்..
200 க்கும் மேற்பட்ட பயணிகள் ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக இருக்கும் போது ஆஸ்பத்திரி க்கு வெளியில் யாருடைய அழைப்பும் இல்லாமல் அநேகர் தங்களுடைய இரத்தம் தானம் அளிப்பதற்காக நெடு கார்த்திருந்த காட்சி என்னை சிலுவைக்கு நேராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தின நிஜமான நிகழ்வுக்கு நேராக ஈர்த்தது..
நன்மையானவைகளை பேசுகிற இரத்தம்?
*BLOOD THAT SPEAKETH?*
சாபத்திற்காக கூப்பிடுகிற இரத்தம்?
*BLOOD THAT CRIETH?*
*தியான வசனங்கள் :*
1. அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய *இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.* இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது. நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.
ஆதியாகமம் 4:10_12
2.புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் *நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும்* வந்து சேர்ந்தீர்கள்.
எபிரேயர் 12:24
*இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்ன பேசினது?*
அப்பொழுது இயேசு: பிதாவே, *இவர்களுக்கு மன்னியும்,* தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
லூக்கா 23:34
*சிந்திப்போம்* :
@ ஆதாமின் அத்தியிலை மனிதனின் சுய நீதிக்கு அடையாளம்..
@ காயீனின் பழங்கள் மனிதனின் சுய நீதிக்கு அடையாளம்..
@ காயீன் யூதர்களுக்கு அடையாளமானவன்..
@ ஆபேல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிர் நிழல்..
Counter shadow...
@ ஆபேலின் இரத்தம் கூப்பிடுகிறது.. சகோதரனுக்கு சாபத்தை அதாவது நியாயத்தைத்தீர்ப்பை கேட்கிறது..
@ இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நன்மையானவைகளை பேசுகிறது.. நன்மைகளை வழங்குகிறது..
*இரத்தத்தின் பொதுவான குணங்களும் தெய்வீக குணங்களும்...*
*பொதுவான குணங்கள் :*
1. _உயிராயிருக்கிற இரத்தம்.._
மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
ஆதியாகமம் 9:4
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன். சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன். மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
ஆதியாகமம் 9:5
2. _சிந்தப்படக்கூடாத இரத்தம்.._
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
ஆதியாகமம் 9:6
3. _கூப்பிடும் இரத்தம்.._
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
ஆதியாகமம் 4. 10
*தெய்வீக குணங்கள்..*
1. _பாவ நிவிர்த்தி செய்யும் இரத்தம்..
REDEEMING BLOOD_
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்,; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
லேவியராகமம் 17:11
2. _பேசுகிற இரத்தம்..
எபி 12.24
SPEAKING BLOOD_
3. _சிந்தப்பட்ட இரத்தம்.._
எபி 9.22, லுக் 26.28..
SHED BLOOD
4. _தெளிக்கப்பட்ட இரத்தம்_
எபி 10.22
SPRINKLED BLOOD
5. _விலையேறப்பெற்ற இரத்தம்.._
1 பேது 1.19, 2.4-6
PRECIOUS BLOOD
*BLESSINGS OF THE SHED BLOOD..*
சிந்தப்பட்ட இரத்தம்..
1. *PROPITIATION*
பதிலாள் மரணம்
ரோமர் 3.25
2. *REDEMPTION*
மீட்பு
எபே 1.7, கொலோ 1.14
3. *JUSTIFICATION*
நீதிமானாகுதல்
ரோமர் 5.9
4. *PEACE*
சமாதானம்
கொலோ 1.20, எபி 9.14
5. *MADE NIGH*
சமீபித்தல்
எபே 2.13
6. *BOLDNESS*
தைரியம்
எபி 10.19
7. *OVERCOMING*
மேற்கொள்ளுதல்
வெளி 12.11
8. *GOODNESS*
நன்மையானவைகள்
எபி 12.24
*ஆராதனை சிந்தனை :*
*தெளிக்கப்பட்ட இரத்தம்..* Sprinkled Blood..
அதன் ஆவிக்குரிய செயல்பாடுகள்..
1. BLOOD ON THE DOOR POSTS..
வீட்டு வாசல், நிலைக்கால்கள்,மேற்சட்டம்..தெளிக்கப்படுத்தல்..
REDEMPTION..
மீட்பு..
யாத் 12.7,13,22
2. BLOOD ON THE ALTAR..
பலிபீடம்..தெளிக்கப்படு தல்..
PROPITIATION..
பலியாகுதல்..
லேவி 17.11
3. BLOID ON THE MERCY SEAT..
கிருபாசனம்..தெளிக்கப்படுதல்..
ACCESS..
தேவனிடம் நெருங்குதல்..
லேவி 16.14-15
4. BLOOD ON EAR, THUMB,TOE
வலது காதின் மடல், வலது கை, கால், பெருவிரல்..தெளிக்கப்படுதல்..
PRIESTHOOD CLEANSING..
ஆசாரித்துவம் சுத்திகரிப்பு..
யாத் 29.20,21, லேவி 8.23-25
5. BLOOD ON THE HORNS OF THE ALTAR OF INCENSE..
சுகந்த தூப பீடத்து கொம்புகள்..பூசுதல்
RESTORATION..
மீண்டும் தேவனிடம் ஒப்புராவகுதல்..
லேவி 4.7
மேஜை முன்பு நம்மை ஆராய்ந்து பார்ப்போம்..
பந்தியில் பங்கு பெறுவோம்..
இரத்தம் சிந்தி நம்மையவர்..கீ கீ 58 பாடல்..
https://youtu.be/a_njPxrBkKQ?si=cpcVmp8Exd7VyI0c
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment