*கர்த்தருடைய புத்தகம்..* THE BOOK OF THE LORD..
சபைக்கு செய்தி..
*கர்த்தருடைய புத்தகம்..*
THE BOOK OF THE LORD..
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள், இவைகளில் ஒன்றும் குறையாது, இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது, அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
ஏசாயா 34. 16
--------------------------------------------------------------------------
வன்முறை வார்த்தைகள் அதிகமுள்ள புனித நூல் எது?
ஆய்வில் சுவாரசிய தகவல்
வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் வார்த்தைகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலா அல்லது அல்லது கிறித்தவர்களின் புனித நூலான பைபிளிலா என்று நடத்தப்பட்ட ஆய்வில் சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, கோபம், அருவருப்பு, வருத்தம், ஆச்சரியம், பயம், கவலை மற்றும் நம்பிக்கை ஆகிய 8 மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் இஸ்லாமியர்களின் குர்ஆன் நூலில் அதிகமாக உள்ளதா அல்லது கிறித்தவர்களின் பைபிள் நூலில் உள்ளதா என டாம் ஆண்டர்சன் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் பொறியாளர் ஒரு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வை விரைவாக மேற்கொள்ள நவீன மின்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 2 நூல்களையும் வெறும் 2 நிமிடங்களில் ஆய்வு செய்து முடித்துள்ளார்.
இந்த ஆய்வின் முடிவில், 'கொல்லுதல், அழித்தல் உள்ளிட்ட வன்முறை போன்ற வார்த்தைகள் அதிகளவில், அதாவது 5.3 சதவிகிதம் கிறித்துவர்களின் பழைய பைபிளிலும், 2.8 சதவிகிதம் புதிய பைபிளிலும் அடங்கியுள்ளன. ஆனால், இஸ்லாமியர்களின் புனித நூலில் 2.1 சதவிகித வன்முறை வார்த்தைகள் மட்டுமே அடங்கியுள்ளதாக டாம் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------
வேத புத்தகம் மனிதனுடைய இருதயத்தின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தி, அதை நீக்குவதற்குரிய வழியை காண்பித்து மனிதனை நித்தியத்திற்கு ஆயத்தப்படுத்துகிற புத்தகம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்..
மோசே இந்த புத்தகத்தை தேவரீரிடம் " உம்முடைய புத்தகம் " என்று குறிப்பிடுகிறார்..
ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும். இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.
யாத்திராகமம் 32:32
கர்த்தர் மோசேயிடம் " என் புத்தகம் என்று கூறுகிறார்..
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாகய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். யாத்திராகமம் 32:33
வேத புத்தகம் 3 விதமான புத்தகங்களை குறிப்பிடுகிறது..
1. ஜீவ புத்தகம்
Book of Life
( இரட்சிப்பை பெற்றவர்கள் பதிவு )
2. ஞாபக புத்தகம்
BOOK OF REMEMBRANCE
( விசுவாசிகள் அனுதின பரிசுத்தமாகுதல் பதிவு )
3. யுத்த புத்தகம்
BOOK OF WAR
( விசுவாசிகள் வெற்றியும் தோல்வியும் பதிவு )
--------------------------------------------------------------------------
1. ஜீவ புத்தகம்
Book of Life
( இரட்சிப்பை பெற்றவர்கள் பதிவு )
வெளி 22.19, 21.27, 20.12, 17.8, 13.8, 20.15
பிலி 4.3, லுக் 10.20, ஏசாயா 4.3,4
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 3:5
2. ஞாபக புத்தகம்
BOOK OF REMEMBRANCE
( விசுவாசிகள் அனுதின பரிசுத்தமாகுதல் பதிவு )
மல்கி 3.16, சங் 56.8
எஸ்தர் 6.1,
நடபடி புத்தகம்
வல்லமையும் பராக்கிரமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
எஸ்தர் 10. 2
சாலமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
1 இராஜாக்கள் 11.41
ஞாபகக்குறி..
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து ஞாபக்குறிக் கற்களாயிருக்கும்படி ஏபோத்துத் தோள்களின் மேல் அவைகளை வைத்தான்.
யாத்திராகமம் 39:7
3. யுத்த புத்தகம்
BOOK OF WAR
( விசுவாசிகள் வெற்றியும் தோல்வியும் பதிவு )
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
யாத்திராகமம் 17:14
அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,
ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
எண்ணாகமம் 21:14,15
கர்த்தருடைய யுத்த புத்தகம்.. போர் தொடரும்..
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment