நினைவு கூர்ந்து சபையில் தெரிவிக்கும் கிறிஸ்துவின் மரணம்.REMEMBRANCE & PROCLAMATION OF LORD'S DEATH
**மேஜை நினைவு கூறுதலின் தியானம்..*
TABLE REMEMBRANCE THOUGHT*
நினைவு கூர்ந்து சபையில் தெரிவிக்கும் கிறிஸ்துவின் மரணம்.
தியான பகுதி.
நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
1 கொரிந்தியர் 11:23 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. *என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்* என்றார்.
1 கொரிந்தியர் 11:24 போஐனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் *என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்* என்றார்.
1 கொரிந்தியர் 11:25
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் *அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.*
1 கொரிந்தியர் 11:26
வேதத்தின் படி சகோதர சபையின் ஆராதனை 3 பகுதிகளை உளதாக்கியது
1. கூடி வருதல்
meeting together
2. அப்பம் பிட்குதல் breaking of bread
3. நன்றிகூறுதல்
Thanks Giving
கிறிஸ்து தன்னுடைய மரணத்தை பற்றி தானே இவ்வாறு கூறுகிறார்..
1. *ஆடுகளுக்காக மரிக்கிறேன்*
நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
யோவான் 10:11
2. *அநேகருக்காக மரிக்கிறேன்*
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
மத்தேயு 20:28
3. *உலகத்திற்காக மரிக்கிறேன்*
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம், இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான், நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
யோவான் 6:51
பவுல் கிறிஸ்துவின் மரணத்தை இவ்வாறு கூறுகிறார்..
*எல்லாருக்காகவும் ஒருவரே மரித்தார்..*
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்,
2 கொரிந்தியர் 5:14
பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் *எல்லாருக்காவும் மரித்தாரென்று* நிதானிக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:15
எபிரேய ஆக்கியோன் கிறிஸ்துவின் மரணத்தை இவ்வாறு கூறுகிறார்..
*ஒவ்வொருவருக்காக மரித்தார்*
என்றாலும், தேவனுடைய கிருபையினால் *ஒவ்வொருவருக்காகவும்* , மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
எபிரேயர் 2:9
*நினைவு கூர்ந்து இவ்வாறு அவருடைய மரணத்தை தெரிவிப்போம்.*
1. *A death of shame.. அவமானத்தின் மரணம்*
எபி 12.2, ஏசா 50.6, மாற்கு 14.65
*2. A death of suffering பாடுகள் நிறைந்த மரணம்*
லூக் 22.15, எபி 2.9-10
3. *A subdtitutory death பதிலாள் மரணம்*
1 பேது 2.21, அப் 2.23, 13.28
4. *A sacrificial death*
*தியாக மரணம்**
எபி 9.14, 26, எபே 5.2
5. *A sin bearing death*
*பாவம் சுமந்து தீர்த்த மரணம்*
1 பேது 2.24, ஏசா 53.6, யோ 1.29
6. *A voluntary death*
*தாமாக ஜீவனை கொடுக்கும் மரணம்*
யோ 10.18, 14.12, 18.8-11
7. *An all sufficient death* *எல்லாருக்கும் போதுமான மரணம்*
யோ 14.30, எபி 1.2-3
*ஆராதனை சிந்தனை..*
*அன்பு இன்னதென்று உணர்த்திய மரணம்..*
அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
1 யோவான் 3:16
*The Christian Believers Assembly
Tuticorin 628 003*
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment