எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்..Enlarge our faith..*


ஷாலோம் ஸ்டூவர்ட் சிந்தைகள் நிதானங்கள்..* 

 *காலைதோறும் கிருபை..*

 *எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்..
Enlarge our faith..*

தியான வசனம்..

 அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
லூக்கா 17. 5

தேவன் ஒருவரே வர்த்திக்க பண்ண முடியும்..
இது தேவனுடைய சர்வ ஞானம்..
வர்த்திப்பு, பெருக செய்தல், விரிவு இவைகள் எல்லாம் தேவன் அருளுவது..

இந்த வசனத்தை கவனியுங்கள்..

வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
எரேமியா 33. 22

1. *தேவரீர்.. என் எல்லையை பெரிதாக்கும்..யாபேஸ்..* 

enlarge my boundary..
1 நாளா 4.9-10

யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். 
1 நாளாகமம் 4:9

யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான், அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். 
1 நாளாகமம் 4:10

2. *எனக்கு நீர்ப்பாய் ச்சலான நிலத்தையும் தர வேண்டும்.. அக்சாள்* ..

 Enlarge my fertility..
யோசு 15.19

அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும். எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர். நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள். அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். 
யோசுவா 15:19


3. *எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது..* பவுல்..

Enlarge my heart..
2 கொரி 6.11

கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது. எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது
2 கொரிந்தியர் 6:11

4. *தாறுமாரான காரியத்தை மாற்றி தேவன் விர்த்தியாக்குவார்.. யாப்பேத்..* 

 Enlarge from perversion..
ஆதி 9.20-27

நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து, 
ஆதியாகமம் 9:24

கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். 
ஆதியாகமம் 9:25

சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். 
ஆதியாகமம் 9:26

யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார். அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான். கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றார். 
ஆதியாகமம் 9:27

5. *நெருக்கத்தில் விசாலம்..* 
தாவீது

enlarge in my distress....*
சங் 4.1

என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும், நெருக்கத்தில் இருந்த எனக்கு விசால முண்டாக்கினீர், எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். 
சங்கீதம் 4:1

6. *சோதனையில் ஏராளம்..enlarge in trials.. காத்..*

 லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
ஆதியாகமம் 30:10-11

காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் (சோதனை)
பாய்ந்துவிழும். அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
ஆதியாகமம் 49:19

 *சோதனையில் விஸ்தாரம்..* 

காத்தைக் குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான், அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது, ஆனாலும் அவன் ஜனத்தின் முன்னணியாய் வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான் என்றான்.
உபாகமம் 33:20-21

7. *கர்த்தருடைய வசனமே வர்த்திப்பு.. God’s word is enlargement.* .

 விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
2கொரிந்தியர் 9. 10

8. *சபையே விரிவாக்கம்.. Church is enlargement..*

உன் கூடாரத்தின்
 ( சபை ) இடத்தை விசாலமாக்கு, உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும், தடைசெய்யாதே, உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய், உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.
ஏசாயா 54:3

 *இறுதியாக சகோதரரே..*

Enlargement possible when we go to Lord’s feet and waiting and obeying God’s voice..

தேவனுடைய சமூகத்தில் வந்து அவர் சத்தம் கேட்டு கீழ்ப்படியும் போது விஸ்தாரம் சாத்தியம்..

 வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள். நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன். வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.
யாத்திராகமம் 34:24

God bless the readers and the scribe..

 The Christian Believers Assembly
Since 1958
TOOVIPURAM
Tuticorin 628 003
shalomjjj@gmail.com
WhatsApp
91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA