_near miss.. just miss.._ _கணத்தில் தப்பித்தல்.._


*SHALOM STEWARD MIDDAY THOUGHT* 
 *PROVERB SPEAKS* 

 _near miss.. just miss.._ 
 _கணத்தில் தப்பித்தல்.._ 

 *near miss* 
noun
 _a narrowly avoided collision or other accident_ .

வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள். 
நீதிமொழிகள் 6:5

பாவம் கொடுங்கோலன். 
Sin is a tyrant. 

எதிரில் வரும் எவரையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் கொலை பாதகன். 

கிறிஸ்தியானின் மோட்ச பிரயாணத்தில் ஜாண் பனியன் எழுதும் போது கிறிஸ்தியான் திட்டி வாசலில் நிற்கிறான். அங்கு நடப்பதை சற்று கவனியுங்கள். 

திட்டிவாசல் கோட்டை சேருதல்.
கதவு திறக்கப்பட்ட உடனே *கிறிஸ்தியான்* மெதுவாக காலெடுத்து வைத்து உள்ளே போகப் போனான்: 
ஆனால் அக்கோட்டைக்குள் இருந்த பட்சதாபன் அவன் கையைப் பிடித்து சட்டென்று உள்ளே இழுத்துக் கொண்டார். 
இப்படி இழுத்த காரணம் என்ன ஐயா என்று கேட்டான். அதற்கு *பட்சாதாபன்* சொல்லுகிறார்: அப்பா இந்த கோட்டைக்குச் சற்று அப்பால், வேறொரு பலத்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது; அதற்குப் *பெயல்செபூல்* என்கிற பெயரை யுடைய ஒருவன் அதிபதியாய் இருக்கிறான். அவனும், அவனுடைய காரியக்காரரும் இவ்வாசலைத் தேடி வரும் பிரயாணிகள் உட் பிரவேசிக்கிறதற்குள்ளாக கொன்றுவிட்டால் நல்லதென்று எண்ணி அம்புகளைப் பிரயோகிப்பார்கள். ஆனதனாலேதான் நான் அவ்வளவு ஆத்திரத்தோடு உன்னை இழுத்துக்கொண்டேன் என்று சொன்னார்.

பாவத்திலிருந்து கணத்தில் தப்பிப்போம் தேவனுடைய துணையோடு. 

வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
சங்கீதம் 124. 7



shalomsteward1@gmail.com
whatsapp:+91 9965050301
The Christian Believers Assembly 
Tuticorin 628 003

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA