வாரஇறுதி சுவிசேஷ மணித்துளிகள்..* *மனிதனுக்கு மரணம் ஒரு முடிவா?IS DEATH AN END TO MAN?*


**WEEKEND GOSPEL MOMENTS* ..* 

 *வாரஇறுதி சுவிசேஷ மணித்துளிகள்..* 

 *மனிதனுக்கு மரணம் ஒரு முடிவா?
IS DEATH AN END TO MAN?* 

ஒவ்வொரு கிறிஸ்தவ அடக்க நிகழ்வில் பாதிரியார் இறுதியில் இவ்வாறு கூறுகிறார் " மண்ணுக்கு மண், புழுதிக்கு புழுதி, சாம்பலுக்கு சாம்பல் ".. இது தவறு..
அடக்கம் செய்யப்படுகிற யாரும் தேவனுடைய பிள்ளைகள் ஆனாலும் தேவனுடைய பிள்ளைகள் அல்லாதவர்கள் ஆனாலும் உயிரோடு எழுந்திருப்பார்கள்..
இது தேவனுடைய ஞானம்..

மனிதன் மரணத்துடன் முடிந்து போக படைக்கப்படவில்லை..
எபி 9.27

மரணத்தின் பின் உயிர்ப்பும் நியாயத்தீர்ப்பும் உண்டு.
யாரும் மரணத்தின் மூலம் தங்கள் அடையாளத்தை இழந்து போவதில்லை.
மறுரூப சரீரத்தை பெறுகிறோம்.

ஆனால் அவனவன் தன் தன் வரிசையில் உயிர்தெழுவான்..

 *உயிர்ப்பின் வரிசை ஒழுங்கு :* 

1. முதலாவது உயிர்த்தவர் கிறிஸ்து.. மத் 28.1, 1 கொரி 15.3-8, 23

2. இரண்டாவது சபை பரிசுத்தவான்கள்.. 

இதில் விசேஷம் முதலாவது கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்கள் உயிர்தெழுந்து பின்பு உயிரோடு இருக்கும் சபை பரிசுத்தவான்கள் மறுரூபமாகி ஒரே நேரத்தில் கிறிஸ்துவை மத்திய ஆகாயத்தில் சந்திப்பர்கள். 1 தெச 4.13-17, 1 கொரி 15.15-52

3. மூன்றாவது உபத்திரவ காலத்தின் 2 சாட்சிகள்.. வெளி 11.3-12

4. நான்காவது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் உபத்திரவ காலத்து இரத்த சாட்சிகளும். ஏசா 26.19, வெளி 20.4-5

இது வரை சொல்லப்பட்ட நான்கும் முதலாம் உயிர்தெழுதல்.. வெளி 20.4-6

இனி 1000 ஆண்டு அரசாட்சி..

5. ஐந்தாவது 1000 ஆண்டு அரசாட்சி பின் இரண்டாம் உயிர்தெழுதல் நடைபெறும்..

 இதில் அனைத்து தேவனுடைய பிள்ளைகள் அல்லாதவர்கள் அதாவது இரட்சிக்கப்படாதவர்கள் அதாவது அவிசுவாசிகள் உயிரோடு எழுப்பப்படுவார்கள். வெளி 20.5, 12-13.
அவர்கள் அனைவரும் வெள்ளை சிங்காசனம் முன் நியாயத்தைதீர்ப்படைய தோன்றுவர்.. வெளி 20.10.
பின்பு அவர்கள் அனைவரும் நரகம் செல்வர்..
 *இது இரண்டாம் மரணம்..* 

பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன், அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின, அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள் அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். 
 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். 
வெளிப்படுத்தினத விசேஷம் 20:15

அன்பு நண்பர்களே!
வேதத்தின் நிகழ்வுகள் தன்னுடைய திட்டமிட்ட காலத்தின்படி நடந்தே தீரும்..
தண்டனைக்கு தப்புங்கள்..
இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்..
பாவ மன்னிப்பை பெறுங்கள்..
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், அவர் சிலுவையில் சிந்தின திரு உதிரம் உங்கள் பாவ மன்னிப்புக்கு போதுமானது என விசுவாசியுங்கள்.. இரட்சிப்பை அந்த கணமே பெறுங்கள்.. இரண்டாம் மரணத்தை தவிருங்கள்..
God bless you.

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003.
shalomjjj@gmail.com 
What's app 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA