சபைக்கு செய்தி...தேவ பக்தி..GODLINESS..
சபைக்கு செய்தி..
தேவ பக்தி..
GODLINESS..
What is godliness in simple words?
the quality or practice of conforming to the laws and wishes of God; devoutness and moral uprightness: To be wise is to live in godliness, reflecting the nature of the kingdom of God in the course of everyday life.
எளிய வார்த்தைகளில் தேவபக்தி என்றால் என்ன?
கடவுளின் சட்டங்கள் மற்றும் விருப்பங்களுக்கு இணங்குவதற்கான தரம் அல்லது நடைமுறை; பக்தி மற்றும் தார்மீக நேர்மை மற்றும் ஞானமாக இருப்பது என்பது தெய்வபக்தியில் வாழ்வது, அன்றாட வாழ்க்கையில் கடவுளின் ராஜ்யத்தின் இயல்பை பிரதிபலிக்கிறது.
தியான வசனம்..
உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ ?
யோபு 4. 6
1. தேவ பக்தியின் வேஷம்..
THE HYPOCRISY OF GODLINESS..
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
2 தீமோத்தேயு 3:5
2. தேவ பக்தியின் இரகசியம்..
THE MYSTERY OF GODLINESS..
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
1 தீமோத்தேயு 3:16
3. தேவ பக்திக்கேற்ற உபதேசம்..
THE DOCTRINE OF GODLINESS..
ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
1 தீமோத்தேயு 6:3
4. தேவ பக்திகேற்ற ஜீவியம்..
THE LIFE OF GODLINESS..
ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 2:10
5. தேவ பக்திகேற்ற முயற்சி..
THE PRACTICE OF GODLINESS..
சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
1 தீமோத்தேயு 4:7
6. தேவ பக்தியை தொடருதல்..
THE PURSUIT OF GODLINESS..
நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1 தீமோத்தேயு 6:11
7. THE PROFIT OF GODLINESS..
தேவபக்தியின் ஆதாயம்..
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோத்தேயு 6. 6
8. THE PRAYER OF GODLINESS..
தேவபக்தியின் ஜெபம்.
பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்
யோவான் 9.31
9. THE ETERNITY OF GODLINESS.
தேவ பக்தியின் நித்தியம்..
சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
1 தீமோத்தேயு 4. 8
10. THE PRIORITY OF GODLINESS..
தேவ பக்தியின் முன்னுரிமை.
அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
2 தீமோத்தேயு 3. 12
11. THE ADDITION OF GODLINESS.
தேவ பக்தியின் சேர்ப்பு.
தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
2 பேதுரு 1. 7
கடைசியாக சகோதரரே..
THE REDEMPTION OF GODLINESS..
தேவ பக்தியின் மீட்பு.
கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
2 பேதுரு 2. 9
A word of warning..
THE WORTHLESSNESS OF GODLINESS..
வீணான தேவ பக்தி..
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
யாக்கோபு 1.26
James 1:26
ESV
If anyone thinks he is religious and does not bridle his tongue but deceives his heart, this person’s religion is worthless.
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment