இன்றைய தியானம்* *இருதயமே ஆவிக்குரிய பெட்டகம்..*
*இருதயமே ஆவிக்குரிய பெட்டகம்..*
*இருதயத்தில் உற்சாகம்*
_கர்த்தருக்கென்று நம்மை கொடுப்போம்_ ..
செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் *இருதயத்தில் உற்சாகமடைந்த* ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.
யாத்திராகமம் 35.29
*இருதயத்தில் எழுப்புதல்..*
_கர்த்தருடைய வேலையை செய்வோம்._
பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் *இருதயத்தில் எழுப்புதலடைந்த* ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.
யாத்திராகமம் 36. 2
*இருதயத்தில் பேசுங்கள்..*
_பாவம் செய்யோம்.._
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள், உங்கள் படுக்கையிலே உங்கள் *இருதயத்தில் பேசிக்கொண்டு* அமர்ந்திருங்கள். (சேலா.)
சங்கீதம் 4. 4
*இருதயத்தில் தீர்மானம்..*
_தீட்டுப்படாதபடி நம்மை காப்போம்.._
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் *இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு* , தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
தானியேல் 1. 8
*இருதயத்தில் கர்த்தரைப் படுவோம்..*
_தெய்வ பயத்தோடு கீழ்ப்படிவோம்.._
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் *இருதயத்தில் கர்த்தரைப் பாடிக்* கீர்த்தனம்பண்ணி,
எபேசியர் 5.19
*இருதயத்தில் விருத்தசேதனம்*
_முழுவதும் பரிசுத்தமாவோம்.._
உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி *இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே* விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
ரோமர் 2. 29
*கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி*
shalomsteward1@gmail.com
What's app +91 9965050301
Comments
Post a Comment