_பெண்ணின் ( சபையாகிய மணவாட்டி ) உணர்வுகளை மதித்த நம் கர்த்தர்_
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
_பெண்ணின் ( சபையாகிய மணவாட்டி ) உணர்வுகளை மதித்த நம் கர்த்தர்_
1. _ஆகார்_ ..
சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார். அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
ஆதியாகமம் 16:8
2. _அன்னாள்_ ..
உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும். மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள்.
சிலநாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.
1 சாமுவேல் 1:26, 20
3. _சமாரிய ஸ்திரீ.._
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும்,நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
யோவான் 4:15
4. _கானானிய ஸ்திரீ_
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
மத்தேயு 15:28
5. _மரியாள்_ ..
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டு வந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள், அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
யோவான் 12:3, 7
6. _தாயாகிய மரியாள்_
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
யோவான் 19:26, 27
7. _நாயீன் ஊர் விதவை.._
கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
லூக்கா 7:13
8. _விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஸ்திரீ_ ..
இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத்தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
யோவான் 8:10
தேவன் (கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ) மேற்குறிப்பிட்ட எட்டு பெண்களின் உணர்வுகளை எவ்விதம் மதிக்கிறார். கனம் பண்ணுகிறார்.
மணவாட்டியாகிய சபையை குறித்து ஒப்பிட்டு பார்க்கும் போது கர்த்தருடைய கனத்தை, சபையை கர்த்தர் எவ்விதம் கனம் பண்ணுகிறார் என்பதை சிந்திக்கலாம்.
ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி..
பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, *ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை* உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
வெளிப்படுத்தின விசேஷம் 21:9
1. _சபையை சிருஷ்டித்தார்.._
_தம்முடைய சொந்த ரத்தத்தை சிந்தி விலைக்கிராயம் கொடுத்து உருவாக்கினார்_ ..
ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
அப்போஸ்தலர் 20:28
2. _சபையை போஷிக்கிறார்_ ..
தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே. கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
எபேசியர் 5:29
அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர். அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.
நெகேமியா 9:20
3. _சபையை பராமரிக்கிறார்_ ..
இப்படி நாற்பது வருஷகாலமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்துவந்தீர். அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.
நெகேமியா 9:21
தோலையையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர். உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.
யோபு 10:11-12
வெளி 2/3 அதிகாரங்கள் வாசிக்கவும்.
கர்த்தர் சபைக்கு தம்மை யார் என்று வெளிப்படுத்துகிறார்.
சபையின் நிறைவு, குறைவு, எப்படி நிவிர்த்தி செய்ய வேண்டும், மனந்திரும்பும் போது (ஜெயங்கொள்ளும் போது ) கிடைக்கும் ஆசீர்வாதங்கள்.
4. _சபைக்கு பாதுகாப்பு..._
பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளினிடத்துக்கு என்னை அனுப்பினார். உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
சகரியா 2:8
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
யோவான் 10:27-29
_தேவன் சபைக்கு தன்னை El Shaddai ஆக வெளிப்படுத்துகிறார்_ .
_The bosom of a nursing mother.._
_சபை என்பது..._
1. புறம்பான அலங்கரிப்பினால் கட்டப்படுவது அல்ல.
2.போதனைகளால் கட்டப்படுவது அல்ல.
3. வரங்களால் கட்டப்படுவது அல்ல.
4. பதவிகளால் கட்டப்படுவது அல்ல.
ஜீவனுள்ள கற்களால் கட்டப்படுகிறது.
சபைக்கு சாட்சி அவசியம்.
சபை என்பது நிஜம்.
உலகம் நிழல்.
*Someone says..*
*Church is a..*
1. Continuation of Christ
கிறிஸ்துவின் தொடர்ச்சி..
2. Enlargement of Christ
கிறிஸ்துவின் விரிவாக்கம்
3. Spreading of Christ
கிறிஸ்துவின் பரவலாக்கம்
4. Fullness of Christ
கிறிஸ்துவின் பூரணம்
5. Fullness of God
தேவனின் பூரணம்
evggnanavel@tutyzoom
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
The Christian Believers Assembly
Toovipuram Tuticorin 628 003
Comments
Post a Comment