கிறிஸ்தவ விசுவாசிகள் சபை ( 1958 ) தூத்துக்குடி.. தோற்றமும் காரணமான தேவ தாசர்களும்... THE CHRISTIAN BELIEVERS ASSEMBLY (1958 ) ORIGIN AND HONORABLE PERSONS
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம்
3 ம் தெரு தூத்துக்குடி 628003
Regd...R/TUTICORIN JOINT 1 / Book -4 / 39/2023
::::::::::::::::::::
சபையின் தன்னிறைவுக்கான தன்னிலை விளக்கம்
கிறிஸ்துவுக்குள் அன்பான தமிழ்நாடு சகோதர சபைகளின் பொறுப்பும் உத்தரவாதமும் உள்ள மூத்த சகோதரர்களுக்கும் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி யில் கூடி வரும் சகோதர சபை பொறுப்பான சகோதரர்களுக்கும்.. கிறிஸ்தவ விசுவாசிகள் சபையின் மிக மிக ஆரம்ப கால விசுவாசிகளும் தற்போது இந்த சபையின் பொறுப்புள்ள சகோதரர்களுமான
சகோ J. ஜெயசிங் மற்றும்
சகோ C. சேர்மராஜா அவர்களின் சபையின் தன்னிறைவுக்கான தன்னிலை விளக்கம்..
1958 ம் ஆண்டு காலம் சென்ற மூத்த சகோதரர் சகோ J. ஜாண் அவர்கள், விருதுநகர் ரோசல்பட்டி ரோடு விசுவாசிகள் சபையின் காலம் சென்ற சகோதரி சுவாமிதாஸ் அம்மாள், கிறிஸ்டி கோயில் பிள்ளை அம்மாள், ஊழியர் சகோ T. T. Brown அவர்கள் வழிநடத்துதலின்படி 1958 ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று ஜெபித்து தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டு
50 டூவிபுரம் 3 ம் தெரு இல்லத்தில் சபை கூடி வர கர்த்தர் கிருபை செய்தார். அன்றிலிருந்து 2002 ம் ஆண்டு வரை ஏறத்தாள 30 ஆண்டுகள் கர்த்தருடைய கிருபையால் CMEF ஊழியங்கள், YMEF ஊழியங்கள், ஸ்தானாபதி ஊழியங்கள், YMEF தொடர் ஊழியங்கள், ITI PCM ஊழியங்கள், சபை பொது முகாம்கள் நடத்தப்பட்டு சபை அநேக விசுவாசிகளால் நிரப்பப்பட்டு ஆசிர்வாதமாக செயல் பட்டது.
தமிழ்நாடு முழுவதும் சிறுவர் மற்றும் பெண்கள் ஊழியங்களில் ஈடுபட்டு சபைகளின் வளர்ச்சிக்காக காலம் சென்ற மூத்த சகோதரி மரகதம் ஜாண் அவர்கள் பாடுபட்டர்கள்.
2002 ம் ஆண்டு சபை விசுவாசிகள் பெருகிய போது, ஸ்டேட் பேங்க் காலனி மேற்கு பகுதியில் சகோதரர்கள் ஆலோசனை செய்து, இடம் வாங்கி அனைத்து சகோதரர்களின் பொருள் உதவியினால் SAI
( Stewards Associations in India ) அமைப்பில் பதிவு செய்து சபை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த சபை கட்டுமான பணி முதல் சகல அரசு உரிமம் மற்றும் சகல பொறுப்புகளும் உண்மையுடன் நிறைவேற்றினதில்
சகோ J. ஜெயசிங் சகோ C. சேர்மராஜா முக்கிய பங்கு வகித்தார்கள்.
2017 ம் ஆண்டு என்னுடைய குடும்பத்தில் என் மகனுக்கு ஏற்பட்ட எதிர்பாராத திருமண கஷ்டத்தினால் நானும் என் மனைவியும் சபையில் இருந்து நாள் குறிக்கப்படாமல் விலக்கி வைக்கப்பட்டோம்.
எனக்கு ஆதரவாக சத்தியத்தின்படி முடிவு எடுக்க சபைக்கு ஆலோசனை கூறிய சகோ C. சேர்மராஜா, சகோ0 ஜோசப் அவர்களையும் சபை பக்திவிருக்கேதுவான பொறுப்புகள் அளிக்காமல் தவிர்க்கப்பட்டார்கள்.
2017 முதல் 2020 வரை 3 வருடங்கள் நான் 45 வருடங்கள் ஆராதனை செய்த சபையை விட்டு வேத முகாந்திரம் இல்லாமல் திருச்செந்தூர், தாளமுத்து நகர், ஒட்ட நத்தம் சபைகளுக்கு குடும்பமாக சென்று எங்கள் பங்கை நிறைவேற்றினோம். கர்த்தர் சகலத்தையும் அறிவார்..
2020-21 covid 19 காலங்களில் அனைத்து சபைகளும் மூடப்பட்ட நிலையில் காலம் சென்ற மூத்த சகோ Y. ஜோன்ஸ்
குடும்பமாக எங்களுடன் தங்கி இருந்த போது நாங்கள் எங்கள் வீட்டில் வாரத்தின் முதல் நாள் அப்பம் பிட்டு கர்த்தரை ஆராதித்தோம்..
ஸ்டேட் பேங்க் காலனி சபையும் ஜூம் ல் ஆராதித்து வந்தார்கள். நாங்களும் எந்த பங்கும் பொறுப்பும் இல்லாமல் கலந்து கொண்டு தான் இருந்தோம்.
2021 ம் ஆண்டு என்னுடைய மகள் Eunice திருமணம் நடத்தி தர சபையில் உள்ள பொறுப்புள்ள சகோதரரை தொடர்பு கொண்ட போது, மகள் திருமணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் என்னிடம் கேட்டு விசாரித்து விட்டு தொலை பேசியில் வேறே பொறுப்புள்ள சகோதரரை கலந்து பேசாமல் தங்கள் சபையால் நடத்த முடியாது என தீர்க்கமாக கூறி விட்டார்.
அந்த வருடம் 2021 அக்டோபர் மாதம் 3 ம் தேதி covid 19 இரண்டாம் அலை நாட்களில் எங்கும் முக்கியமாக ஸ்டேட் பேங்க் காலனி சபை திறக்கப்படாத அந்த நாட்களில் தேவன் முன்குறித்த தேவ பிள்ளைகள் 7 பேர் அப்பம் பிட்டு ஆராதித்து சபை நடவடிக்கைகளை ஜெபத்தோடு ஆரம்பித்தோம்.
தேவ சித்தம் பூரணமாக விளங்குகிறதென்று
சபையார் கண்டு தேவனை துதித்தார்கள்.
சபையின் பொறுப்புள்ள சகோதரர்கள் ஏக இருதயமும் ஏக சிந்தையும் இருந்தபடியால் கர்த்தர் தொடர்ந்து ஆத்துமாக்களால் நிறைத்தார்.
ஆசீர்வதித்தார்.
4 முறை ஞானாஸ்நான கூட்டம் நடைபெற்றது.
6 சகோதரர்கள்
12 சகோதரிகள் ஞானாஸ்நானத்திற்கு கீழ்ப்படிந்து
சபை ஐக்கியத்தில் இணைந்து கர்த்தரை மகிமைப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் வாரத்தின் முதல் நாள் காலையில் கர்த்தருடைய பந்தியில் 16 சகோதரர்கள் 24 சகோதரிகள் பங்கு பெறுகிறார்கள்.
32 குடும்பங்கள் சபையின் ஐக்கியத்தில் இருக்கிறார்கள்..கர்த்தர் இந்த 5 வருடங்களாக சபையை வழிநடத்திக்கொண்டு வருகிறார். 2023 ம் ஆண்டு சபையை சகல சட்ட திட்டங்களுக்குட்பட்டு அரசு பதிவு செய்தோம்.
டூவிபுரம் பகுதியில் எங்கள் இல்லத்தில் நீண்ட காலங்களாக சபை கூடிவருகிறபடியால் அந்த பகுதி ஜனங்களும் சபை கூடிவருதலை அங்கீகரித்துள்ளார்கள்..
ஐக்கியத்திலும் பொறுப்பிலும் சகோதரர்கள் 15 பேர் இணைந்து செயல்படுகிறார்கள்..
தென் தமிழ்நாடு சகோதரிகள் கூடுகை, வாலிபர் கூடுகை இவைகளில் சபையார் பங்கு பெற்று ஐக்கியத்தையும் பங்குகளையும் அளிக்கிறார்கள்.
ஐ டி ஐ ஊழியங்களில் முழு ஒத்துழைப்பு கொடுத்து கர்த்தருடைய ஊழியத்தை ஐ டி ஐ மாணவர்கள் மத்தியில் செய்கிறார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு 2025 மார்ச் மாதம் 2 ம் தேதி அன்று தென் தமிழ்நாடு மூத்த சகோதரர்கள் ஆலோசனையின்படி ஸ்டேட் பாங்க் காலனி
திருச்சபையும், டூவிபுரம் திருச்சபையும் இணைந்து செயல்பட சமாதான கூடுகை ஸ்டேட் பாங்க் காலனி சபையில் நடைபெற்றது.
டூவிபுரத்தில் சபை மீண்டும் தோன்ற உண்மையான காரணத்தை நாங்கள் கூறினோம். பலமுறை நான் நிபந்தனை இன்றி மிக தாழ்மையில் ஸ்டேட் பேங்க் காலனி சபையின் மூத்த சகோதரரிடம் மன்னிப்பு கோரினேன்.
இனி இந்த விசயத்துக்கு மன்னிப்பு கேட்க அவசியமில்லை என கூடியிருக்கும் தேவ பிள்ளைகள் கருத்து தெரிவிக்கும்படி மன்னிப்பு கோரினேன்.இவை எல்லாவற்றையும் கேட்டு மூத்த சகோதரர் வைக்கும் ஒரே தீர்மானம்
“ டூவிபுரம் திருச்சபை மூடப்பட வேண்டும். அனைத்து குடும்பங்களும் ஸ்டேட் பேங்க் காலனி சபைக்கு வர வேண்டும்” என்பதே.. மாத்திரம் அல்ல.. இந்த தீர்மானத்தில் ஒரு தெளிவான வேத ஒழுங்கும், அவர்கள் நிபந்தனையில் ஒரு ஆத்தும பாரமும் இல்லை என்பதும் தெளிவானது.
வேத ஒழுங்கு இல்லாமல் சுய காரியங்கள் நிறைந்திருந்ததை அவர்கள் சொன்ன நிபந்தனையில் எந்த தளர்வும் பண்ணாததில் விளங்கினது..
இந்த நிபந்தனையை தமிழ்நாட்டில் அநேக முக்கிய சகோதர சபைகளின் மூத்த சகோதரர் அநேகரிடம் தெரிவித்த போது, இது வரை இது போன்ற நிபந்தனை எந்த சபைகளிலும் வைக்கப்படவில்லை என்றும், இது வேதத்துக்கு புறம்பானது என்றும், இந்த நிபந்தனை முழுமையாக மாம்சீக நிபந்தனை என்றும் குறிப்பிடுகிறார்கள்..
மீண்டும் நாங்கள் ஆலோசித்து உங்களை அழைக்கிறோம் என முடிவு செய்யப்பட்டு கூட்டம் ஜெபத்துடன் நிறைவடைந்தது..
இந்த நாள் வரை எங்களை அழைக்கவும் இல்லை. எந்த தொடர்பும் செய்யவும் இல்லை..
இந்த நிலையில் எங்கள் சபையின் சகோதரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சகோதரர்கள் ஒருவர் கூட இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ளவில்லை..
வேத அடிப்படை இந்த நிபந்தனையில் இல்லை என்பதையும் தெளிவாக கூறினார்கள்..
புதிய விசுவாசிகள் அநேகர் சத்தியத்தில் ஸ்திரப்படுகிறார்கள்.. தூத்துக்குடி யில் அநேக பகுதிகளில் ஊழியங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில்....
மூத்த சகோதரர்கள் தயவு கூர்ந்து இந்த திருச்சபை பணி தொடரவும் காலம் சென்ற மூத்த சகோதரர்கள் விருப்பத்தின்படி இன்னும் அநேக திருச்சபைகள் தூத்துக்குடி பகுதியில் தோன்ற தங்களுடைய இந்த அங்கீகாரம் ஒரு அச்சாரமாக விளங்கும் என்று உறுதியாய் ஆராய்ந்து இந்த தன்னிலை விளக்கத்தை சமர்ப்பிக்கிறோம்.
கிறிஸ்துவின் பணியில்
தங்கள் உண்மையுள்ள..
சகோதரர்கள்
1. சகோ சேர்மராஜா
2. சகோ ஜெயசிங்
3. சகோ மாணிக்க வாசகம்
4. சகோ ஜெயக்குமார்
5. சகோ மாடசாமி
6. சகோ C ராஜா
7. சகோ G ராமசாமி
8. சகோ ஞானமுத்து
9. சகோ ஜெகன்
10. சகோ ஹரி பாலகிஷ்ணன்
11. சகோ பிரிட்டோ
12. சகோ E இம்மானுவேல்
13. சகோ பால்சன்
14. சகோ ஸ்டீபன் ஜெயபால்
15. சகோ ராஜாமணி
16. சகோ சதீஸ்
17. Yth ஸ்டீபன்
18. Yth அஸ்வின்
:::::::::::::::::
தன்னிலை விளக்கம் பெறும் சகோதர சபைகளின் பொறுப்பாளர்கள்.
1. சகோ D.R சைமன்
2. சகோ T பிரபாகர்
3. சகோ B ஜெப செல்வன்
4. சகோ ஜூடா சைமன்
5. சகோ முருகையா
6. சகோ எலியூத் சைமன்
7. சகோ C ராமசந்திரன்
8. சகோ C.G பக்தசிங்
9. சகோ T ராஜையா
Dated.... 9 th June 2025
submitted ....May 2026
Place: TUTICORIN
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
♥️CORONA CHANGES MY LIFE
♥️1. ZOOM MEETING ல பாடல் பாட தடை விதிக்கப்பட்டது..2021
கீதங்களும் கீர்த்தனைகளும் youtube சேனல் ஆரம்பம்..2021
♥️2. சபையில் செய்தி கொடுக்க தடை விதிக்கப்பட்டது..2020
Shalom Steward Thoughts ஆரம்பம் 2020
♥️3. 1958 ல் ஆரம்பிக்கப்பட்டு 1977 ல் நான் ஞானஸ்னானம் எடுத்த சபைக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது..
TCBA 2021 ல் மறுபடி பிறந்தது..
Comments
Post a Comment