மனுஷ குமாரன் மகிமைப்படும் படியான வேளை..இன்றைய ஆராதனை தியானம்..THE HOUR IS COME THAT THE SON OF MAN SHOULD BE GLORIFIED..
மனுஷ குமாரன் மகிமைப்படும் படியான வேளை..
இன்றைய ஆராதனை தியானம்
ஆண்டவர் தம்முடைய மரணத்தை மறைமுகமாகவே கூறுகிறார்..
கவனியுங்கள்..
1. மனுஷ குமாரன் உயர்த்தபட வேண்டும்.. யோவான் 3.14, 8.28, 12.32,33
2. நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது.. யோவான் 13.33,33
3. பிதா எனக்கு கொடுத்த பாத்திரம்.. யோவான் 18.11
4. நான் பெறும் ஸ்நானம்.. யோவான் 20.22
5. மனுஷ குமாரன் மகிமைப்படும் படியான வேளை.. யோவான் 12.23
அனைத்து குறிப்புகளும் யோவான் சுவிசேஷம் என்பது சிறப்பு..
மனுஷ குமாரன் மகிமைப்படும்படியான வேளை என்பது இயேசு கிறிஸ்துவின் மரணம் ஆகும்..
தேவன் களிகூர்ந்து மகிழ்ந்த தருணம் தம்முடைய ஒரே பேறான குமாரனின் மரணமே..
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
அப்போஸ்தலர் 3:13..
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதை அல்லது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் நிகழ கூடாது என்பது சாத்தானுடைய எண்ணம்..தந்திரம்...
1. இயேசு கிறிஸ்து பிறக்கும் போது..ஏரோது
அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
மத்தேயு 2:16
2. இயேசு கிறிஸ்து தன் மரணத்தை சீஷர்களிடம் தெரிவிக்கும் போது.. பேதுரு
அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.
மத்தேயு 16:21
அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
மத்தேயு 16:22
அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய், தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
மத்தேயு 16:23
3. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் போது..வழியாய் நடந்து போகிறவர்கள்.. மற்றும் வேதபாரகர்
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:
மத்தேயு 27:39
தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள், நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
மத்தேயு 27:40
அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம் பண்ணி:
மத்தேயு 27:41
மற்றவர்களை ரட்சித்தான், தன்னைக் தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை, இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
மத்தேயு 27:42
ஆனால் சிலுவை மரணம் குறித்த வேளையில் நடைபெற்றது..
மகிமைப்படும்படியான வேளை .இன்னும் வரவில்லை..
அப்பொழுது அவரைப் பிடிக்கவகைதேடினார்கள், ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
யோவான் 7.30
மகிமைப்படும்படியான வேளை குமாரனுடைய ஒரே நோக்கம்
இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ, ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
யோவான் 12.27
மகிமைப்படும்படியான வேளை ஜனங்கள் மேல் செலுத்தும் அன்பு.
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
யோவான் 13.1
மகிமைப்படும்படியான வேளை வந்தது..மனுமக்களுக்கு நித்திய ஜீவனை தந்தருள..
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
யோவான் 17.2
கிறிஸ்துவின் மரணத்தில் TIME அதாவது வேளை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது..
தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் காலம், வேளை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது..
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
யாத்திராகமம் 12:40
நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
யாத்திராகமம் 12:41
Time is very important in God’s salvation plan..
தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
1 பேதுரு 1.11
கிறிஸ்துவின் மரணத்தின் காலம்..
அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
ரோமர் 5. 6
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
கலாத்தியர் 4.5
தானியேலின் 70 வாரங்கள்..
1.மீறுதலைத் தவிர்க்கிறதற்கும்,
2. பாவங்களைத் தொலைக்கிறதற்கும்,
3. அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும்,
4. நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
தானியேல் 9:24
இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும். அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும். ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்
தானியேல் 9:25
அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார். ஆனாலும் தமக்காக அல்ல. நகரத்தையும் பரிசுத்தஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள். அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும். முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.
தானியேல் 9:26
கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.
2 நாளாகமம் 36:21
தேவன் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறார்..
தானியேல் 9.24-26 மற்றும் 2 நாளா 36.21 compare பண்ணி படியுங்கள்..
சிலுவை மரணத்தில் மணித்துளிகள்.. சில நிகழ்வுகள்..
1. பூமியெங்கும் அந்தகாரம்..
ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
மத்தேயு 27:45
2. தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை கைவிடுகிறார்..
ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:46
இன்னும் கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு நிழலாகிய பஸ்கா பலியில் காலமும் வேளையும்..
கர்த்தருடைய பஸ்கா பலியிட வேண்டிய மற்றும் புசிக்க வேண்டிய பிரமாணங்கள் 3.
1. பலி மிருகம் தெரிந்து கொள்ளும் முறை யாத் 12.3-5
2. பலி மிருகம் அடிக்கப்படும் காலம் யாத் 12.6
3. பஸ்கா புசிக்க வேண்டிய விதம் யாத் 12.7-11
பஸ்காவாகிய ஆடு அடிக்கப்படும் காலம் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது..
யூதர்கள் வருஷத்தின் முதல் மாதம்
நிசான் மாதம் 14 ம் தேதி..
International Standard Bible Encyclopedia – Nisan
The first month of the Jewish year in which occurred the Passover and which corresponds to April. The month is the same as Abib, which occurs in the Pentateuch. Nisan occurs in Nehemiah 2:1 and Esther 3:7. It denotes “the month of flowers.”
இயேசு கிறிஸ்துவின் மரணம் யூதர்கள் வருடத்தின் முதல் மாதம் நிசான் மாதம் 14 ம் நாள்..ஆனால் பஸ்கா அடிக்கப்படும் குறித்த நேரத்திற்கு ஒரு சில மணி நேரம் முன்பு மரித்தார்...
அதாவது கடைசி பஸ்கா கர்த்தராகிய கிறிஸ்து..
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.
1 கொரிந்தியர் 5:7
Jesus therefore died on Friday, Nissan 14 , AD 33 at about 3 p.m., a few hours before the beginning of Passover day and the Sabbath. This is the date in the Julian calendar, which had been introduced in 45 BC, and follows the convention that historical dates adhere to the calendar in use at the time.
அவருடைய உயிர்தெழுதலும் குறித்த வேளையில் நடந்தது..
ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
மத்தேயு 28:1
நாம் இந்த ஆராதனை சிந்தையில் நடைமுறைக்கு பயிற்சி செய்ய வேண்டியது?
ஒவ்வொரு ஆராதனையும் அதாவது மேஜை கிட்டி சேரும் ஒவ்வொரு தருணமும் நம்மை பரிசுத்தம் மேல் பரிசுத்தம் அடைய தூண்டுகிறது..
உங்கள் சபை ஆராதனையில் குறித்த வேளையில் கர்த்தர் அமர்ந்திருக்கிறார்..
பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.
லூக்கா 22:7
அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
லூக்கா 22:13
வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
லூக்கா 22:14
நாம் தாமதிக்க வேண்டாம்..
தெய்வ கிருபைக்குறிய நியமத்தில் வேளை, காலம் மிக கவனத்திற்கு உரியது..
சகோதர சபை ஆராதனை 3 நிகழ்வுகள் அடங்கியது..இது வேதத்தின் சத்தியம்..
1. கூடி வருதல் meeting together..
2. அப்பம் பிட்குதல் breaking of bread
3. ஆராதனை worship..
அநேக சபைகளில் எதாவது ஒன்று மட்டுமே நடைபெறும்..
உங்கள் கூடிவருதலின் வேளை, நோக்கம், ஐக்கியம் அவசியம்..
1. உங்கள் கூடிவருதல் தீமைக்கேதுவாக இருக்கிறதே? நன்மைக்கேதுவாக இருக்க வேண்டும் 1 கொரி 11.17
2. நீங்கள் ஆக்கினைக்கேதுவாக கூடி வராதாபடிக்கு..1 கொரி 11.34
நம்மை நாமே நிதானிப்போம்..11.31
தன்னை தானே சோதித்தறிவோம் 11.28
கிறிஸ்துவை நினைவு கூறுவோம்..
shalomjjj@gmail.com
Whatsapp 91 9965050301
Comments
Post a Comment